விக்கிப்பீடியா பேச்சு:குறுந்தட்டு திட்டம்திட்டத்தின் உரிமைஅருண், ஆலமரத்தடி வேண்டுகோளை ஏற்று திட்டத்தை இங்கு ஒருங்கிணைப்பதற்கு நன்றி. நீங்கள் ஏற்கனவே திட்டத்தனை தனி வலைத்தளத்தில் ஒருங்கிணைக்க முயன்றதால் ஒரு ஐயம்: இத்திட்டம் தமிழ் விக்கிப்பீடியரின் கூட்டுத்திட்டமாக அறியப்படுமா? அல்லது, உங்கள் பெயரால் / விக்கிப்பீடியா அல்லாத ஒரு நிறுவனத்தின் பெயரால் அறியப்படுமா? கொள்கை அளவில் தனியொருவர் பெயர் / வெளி நிறுவனங்கள் இதில் ஈடுபடுவதில் தவறு இல்லை. ஆனால், திட்டத்தில் ஈடுபடும் முன் இதனைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நன்றி--இரவி 20:24, 28 அக்டோபர் 2010 (UTC)
தவறாக எடுத்துக் கொள்ளாமல் தெளிவுபடுத்தியதற்கு நன்றி, அருண். நீங்கள் விக்கிக்குப் புதியவராக இருந்ததும் திட்டத்தை வேறு தளத்தில் தொடங்கியதும் இக்கேள்விகளை எழுப்பின. தமிழ் விக்கி இறுவட்டு ஒன்றை உருவாக்குவது நெடுநாளாக நாம் செய்ய விரும்பும் ஒரு திட்டம். இப்போது கூடுதல் உந்துதல் கிடைத்துள்ளது. பொதுவாக சில குறிப்புகள்:
திட்டத்தின் பணிகள்
வேறு ஏதேனும் நான் விட்டு இருந்தால் சேர்க்கவும். ஸ்ரீகாந்த் 18:19, 29 அக்டோபர் 2010 (UTC)
வார்ப்புரு சேர்க்கலாமா?பேச்சு:இந்தியா பக்கத்தில் உள்ளதுபோன்ற வார்ப்புருவை கட்டுரைகளில் சேர்க்கலாமா? {{V0.1}} இதனை இணைக்கவேண்டும். பதிப்பு 1.0 என்று மாற்றலாமா? சரி என்றால் தானியங்கியை ஓட்டி விடுகிறேன். -- மாகிர் 07:55, 6 மார்ச் 2011 (UTC) Pending tasksAs discussed in IRC chat. Very rough draft. To be refined. CD Creation Tasks
Other Tasks
ஆலமரத்தடி உரையாடல்வணக்கம். மீண்டும் விக்கிப்பீடியா இறுவட்டுத் திட்டத்தை முடுக்கி விட்டு 2,3 மாதங்களில் விரைந்து முடிக்கலாம் என்று நினைக்கிறோம். 500 கட்டுரைகள் தேர்ந்தெடுப்பது, சீராக்குவதற்கு ஆகும் நேரம் நமது முனைப்பைக் குறைக்கக்கூடும் என்பதால், தற்போது இருக்கும் கட்டுரைகளையே சீராக்கி, முதற்கட்டச் சோதனை இறுவட்டை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன். செயல்படக்கூடிய ஒரு சோதனை வட்டை உருவாக்கி விட்டால், தொடர்ந்து கூடுதல் கட்டுரைகளை முனைப்புடன் சேர்க்கலாம். இதன் மூலம், கட்டுரைச் சேர்ப்புக்காக மற்ற பணிகள் காத்திருக்குத் தேவை இல்லை. எனவே, கட்டுரைகளைச் சீராக்குவது, இறுவட்டு உருவாக்கத்துக்கான நிரலாக்கப் பணிகள், இறுவட்டு அட்டைப் பட வடிவமைப்பு, வெளியீட்டுக்கான பணிகள் ஆகியவற்றைத் தொடகத்தில் இருந்தே இணையாகச் செய்து பணியை விரைந்து முடிக்கலாம். லாசிக்விக்கி, ஏற்கனவே ஒரு சோதனை வடிவத்தை உருவாக்கி உள்ளார். விரைவில் இது குறித்த கூடுதல் விவரங்களை அளிப்பார்.--இரவி 06:13, 1 சூலை 2011 (UTC) தற்போதைய கட்டுரைத் தேர்வு, துறைத் தேர்வில் குறைப்பாடுகள் உள்ளன. பல்துறைத் தகவல்கள் தொகுக்கப்பட வேண்டும். தற்போது இலங்கை மலேசியா பற்றியோ, சமயம் பற்றியோ, கலைகள் பற்றிய எந்தக் கட்டுரைகளும் இருக்கும் தெரிவுப் பட்டியலில் இல்லை. இம்முறை தொடங்கினால் முழு ஓட்டமும் ஓட வேண்டும். இது பல முறை வெளளோட்டம் ஓடப்பட்ட திட்டம் :0 --Natkeeran 06:32, 1 சூலை 2011 (UTC) ![]() ![]() நற்கீரன், 1.0 Is the Loneliest Number என்னை மிகவும் கவர்ந்த கட்டுரைகளில் ஒன்று. 500 முழுமையான கட்டுரைகள் என்று காத்திருந்ததும், அதைச் செயற்படுத்துவதற்கான உழைப்பின் அயர்ச்சியுமே இத்திட்டத்தைத் தள்ளிப்போட வைத்தன. எனவே, 100 கட்டுரைகள் ஆனாலும் சரி, ஒரு இறுவட்டு வெளியிடுவதற்கான அனைத்துப் பின்புலப் பணிகளைச் செய்தோம் ஆனால், அதனைக் கண்டு இன்னும் உற்சாகமடைந்து மேலும் மேலும் கட்டுரைகளைச் சேர்க்கலாம். இறுவட்டாக அடிக்கடி வெளியிட முடியாது. ஆனால், பதிவிறக்கக்கூடிய iso கோப்புகளாக அவ்வப்போது நாம் இற்றைப்படுத்தி வெளியிட முடியும். பின்வருமாறு கால வரையறை செய்யலாம்:
மலையாள விக்கியர் ஒரே மாதத்துக்குள் விக்கி மூல இறுவட்டை வெளியிட்டுள்ளார்கள். அதற்கான புது நிரல் எழுதியது உட்பட ! இந்த முறை முழு ஓட்டம் விடுவோம். இல்லாவிட்டால், என்னை ஓட ஓட விரட்டலாம் :) --இரவி 08:57, 1 சூலை 2011 (UTC)
நல்ல முயற்சி! முதற்பக்கக் கட்டுரைகளும், பகுப்பு:விக்கிப்பீடியா தரம் கணிக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்னும் பகுப்பில் உள்ளவற்றை மீள்பார்வை இடலாம். சூலை 7 உக்குள் என்னால் எவ்வளவு பங்களிக்க இயலும் என்று தெரியாது (மிகப்பல கெடுக்கள் (deadlines) உள்ளன). எனினும், இயன்றவாறு முயல்கிறேன்.--செல்வா 12:55, 1 சூலை 2011 (UTC)
விக்கிமீடியா அலுவலர் தொடர்புவிக்கிப்பீடியா_பேச்சு:மாணவர்களுக்கான_விக்கிப்பீடியா_கட்டுரைகள்#விக்கிமீடியா அலுவல் தொடர்பு. -- சுந்தர் \பேச்சு 12:16, 16 சூலை 2011 (UTC) எனது பரீட்சார்த்த முயற்ச்சிநானும் இணையத்திலிருந்து குறுந்தட்டு திட்டத்தினுடைய மென்பொருளை பெற்று பரீட்சித்துப் பார்த்தேன் நன்றாகவே இருந்தது --மொஹமட் சமீர் 16:17, 20 ஆகத்து 2011 (UTC) உரையைத் திருத்தும்போது இத்திட்டத்துக் கட்டுரைகளுக்கென தேவைகள் உள்ளனவா?அண்மையில் சோளப்பொரி கட்டுரையை பார்வதிசிரீ திருத்திச் செம்மைப் படுத்தியிருந்தார். அத்துடன், கட்டுரையில் இருந்த சில சிகப்பு இணைப்புப் பகுப்புகளை (இன்னும் உருவாக்காத பகுப்புகளை) நீக்கி இருந்தார். குறுவட்டுத் திட்டத்துக்காக இவ்வாறு செய்ய வேண்டுமா என அறிய விரும்புகிறேன். இப்போதுதான் இத்திட்டத்துக்கான உரைதிருத்தப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளேன். அதனால் இதைப்பற்றிய உரையாடலைக் கவனிக்காமல் இருந்திருக்கலாம். -- சுந்தர் \பேச்சு 17:31, 17 சனவரி 2012 (UTC) தற்போதைய நிலை என்ன?குறுந்தட்டு திட்டம் என்னானது? ஆலமரத்தடியில் இலுத்துக்கொண்டு போவதாக இரவி கூறுகிறாறே? என்னாயிற்று?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:47, 15 ஆகத்து 2012 (UTC) |
Portal di Ensiklopedia Dunia