மணிமாலா

மணிமாலா
பிறப்புமணிமாலா
19 ஆகத்து 1944 (1944-08-19) (அகவை 80)
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1962-1992
வாழ்க்கைத்
துணை
வெண்ணிற ஆடை மூர்த்தி
(தி.1966)
பிள்ளைகள்மனோ (பி.1972)

மணிமாலா (Manimala) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி மற்றும் துணை வேடங்களில் நடித்தவர். அன்புக்கரங்கள்வல்லவனுக்கு வல்லவன்மோட்டார் சுந்தரம் பிள்ளைபெரிய இடத்துப் பெண் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார். இவர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவியாவார்.[1]

முன் வாழ்கை

மணிமாலா ஆந்திரப் பிரதேசத்தின், காக்கிநாடாவில் பிறந்தார்.[2] இவரது தந்தை தொடருந்து துறையில் பணியாற்றியதால் பணியிட மாற்றத்தால் இவரின் ஐந்து வயதில் சென்னை புனித தோமையார் மலை பகுதியில் குடும்பம் குடியேறியது. பட் சாலையில் உள்ள புனித டோமினிக் பள்ளியில் மெட்ரிக் பள்ளிப் படிப்பை முடித்தார். பெற்றோரின் விருப்பப்படி பரதநாட்டியம் கற்றார். தன் சகோதரர்கள் ரமேஸ், வெங்கடேஸ்வருடன் இணைந்து நடன நிகழ்ச்சிகளை நடத்திவந்தார். இலண்டனில் நடந்த காந்தியடிகள் நூற்றாண்டு விழாவில் நடனமாடும் வாய்ப்பைப் பெற்றார்.[2]

தொழில் வாழ்க்கை

இவரின் ஆங்கிலப் பேச்சுத் திறமையைக் கண்ட சோ ஆங்கில நடகங்களில் நடிக்க மேடையேற்றினார்.[2] பிறகு மௌலி அண்ட் பிரண்ட்ஸ் ஸ்டேஜ் குரூப்பின் ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது, அவன், அவள், அது, அந்தப்புரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தார். டி. ஆர். ராமண்ணா இவரை பெரிய இடத்துப் பெண் (1963) படத்தின் வழியாக திரைப்பட நடிகையாக்கினார். அப்படத்தில் எம்.ஜி. ஆரின் முறைப் பெண்ணாக நடித்து கட்டோடு குழலாட ஆட என்ற பாடலில் ஆடி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். அடுத்த ஆண்டு எம்ஜி.ஆருடன் பணக்கார குடும்பம் படத்தில் அவரின் தங்கையாக நடித்தார். அப்படத்தில் ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே பாடலில் அண்ணன் எம்ஜியாரோடு மிதிவண்டியில் படியபடி ஊரை வலம் வருவார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அன்புக்கரங்கள் படத்தில் சிவாஜி கணேசனின் தங்கையாக நடித்தார். மார்டன் திரேட்டர்சின் 100 ஆது படமான வல்லவனுக்கு வல்லவன் படத்தில் நாயகியாக ஆனார். அதன் பிறகு தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் படல படங்களில் நடித்தார். சூர்ய தேவ்சா என்ற இந்தி படத்திலும் நடித்தார். கர்ணன் படத்தின் இந்திப் பதிப்பில் சாவித்திரிக்கு பின்னணிக் குரல் கொடுத்தார்.[2]

பகழ்பெற்ற கதாநாயகியாக இருந்த நேரத்தில் நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியை காதலித்து மணந்துகொண்டு சிலகாலம் நடிப்பிலிருந்து விலகி இருந்தார். பின்னர் மீண்டும் நடிக்கத் துவங்கினார். கே. பாலச்சந்தர் தன் சிந்து பைரவி படத்தில் சுகாசினியின் அம்மாவாக மீள் அறிமுகம் செய்தார். அப்படத்தின் தொடர்ச்சியாக எடுத்த சஹானா என்ற தொலைக்காட்சித் தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கவைத்தார்.[2]

நடித்த திரைப்படங்கள்

தமிழ்

  1. போலீஸ்காரன் மகள் (1962)
  2. தெய்வத்தின் தெய்வம் (1962)
  3. பெரிய இடத்துப் பெண் (1963)...தில்லையம்மாள்
  4. பணக்கார குடும்பம் (1964)...சிவகாமி
  5. அன்புக்கரங்கள் (1965)...ஆனந்தி
  6. காக்கும் கரங்கள் (1965)
  7. ஆனந்தி (1965)...சிவகாமி
  8. தாழம்பூ (1965)...பாக்யம்
  9. வல்லவனுக்கு வல்லவன் (1965)...கீதா
  10. பூஜைக்கு வந்த மலர் (1965)...மாலா
  11. மோட்டார் சுந்தரம் பிள்ளை (1966)
  12. எதிரிகள் ஜாக்கிரதை (1967)...இலட்சுமி
  13. பால்மனம் (1967)
  14. கற்பூரம் (1967)
  15. நிலவே நீ சாட்சி (1970)
  16. கல்யாண ஊர்வலம் (1970)
  17. பத்தாம் பசலி (1970)
  18. ஜஸ்டிஸ் விஸ்வநாதன் (1971)...காஞ்சனா
  19. மாலை சூடவா (1976)
  20. அன்னக்கிளி (1976)
  21. உனக்காக நான் (1976)
  22. கவரிமான் (1979)
  23. தீராத விளையாட்டுப் பிள்ளை (1982)
  24. சமயபுரத்து சாட்சி (1983)
  25. அன்புள்ள ரஜினிகாந்த் (1984)
  26. சிந்துபைரவி (1985)...சிந்துவின் தாய்
  27. நல்லவன் (1988)...குரு மற்றும் ராஜாவின் தாய்
  28. ரிக்சா மாமா (1992)...

மேற்கோள்கள்

  1. "நடிகை மணிமாலாவை மணந்தார் வெண்ணிற ஆடை மூர்த்தி". மாலைமலர் (சனவரி 24, 2017)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 அன்றைய நாயகிகள், மணிமாலா, அந்தக் காலத்தின் சென்னைப் பெண், கட்டுரை ஆர். சி. ஜெயந்தன், இந்து தமிழ் திசை சித்திரை மலர் 2021 பக்கம்: 196-197

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya