விக்கிப்பீடியா பேச்சு:சொல் தேர்வுசொல் தேர்வு தொடர்பான பிற உரையாடல்கள்: பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்
அண்மைய காலங்களில் விஜயராகவன் பல பேச்சுப் பக்கங்களிலும் விக்கி கட்டுரைகளில் சொற் தெரிவு குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். ஜெயபால் போன்றோரும் கருத்து தெரிவித்து உள்ளனர். பல இடங்களில் பயனர் கருத்துக்கள் ஒத்தும் மாறியும் இருந்தாலும், சில அடிப்படை விசயங்கள் திரும்பத் திரும்ப உரையாடி நேரம், உழைப்பை வீணாக்குகிறோமோ என்று தோன்றியதால் ஓர் ஒருங்கிணைந்த உரையாடலுக்கு இங்கு வழி வகுக்கலாம் என்று நினைக்கிறேன். அண்மைய சொற்தெரிவு உரையாடல்கள் அனைத்தும் இங்கு உள்ளன. அவற்றை பார்ப்பது இங்கு கருத்து தெரிவிக்க உதவும். சில அடிப்படை தலைப்புகளை கீழே தருகிறேன். அவரவர் கருத்துக்களை இங்கு குவித்து விட்டால், பின்னர் திரும்பத் திரும்ப உரையாடிக் கொண்டிருக்க வேண்டாம்.:--Ravidreams 14:00, 16 பெப்ரவரி 2007 (UTC) கூகுள் தமிழ் எதிர் விக்கி தமிழ்கூகுள் தேடலில் ஒரு தமிழ்ச் சொல் இருக்கிறது என்றால் அது சரியான சொல் என்று பொருள் இல்லை. அப்படியும் சிலர் எழுதுகிறார்கள் என்று பொருள். இவை தகுந்த வழிமாற்றுப் பக்கங்களை உருவாக்க உதவும். அவ்வளவே. ஆனால், எது சரியான எழுத்துக்கூட்டல், எது நல்ல தமிழ்ச் சொல் என்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும். கூகுளில் குப்பை என்று தேடினால் கூடத் தான் இருக்கும். அதற்காக நம் வீட்டை குப்பையால் நிரப்பிக் கொள்வது கிடையாது. cocaine, marijuana என்று தேடினாலும் கிடைக்கும். அதற்காக அரசுகள் அவற்றை சட்டப்பூர்வமாக்கி விடாது. வீட்டுக்கு, நாட்டுக்கு எது நல்லது என்று நாம் தேர்ந்து செய்வது போல் தமிழுக்கு எது நல்லது என்று தேர்ந்து செய்ய வேண்டும். விக்கிபீடியா தனி ஒரு கட்டுரையாக, அது மக்களுக்குப் புரிந்தால் போதும் என்று கிட்டப்பார்வையில் பார்க்காமல் அது சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தின் வல்லமையை அறிந்து தொலைநோக்குடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும். வெறும் விசயங்களை விளக்குவதற்குத் தான் விக்கிபீடியா என்றால் அதை நான் ஆங்கிலத்திலேயே ஆங்கில விக்கிபீடியாவிலேயே செய்து விட்டுப் போய்விடுவேனே? எதற்கு தமிழில் செய்ய வேண்டும்?--Ravidreams 14:00, 16 பெப்ரவரி 2007 (UTC) நான் (தற்போது) அவ்வப்போது மட்டுமே வந்து செல்வதால் சில அண்மைய உரையாடல்களைப் பார்க்காதிருந்திருக்கலாம். தவறிருந்தால் பொருட்படுத்தவேண்டாம். கூகிள் ஒரு தேடுபொறி மட்டுமே. அதன் பின்னால் இயங்கும் நிரல்துண்டுகள் அந்த நோக்கத்தில் எழுதப்பட்டவையே. அதனால் அவை ஒரு சொல் ஒரு பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தால் தாமாகவே தமது சொற்பட்டியலில் சேர்த்துவிடுவதில்லை. அந்த சொல்லின் ஒருவகையான "இன்றியமையாமை" அல்லது "பொருண்மை" இதில் ஒரு பெரும்பங்கு வகிக்கிறது. இத்தகைய "பொருண்மையின்" அளவையான டி.எஃவ்.ஐ.டி.எஃவ் குறிப்பாக மிகுதியாகப் பயன்படும் சொற்களுக்கு எதிராக அமைய வாய்ப்புள்ளது. (இது என் தொழில் மற்றும் கல்வி அடிப்படையில் நான் பல ஆண்டுகள் அலசிய ஒன்று.) தவிர, இணையத்தில் புழங்கும் மொழி என்பது பொது வழக்கை ஒத்து அமைந்திருக்க வேண்டுமென்பதில்லை. மேலும், தமிழிலுள்ள இருவடிவத் தன்மையின் (diglossia) விளைவாக கலைக்களஞ்சியம் போன்ற ஊடகங்களில் பயன்படுத்தப்படும் மொழிநடை வெகுவாக மாறுபடுகிறது. இதைத்தவிர, எது பரவலாகப் பயன்படுத்தப்படும் சொல் என்பது அவரவர் சுற்றத்தைப் பொருத்து மாறுபடுகிறது. எடுத்துக்காட்டாக சென்னையில் ஆங்கிலக் கலப்பு கூடுதலாகவும், கடலோரப் பகுதிகளில் போர்த்துகீசக் கலப்பு மிகுதியாகவும் இருக்கலாம். இவை தவிர பல்வேறு வட்டார வழக்குகள் புலம்பெயர்ந்தோர் மொழி வழக்கு என எண்ணற்ற வழக்குகள் உள்ளன. வேடிக்கையாக ஒருமுறை, என் தாத்தா, பாட்டி, பெரியப்பா, அப்பா ஆகியோர் பேசிக் கொண்டிருந்ததை பதிவு செய்து மீண்டும் கேட்டோம். வியக்கத்தக்க அளவில் அவர்கள் பேச்சில் தூய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன! இதில் எனது அப்பாவும் பெரியப்பாவும் ஆங்கிலம் கற்று பேரூர்களில் வாழ்பவர்கள். தாத்தாவும் பாட்டியும் ஆங்கிலேயர் காலத்தில் நடுநிலைப் பள்ளி வரை பயின்று ஓரளவு ஆங்கிலப் புலமை பெற்றவர்கள். இருந்தும் அவர்கள் இயல்பாகப் பேசும்பொழுது வடமொழி ஆங்கிலமற்ற தமிழ் அதுவும் செயற்கையாக அல்லாமல் இருந்தது. எடுத்துக்காட்டாக ஏனம் போன சொற்கள். இது தனிநபர் வாழ்க்கையில் ஏற்பட்ட உரையாடலாதலால் நான் அழித்து விட்டேன். இந்நிலையில் விக்கிபீடியாவைல் வட்டாரக் சார்பின்றி பிறமொழிக் கலப்பின்றி (கூடுமானவரை) எழுத முயல்வது பொருத்தம் என்றே நினைக்கிறேன். -- Sundar \பேச்சு 15:19, 19 பெப்ரவரி 2007 (UTC) அகராதித் தமிழ் எதிர் விக்கி தமிழ்அகராதி என்பது ஒரு காலத்தில் புழங்கிய சொற்களை புரிந்து கொள்ள உதவும் ஒரு கையேடு. அவ்வளவு தான். அது ஒரு மொழிச் சான்றிதழ் இல்லை. அதனால், ஒரு அகராதியில் இருப்பதை எல்லாம் தமிழ்ச்சொல் என்று ஏற்கவும் தேவை இல்லை. இல்லாததை ஒதுக்கவும் தேவை இல்லை. உண்மையில் நல்ல அகராதி என்றால், அது வேர் மொழி குறிப்பிட்டு விளக்கி இருக்க வேண்டும். விக்கி தமிழை பொறுத்த வரை எது நல்ல தமிழ் என்று நம் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் உட்பட்ட சொற்களை பயன்படுத்தலாம். இது தொடர்பான உரையாடல்களுக்கு விக்சனரி ஒரு உதவிக் களமாக இருக்கும். --Ravidreams 14:00, 16 பெப்ரவரி 2007 (UTC) ஊடகத் தமிழ் எதிர் விக்கி தமிழ்ஊடகங்களுக்கு வணிகக் கட்டாயங்கள், போட்டிக் கட்டாயங்கள், பொறுப்பின்மை தரும் சுதந்திரம் ஆகியவை உண்டு. அவற்றை விக்கியிலும் திணிக்கத் தேவை இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்த மணிப்பிரவாள நடை இதழ்களை இப்பொழுது புரிந்து கொள்ள முடியாது. அப்பொழுது அந்த நடையைப் பின்பற்றி ஒரு விக்கி வந்திருந்தால் இன்று அதன் பலன் என்ன? நிகழ்காலத்துக்கு ஒட்டிய மொழி நடை என்பதை காட்டிலும் எக்காலத்திலும் எந்நாட்டிலும் புரிந்து கொள்ளக்கூடிய பொதுத் தமிழ் நடை ஒன்றை நாம் பின்பற்ற வேண்டும்.--Ravidreams 14:00, 16 பெப்ரவரி 2007 (UTC) கிரந்த எழுத்துக்கள் ஏற்றலும் தவிர்த்தலும்பிற மொழிச் சொற்களை தகுந்து உச்சரிப்பதற்கு ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் கிரந்த எழுத்துக்களை பயன்படுத்தலாம். ஜாதி - சாதி போன்று பரவலாக அறியப்படும் சொற்களில் உச்சரிப்புத் துல்லியத்தை புறக்கணித்து தமிழ் எழுத்து உடைய சொற்களை முன்னிலைப்படுத்தலாம். கிரந்த எழுத்து உள்ளது ஒரு வகையில் இது பிற மொழிச் சொல்லாக இருக்கலாம் என்பதற்கு ஒரு அத்தாட்சி. அந்த இடங்களில் தகுந்த தமிழ் சொல் இருக்கிறது என்று தெரிந்தால் மாற்றி எழுதலாம். --Ravidreams 14:00, 16 பெப்ரவரி 2007 (UTC) ஆங்கிலப் பெயர் initial கள்எம். ஜி. ஆர் என்று பரவலாக அறியப்பட்டிருந்தால் அந்த பெயரையே முன்னிலைப்படுத்த வேண்டும். விக்கிபீடியா ஒரு வகையில் வரலாற்று ஆவணம். அவர் எப்படி அறியப்பட்டார் என்பதை துல்லியமாக சொல்வது அவசியம். தவிர, கே. எஸ். ரவிக்குமார் போன்ற பெயர்களில் கே. எஸ் என்பதன் தமிழாக்கம் என்ன என்று துழாவ முடியாது. தவிர, அது தான் அவரது அதிகாரப்பூர்வ பெயரும் கூட. எனவே அதையே பயன்படுத்த வேண்டும். அப்படியே கண்டு பிடித்து முன்னிலைப்படுத்தினாலும் அது நபர்களை குழப்புவதிலும் தேடல் முடிவுகளை குழப்புவதாகவும் அமையும்--Ravidreams 14:00, 16 பெப்ரவரி 2007 (UTC) சொல் சுருக்கம்சொற்கள், சொற்றொடர்கள் சுருக்கமாக பள்ளி மாணவர்களுக்குப் புரியும் வகையில் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.--Ravidreams 14:00, 16 பெப்ரவரி 2007 (UTC) இயற்பியலில் Mass என்பதற்கான சொற்கள்இயற்பியலில் mass என்பதற்குத் திணிவு, பொருண்மை என்னும் இரு சொற்களும் தருகின்றோம். திணிவு என்பது அடர்த்தி என்னும் சொல்/பொருளோடு குழப்பம் தர வாய்ப்புள்ளது. பொருண்மை என்பது மை என்று விகுதி கொண்டிருப்பது அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை (பண்பு என்று கொள்ளலாம்தான், எனினும் முழுதும் சரியாக படவில்லை). நிறை என்னும் சொல் சுருக்கமாகவும், மிகவும் பொருத்தமாகவும் உள்ளதால் எல்லா இடங்களிலும் நிறை என்பதை mass என்பதற்கு இணையாகப் பயன் படுத்தலாம். weight என்னும் சொல்லுக்கு நாம் எடை என்பதைப் பயன்படுத்தலாம் (பிற சொற்கள் பளு, பாரம் முதலியவும் உண்டு). நிறை என்பது ஒரு பொருள் நிறைந்திருக்கக் கரணியமான ஒன்று (பொருண்மை) என்னும் பொருள் கொள்ளலாம். நிறைந்திருப்பது நிறை. இது புது விளக்கம் (இயற்பியலுக்காக). உண்மையில், நிறை என்பது நிறுத்தல், தூக்கி நிறுத்தல் (நில் -> நிறு->நிறுத்தல்) என்பதில் இருந்து பெறப்படும் பொருள். ஆகவே அதுவும் எடை என்னும் பொருள்தான் (தொடக்கத்தில்). நிறுத்தல் -> நிறுத்தல் அளவை முதலியனவும் உண்டு. ஆனால் இங்கே இயற்பியலுக்கு நாம் வரையறை செய்து mass என்பதற்கு ஏற்றதாக கொள்ளத்தக்க சொல் நிறை. ஆங்கிலத்திலும், mass என்பது பெரிய என்பது போன்ற பிற பொருள்களில்தான் இருந்தது, அதனை இயற்பியலில், வரையறை செய்து ஆக்கிகொண்டனர். எனவே நிறை என்பதை mass எனப்தற்கு ஆளலாம் என்பது என் பரிந்துரை. பயனர்களின் கருத்தை அறிந்தபின் மாற்றம் செய்ய இருக்கின்றேன். இது அடிப்படையான ஒரு தேவை. அருள்கூர்ந்து உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.--செல்வா 13:58, 20 மார்ச் 2007 (UTC) ஈழத்தில் mass என்பது திணிவு என்றும் weight என்பது நிறை என்றும் ஆறாம் ஆண்டிலிருந்து உயர்தர வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் விஞ்ஞான (அறிவியல்) பாடங்கள் தமிழில் கற்பிக்கப்படுவதில்லையா? ஏற்கனவே நெடுங்காலம் பயன்படும் ஒரு கலைச்சொல்லை மாற்றுவது பொருத்தமல்ல. வாசகருக்கு மிகுந்த குழப்பம் ஏற்படும். 90இனைத் தொண்பது என்றும் 900 இனை தொண்ணூறு என்றுமே அழைக்க வேண்டுமென்று கூறப்படுகிறது. ஆனால் அத்தகைய மாற்றம் சாத்தியமல்ல. ஏனென்றால் அவ்வாறு மாற்றினால் இதுவரை 90 இனைத் தொண்ணூறு என்று எழுதி வந்தவற்றோடு குழப்பம் ஏற்படும். அத்தகைய நிலைதான் இங்கும். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சொற்களை மாற்ற முனைவது விக்கிபீடியாவின் நம்பகத்தன்மையையும் பாதிக்கும். நன்றி. கோபி 14:24, 20 மார்ச் 2007 (UTC)
(அத்தோடு கோபி, தொண்டு, தொண்பது, தொண்ணூறு என்ற மாற்றம் தேவை. ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கு பின்னர் இப்படித்தான் எழுதவேண்டும், அச்சிட வேண்டும் என்று தமிழ்நாடு-இலங்கை-சிங்கப்பூர் அரசுகள் ஆணை செய்யவேண்டும். --Natkeeran 14:39, 20 மார்ச் 2007 (UTC)) நிறை என்பது பொருத்தம் இல்லை என்பது இராம.கி அவர்களின் கருத்து. http://valavu.blogspot.com/2006_07_01_archive.html
மேலும் செறிவெண் என்பதைச் சிக்கலெண் என்ற பக்கத்துக்கு நகர்த்தியுள்ளேன். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சொற்களைத் தவிர்த்து புதிய சொற்களைப் பயன்படுத்துவது விக்கிபீடியாவின் பயன்பாட்டை வெகுவாகக் குறைக்கும். இது தொடர்பில் பயனர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். கோபி 14:40, 20 மார்ச் 2007 (UTC)
நற்கீரன், திணிவு என்பது எச்சொல்லுக்கு நன்றாகப் படுகிறது? நிறை என்பது எச்சொல்லுக்குப் பொருத்தமில்லை? //ஈழத்தில் mass என்பது திணிவு என்றும் weight என்பது நிறை என்றும் ஆறாம் ஆண்டிலிருந்து உயர்தர வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது.// என்பதை மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தமிழகக் கலைச் சொற்கள் என்ன என்பதே இங்கே கவனிக்கப்பட வேண்டியதாகும். நற்கீரனுக்கு எது நன்றாகப் படுகிறது, இராம கி எதனைப் பிழையாகப் பார்க்கிறார் போன்றன விக்கிபீடியாவைப் பயன்படுத்துவோருக்குப் பொருள் விளங்க நாம் எழுத வேண்டும் என்பதுடன் ஒப்பிடுகையில் ஒரு பொருட்டே இல்லை. கோபி 14:45, 20 மார்ச் 2007 (UTC)
நற்கீரன், விக்கிபீடியா யாருக்காக? உங்களுக்கும் எனக்குமா? அல்லது தமிழ்பேசும் அனைவருக்குமா? நீங்களும் நானும் எடுக்கும் முடிவுகளுக்கேற்பத் தமிழில் காலங்காலமாகக் கற்றுவந்த அனைவரும் மாற வேண்டும் என நினைப்பது முட்டாள்த்தனம். கோபி 14:57, 20 மார்ச் 2007 (UTC)
தரம் நிறுவும் நிலையில் த.வி இயங்க வேண்டும் என்பதே எனது விருப்பமும். ஆனால் 15 பேர் பங்களித்துத் தரம் நிறுவுவதென்பது சாத்தியமல்ல. அதிலும் இங்கு பங்களிக்கும் சிலரே துறைசார் அறிஞர்கள். நற்கீரன் நீங்கள் இணையம்தான் உலகம் என்று நினைக்கிறீர்களோ தெரியவில்லை. இன்னும் 5 - 10 ஆண்டுகளின் பின்னரேயே சாதாரண தமிழ்க் குழந்தைகளால் விக்கிபீடியா போன்றவற்றை இலகுவில் அணுக முடியும். அதற்கிடையில் சொற் பயன்பாடு பலவிதங்களில் மாறியிருக்கும். அப்போது த.வி பயனற்றதொன்றாக மாறாமலிருக்க வேண்டுமானால் நாளாந்த பாவனையில் உள்ள சொற்களைக் கவனத்தில் எடுப்பதே முக்கியமாகும். த.வி உரையாட நல்ல இடம்தான். ஆனால் எமக்குச் சரியென்று படும்விதத்தில் செய்யப்படும் மாற்றங்கள் த.வியின் பயன்பாட்டையே பாதிக்கும். கோபி 15:10, 20 மார்ச் 2007 (UTC)
அவ்வாறு தரம் நிறுவும் அமைப்பேதும் தமிழுக்கு இன்னும் இல்லை என்பது கவலைக்குரியது. தஞ்சைப் பல்கலைக்கழகம் அத்தகையதொரு அமைப்பா? தெரியவில்லை. இலங்கையில் எந்தப் பல்கலைக்கழகமும் அந்தளவு கவனமெடுத்ததாகத் தெரியவில்லை. பல்லாண்டுகளின் முன் பாடநூலாக்கக் குழுக்கள் சிறப்பாக இயற்கிப் பெருமளவு கலைச்சொல்லாக்கத்தில் இடுபட்டன. இப்போதுள்ளோர் அவற்றைத் தொடர்கின்றனர். அவ்வளவே. இப்போது இலங்கைப் பாடநூல்களில் உள்ள எழுத்து, கருத்துப் பிழைகள் மிகுந்த கவலையளிக்கின்றன. ஆதலால் தமிழகத்தை எதிர்பார்க்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது. எதாவது செய்யத்தான் வேண்டும். எங்கிருந்து தொடங்குவது? கோபி 15:30, 20 மார்ச் 2007 (UTC) தமிழ் மக்களின் மொழி; அதற்கு தரம் நிறுவும் அமைப்பு தேவையா...தெரியவில்லை. அது எப்படி தொழிற்படும். எனினும் எழுதும் பொழுது கலைச்சொற்களைப் பொறுத்தவரையில் ஒரு பொதுத் தரம் பேணுவது சிறப்பு. குறிப்பாக வளர்ச்சியடைந்த எண்ணக்கருத்துக்கள் நோக்கி. இல்லாவிட்டால் வெறும் அவரவர் அலம்பல்கள்தான் மிஞ்சும். இது தானக நடக்குமா அல்லது நாம் கூட்டாக முயலவேண்டுமா...?--Natkeeran 15:39, 20 மார்ச் 2007 (UTC) இலங்கை வழக்கு, தமிழ்நாட்டு வழக்கு என்று இறுக்கமாக நிற்பதால் விளையும் பெரும் கேட்டை உணர்தல் மிகவேண்டுவது. கலைச்சொற்கள் பாட நூல்களில் எவ்வாறு இடம் பெறுகின்றன என்றும் எண்ணிப் பார்க்கவேண்டும். இன்று TVU வில் உள்ள பெரும்பாலான சொற்கள் ஒரு காலத்தில் நானும் என் நண்பர்களும் கிழமை தோறும் கூடி எங்களுக்குத் தெரிந்தவாறு கருத்துரையாடி ஆய்ந்தறிந்து தொகுத்தவை (ஏறக்குறைய 5000 சொற்கள்) (இன்று விரிவு படுத்தியுள்ளார்கள்). அன்று நாங்கள் மாணவர்களாக இருந்து நிகழ்த்தியதை இன்று தகுதி படைத்தவர்கள் (பேராசிரியர்கள், துறை அறிவாளர்கள் முதலானோர்) ~100 பேர் அறிவியல் நோக்கில் கலந்துரையாடினால், நல்ல சொல் தேர்வுகளும், கருத்துரையாக்கத் தேர்வுகளும், திறன் ஆய்வுகளும் செய்யலாம். இருளை இகழ்வதைக் காட்டிலும் ஒரு விளக்கை ஏற்றுவது நல்லது எனும் நோக்கில், நல்லன செய்வதில் கருத்தை செலுத்துவோம். அறிவுத்துறைகளில் இன்றுள்ள தமிழ்க் கலைச்சொற்களை ஏதோ மாற்ற முடியாத, மாற்றக்கூடாத, நிலைப்பெற்றுவிட்ட ஒன்றாக கருதுவது நம் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். வளர்ச்சி தரும் வழிகளில் சற்று திறந்த மனம் வேண்டும். பழைய கலைச்சொற்களை தேவை எனில் பிறைக்குறிகளுக்குள் தரலாம். --செல்வா 16:12, 20 மார்ச் 2007 (UTC) முழு உரையாடலைப் படித்தும் யார் எச்சொல்லைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறார்கள் என்று குழப்புகிறது :) தமிழ்நாட்டுப் பாடநூல்களில் mass = நிறை weight = எடை என்று நினைக்கிறேன். வீட்டுக்குப் போய் tvu தளத்தைப் பார்த்து சொல்கிறேன் (இதை என்று ஒருங்குறிக்கு மாற்றுவார்கள் !!) இலங்கை வழக்கு குறித்து கோபி சொல்லி விட்டார். திணிவு, பொருண்மை போன்ற சொற்களை இலங்கை வழக்கு, தமிழ் விக்கி மூலமே அறிந்து கொண்டேன். பள்ளி நாட்களில் தமிழ் வழிய நண்பர்களிடம் இருந்து நிறை என்ற சொல்லையே கேட்ட நினைவு. ஏற்கனவே உள்ள சொல்லுக்கு மறுபடியும் செல்வாவின் பரிந்துரை ஏன் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு வேளை பாடநூல்களில் இலங்கையில் நிறை = weight, தமிழ்நாட்டில் நிறை = mass என்பது தான் குழப்பம் என்று புரிந்து கொள்கிறேன். இது பெருங்குழப்பம் தான். எங்க ஊரில் "எடை நிறுத்துப் போடுப்பா" என்று சொல்லும் வழக்கத்தை நிறை என்ற சொல்லுன் பொருத்திப் பார்க்க முடிகிறது. சொல் விளக்கம் தந்ததற்கு நன்றி, செல்வா. அடுத்து என் கருத்துக்களைத் தெரிவிக்கும் முன் முக்கியமான ஒன்றை சுட்ட விரும்புகிறேன். திணிவு, எடை, நிறை ஆகிய அனைத்து முக்கியத் தலைப்புகளிலுமே நம்மிடம் இன்னும் கட்டுரை இல்லை!! :( இப்பொழுது உள்ள புரிந்துணர்வு - 1 . ஏற்கனவே உள்ள தமிழில் பாடநூல்களில் வழங்கும் சொற்களுக்கு இலங்கை, தமிழக வழக்குகளில் சிறந்ததை (பொருள், மொழித் தூய்மை அடிப்படை) பயன்படுத்த வேண்டும். முற்றிலும் இல்லாத சொற்களுக்கு, புதிதாக கலந்துரையாடி சொற்களை அறிமுகப்படுத்தலாம். இந்த விதத்தில் நாம் எடுத்தாண்ட நிகழ்படங்கள் போன்ற சொற்கள் ஏற்கனவே சில தமிழ் இணையத்தளங்கள், வலைப்பதிவுகளில் புழக்கத்துக்கு வந்து விட்டதை கண்டிருக்கிறேன். தமிழ் விக்கிபீடியா கட்டுரைகள் மேற்கோளாகவும், தகவல் ஆதாரமாகவும் பல வலைப்பதிவுக் கட்டுரைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை கண்டிருக்கிறேன். அந்த விதத்தில் தமிழ் விக்கியின் வீச்சு கவனத்துக்குரியது. தமிழ் விக்கிபீடியா நேரடியாக கடைசித் தமிழனை சென்றடைய பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், பிற அச்சு ஊடகக் காரர்களுக்கு தமிழ் விக்கி இன்றே அணுகத்தக்கது தான் என்பதை கருத்தில் கொள்ளலாம். தற்போது அச்சு ஊடகக் காரர்கள் ஆங்கில விக்கியைப் பயன்படுத்துவது போல் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் விக்கியைப் பயன்படுத்தத் தொடங்கக் கூடும். குறிப்பாக, தமிழ் சார்ந்த, புது நுட்பத் தலைப்புகளுக்கு. ஏனெனில் அண்மைய நுட்பங்களை தமிழில் விளக்கும் சாத்தியம் உள்ள ஒரே இடம் இது தான். புத்தகங்கள், இதழ்கள், ஆதார நூல்கள் இந்ந வகையில் தமிழில் குறைவு அல்லது இல்லவே இல்லை. இணையம், தரவிறக்கம், பதிவிறக்கம் போன்ற சொற்கள் இணையப் பரப்பில் உருவாக்கப்பட்டு இன்று அச்சு ஊடகங்களாகுலும் எடுத்தாளப்படுகின்றன. இந்த சொற்களை அறிஞர் குழுக்களோ அரசோ உருவாக்கவில்லை. இணையம் அனைத்துத் தமிழர்களையும் முன்னிறுத்தவில்லை என்றாலும், இணையத் தமிழ் ஆர்வலர்களில் சொல்லாக்கங்கள் பொது வாழ்வுக்கு வருவது கண்கூடு. இந்த வகையில் தமிழிணையம், தமிழ் விக்கி அனைத்தும் ஒரு மெய்நிகர் தரப்படுத்தல் அமைப்பாக விளங்க முடியும். விளங்குகிறது. ஆக, நாம் உருவாக்கும் உள்ளடக்கங்கள் உடனுக்குடன் தமிழ் மக்களை சென்றடையும் வாய்ப்பு நிரம்பவே உண்டு. 2. பிரச்சினை எங்கென்றால் ஏற்கனவே தமிழில் இலங்கை, தமிழ்நாட்டில் பாடநூல்களில் புழக்கத்தில் உள்ள சொற்களை புறக்கணித்து விட்டு தமிழ் விக்கியில் புதுச் சொற்களைப் புகுத்துவது முறையா? இதைச் செய்வதற்கு நமக்கு உள்ள தகுதி நிலை என்ன? 15 முனைப்புள்ள பங்களிப்பாளர் மட்டுமே உள்ள நிலையில் இப்படிச் செய்யலாமா? இது தமிழ் விக்கிபீடியாவின் பரவலை பாதிக்குமா என்பது தான். இந்த வகையில் கோபியின் தயக்கம், கருத்து முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது. ஆராயப்பட வேண்டியது. பள்ளி, கல்லூரி முழுக்க சிக்கலெண் என்று படித்து வந்தவன் இங்கு அதை செறிவெண் என்று மாற்றி எழுதி இருப்பதைக் கண்டால், குழம்புவது உறுதி. செறிவெண் என்பது சிக்கலெண் என்பதை விட பொருள் சிறப்பு வாய்ந்தது என்று நான் ஏற்றுக் கொண்டாலும் (சிக்கல் எண் என்பது literal translation தான்), இன்னொரு அறிஞர் இதைக் கலப்பெண் என சொல்லலாம். இன்னொரு அறிஞர் இதை வேறு மாதிரி சொல்லலாம். 50 ஆண்டுகளாக உள்ள சிக்கலெண் என்ற சொல்லை நாம் தவறெனக் கண்டு மாற்றுகிறோம். சரி. அடுத்த ஆண்டு இன்னொருவர் வந்து நாம் மாற்றிய சொல்லையும் மாற்றச் சொல்லி, இன்னொரு நல்ல சொல்லைத் தந்தால?? எத்தனை முறை மாற்றுவது? ஒரு சொல்லின் மாற்றம் பல கட்டுரைகளில் மாற்றத் தேவையைக் கொண்டு வரும். இதனால் வரும் சிக்கல், குழப்பம், துப்புரவுப் பங்களிப்பாளர் சுமை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். தொடக்கத்தில் செல், திசுள், கலம் என்று cellக்கு மாற்றி மாற்றி எழுதி நானே குழம்பி துறை சார் கட்டுரைகளை எழுதுவதையே விட்டு விட்டேன். அதே தயக்கத்தால், சரியான சொல் இல்லாததால், இருந்தும் புதுச் சொல்லாக இருப்பதால் விக்கி ஏற்பு இல்லாததால் செல்வா போன்றோர் துறை சார் கட்டுரைகளை எழுதுவதை தாமதப்படுத்த வேண்டியும் இருக்கலாம். அதே வேளை ஏற்கனவே உள்ள சொற்களை மாற்றவே கூடாது என்றால் தமிழ்நாட்டில் நாம் இன்னும் சமசுகிருதத் தமிழ் அறிவியல் தான் படித்துக் கொண்டிருப்போம். பல சொற்களில் பொருள் சிறப்பு கூடிய மாற்றம் தேவை. அதற்கு ஒரு களமும் தேவை. ஆனால், அதை தமிழ் விக்கியில் இருந்து தொடங்குவதா என்பதில் எனக்கும் பெரும் தயக்கம் உணடு. எடுத்துக்காட்டுக்கு, தற்போதைய பத்தாம் வகுப்பு மாணவன் இங்கு செறிவெண் என்றும் அவன் புத்தகத்தில் சிக்கலெண் என்றும் இருந்தால் பெரிதும் குழம்பி ஆசிரியரிடமும் திட்டு வாங்குவான். நாம் குழப்புகிறோம் என்று நினைத்து ஆசிரியரும் தமிழ் விக்கியை தடை செய்தால்? ஏற்கனவே உள்ள சொற்களுக்கான மாற்றங்கள் தமிழ் விக்கிக்கு வெளியே அரசு மேற்பார்வையில் பன்னாட்டு அறிஞர் குழு வழியாக சீர்த்தரப்படுத்தப்பட்டு பாடப் புத்தகங்களுக்கும் பிறகு விக்கிக்கும் வருவதே சரியாக இருக்கும். செல்வா போன்று தமிழ்ச் சூழல்களில் பல காலம் இயங்குவோரும் மேல்மட்டத் தொடர்புகள். அறிஞர் தொடர்புகள் உள்ளோர் இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பது என் வேண்டுகோள்--ரவி 16:24, 20 மார்ச் 2007 (UTC)
Mass - நிறை, திணிவு, பொருண்மை பகுதி-2ரவி, சிக்கலெண், கலப்பெண் முதலிவற்றுக்கு வழிமாற்று தரலாம். கட்டுரைக்குள்ளும் குறிக்கலாம். குழப்பம் ஏதும் வராது. மேலும் மீசுட்டு இருப்பதால், உடனுக்குடன் எது என்ன என்று புரிந்து கொள்ளலாம். 2-3 வரி விளக்கங்கள் mouse over செய்தாலே பொருள் தெரியுமாறும் வருங்காலத்தில் விக்கியில் மாறுதல் வரலாம். எனவே இதுபற்றியெல்லாம் கவலை கொள்ளவேண்டியதில்லை. --செல்வா 16:50, 20 மார்ச் 2007 (UTC)
செல்வா, கலைசொற்கள் மாறுவது பயன்மிக்கதாக இருக்கலாம். மாற்றங்கள் வேண்டுமென்பதற்கான உங்களது விளக்கம் மிகச் சரியே. ஆனால் மாற்றப் பொருத்தமான இடம் த.வி அல்ல என்ற என் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. நன்றி. --கோபி 18:23, 20 மார்ச் 2007 (UTC) 18:22, 20 மார்ச் 2007 (UTC)
செல்வா, சிக்கலெண் விவாதம் வந்ததால் உரையாடல் நீண்டு விட்டது. நிறை massஆ weightஆ என்று இறுதி செய்ய வேண்டியது உடனடித் தேவை. இதை பேச்சு:நிறை பக்கத்தில் உரையாடலாம்--ரவி 07:23, 21 மார்ச் 2007 (UTC) தமிழ் கலைச்சொற்களை பொதுத்தரம் செய்பவர்கள் யார்?
கருத்து தேவைபல கட்டுரைகளில் பயன்படும் ஒரு முதன்மையான சொற்கூட்டம் பற்றி கருத்து தேவை. கணித அணி பற்றிய சொல் முன்மொழிவுSparse matrix என்பதற்கு விலத்தி அணி அல்லது விலவு அணி என்று கூறலாம் என்று முன்மொழிகின்றேன். விளக்கத்திற்கு இப் பக்கத்தை அணுகவும் --செல்வா 15:42, 25 மார்ச் 2008 (UTC) இராணுவம், ரீதி என்னும் சொற்கள்இராணுவம் என்னும் சொல்லை ஆள்வது தவறில்லை, ஆனால் இயன்ற சில இடங்களிலாவது தெளிவாக, படைத்துறை, படையாள், பட்டாளம், பட்டாளர், படையாட்கள் என்று பயன்படுத்தலாம். கடற்படையாளர், வான்படையாளர், தரைப்படையாளர், காலாட்படையினர் என்று பொருள்விளங்குமாறு கூறுவது தகும். ரீதி என்றொரு சொல், பல இடங்களில் பலவாறு பயன்படுகின்றது. தொழில்ரீதியாக, வணிகரீதியாக, மதரீதியாக என்று இன்னபிற இடங்களில் பயன்படுகின்றது. இதனை தொழில்கோணத்தில், தொழில்நோக்கில், தொழில்வளர்ச்சி நோக்கில், தொழிலடிப்படையில், தொழிதொடர்பாக என்று சில இடங்களிலாவது எழுதினால், என்ன சொல்ல நினைக்கிறார்கள் என்று விளங்கும். "ரீதி" என்னும் புரியாத ஒரு சொல்லால் பயன் குறைவு. வேண்டாம் என்று சொல்லவில்லை, பொருள்தெளிவை மனதில் கொண்டு எழுதுதல் நல்லது என்று குறிப்பிடவே இங்கு இதனை முன்மொழிகிறேன் எண்னிப்பார்க்க வேண்டுகிறேன். --செல்வா 18:51, 3 மே 2008 (UTC)
முன்மொழிவு: வேற்றுமொழிச் சொற்களில் கிரந்தம்இங்கு நான் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பின்வரும் வழக்கத்தை முன்மொழிகிறேன். வடமொழி மூலம் கொண்ட பெயர்களில் கிரந்தத்தைப் பயன்படுத்த வேண்டுமா கூடாதா என்பதைப் பற்றிய சிக்கலில் எந்த ஒரு நிலைப்பாடை வேண்டுமானாலும் கலந்துபேசி எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இதுவரை தமிழில் வழக்கூன்றாத நிப்பானிய, எசுப்பானிய, உருசிய மொழி மற்றும் பிற மொழிப் பெயர்களை ஒலிபெயர்ப்பு செய்கையில் கிரந்தத்தை முழுமையாகத் தவிர்க்கலாமே? இங்கு புகுபதியாமல் கருத்துத் தெரிவித்திருக்கும் நபர் கேட்டுள்ள தெஹரான் போன்றவற்றை தெகரான் என்றே எழுதலாம் என்று பரிந்துரைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 14:57, 12 அக்டோபர் 2008 (UTC)
நானும் இதை ஆதரிக்கிறேன். செயபால் cell - செல், கண்ணறை, உயிரணு, நுக்கு (நுக்கம், நுகம்), கலம் ??பேச்சு:கலம்#சொல்_தேர்வு என்னும் பக்கத்தைப் பார்க்கவும். கருத்து தெரிவிக்கவும். --செல்வா 00:08, 27 டிசம்பர் 2008 (UTC) மெய்யெழுத்தில் சொல் தொடங்குதல்எந்தத் தலைப்பும் மெய்யெழுத்தில் தொடங்குதல் கூடாது என்பதை பரிந்துரையாக அல்ல, கொள்கையாக அறிவிக்க முன்மொழிகிறேன். தமிழ்மொழியின் மரபுகளில் இது முக்கியமானவற்றுள் ஒன்று. தமிழ் மொழி இலக்கண வரம்புகள் கொண்ட மொழி. நெடுங்காலமாகவே இப்படி இலக்கண வரம்புகளுடன் உள்ள ஒருசில மொழிகளில் ஒன்று. 2500 ஆண்டுகளுக்கு மேலாக செழிப்புடன் வாழ்ந்து வரும் மொழி. இதன் மொழி மரபுகளுக்கு மீறி நடத்தல் தமிழ் விக்கிப்பீடியாவில் தவிர்ப்பது நல்லது, கடமையும் கூட. ஒன்றை எவ்வாறு கொள்கையாக அறிந்து அறிவிப்பது என்பது பற்றி அறிந்தவர்கள் (சுந்தர்? மயூரநாதன்? ரவி? மற்றும் யாரேனும்?) வழிகாட்ட வேண்டுகிறேன். --செல்வா 16:58, 27 டிசம்பர் 2008 (UTC)
ஹைக்கூ கட்டுரைதமிழ்ப்படுத்துதல் என்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் விக்கியில் அது கொஞ்சம் அதிகமாக நடக்கிறதோ என்று தோன்றுகிறது. உ-ம் ஹைக்கூ கட்டுரை. ஹைக்கூ என்பதை கைக்கூ என்றும் ஐக்கூ என்றும் மாறி மாறி எழுதப்பட்டுள்ளது. மேலும் ஜப்பானுக்கு நிப்பான் என்ற பெயரை இதுவரை நான் கேட்டதே இல்லை. அப்படியொரு வழக்கம் இருப்பதை விக்கியின் மூலம் அறிந்து கொண்டேன் என்றாலும், ஐப்பான் என்று அக்கட்டுரையில் கூறலாம் என்பது என் எண்ணம். இதுவரும் உதாரணக் கட்டுரைதான். இதன் மூலம் இக்கட்டுரையில் பங்களித்தவர்களைப் பற்றி குறை கூறுகிறேன் என்று எண்ணவேண்டாம். தமிழ்ப்படுத்துதல் சிரமம் தருகிறது, என்பதையே கூறிக்கொள்கிறேன். நன்றி.
பிறமொழிப் பெயர்ச்சொற்கள்தமிழ்விக்கிப்பீடியாவில் பிறமொழியில் உள்ள பெயர்ச்சொற்களை தமிழில் எழுதுவதற்கு எந்த முறை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது?
அல்லது இடத்திற்கு ஏற்றார் போல கொள்கைகள் என்றால் அதனை வரையறுக்கமுடியுமா? தமிழ் ஊடகங்கள்/படைப்புகளில் பயன்படுத்தாதவொறு தமிழுக்கு புதியது. முற்றிலும் புதிய அறிமுகம் என்றால் பிரச்சனையில்லை ஆனால் மக்களுக்கும் ஊடங்களிலும் அறிமுகமான புனே, காட்லாந்து, அண்டார்டிகா, வெகுஜன நடவடிக்கை போன்ற சொற்கள் புழக்கத்தில் இருக்கும் போது ஒரு புதிய சொல்லை தமிழுக்கு விக்கிப்பீடியா அறிமுகப்படுத்தலாமா? தமிழ் விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மை மட்டுப்படாதா? த.வி என்பது ஒரு மொழியை பாதுகாக்க வந்த களஞ்சியமோ, மொழியை பிழைதிருத்தும் களஞ்சியமோ அல்ல மூன்றாம் நிலை தரவுதளம் என்கிற அணுகுமுறையுடன் பார்க்கலாமா?--நீச்சல்காரன் (பேச்சு) 02:52, 24 மே 2012 (UTC)
நீச்சல்காரன், தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தப் பயன்பாடு குறித்த வழிகாட்டல் உண்டு. ஆனால் இதுவரை, உறுதியான கொள்கை ஏதும் இல்லை. குறுந்தட்டுத் திட்டத்துக்குப் பிறகு இது குறித்து உரையாடலாம் என்று ஒரு புரிந்துணர்வு உள்ளது. எனவே இப்பொழுது, கிரந்தம் தொடர்பான எடுத்துக்காட்டுகளுக்குள் செல்ல விரும்பவில்லை. பொதுவாக, பின்வரும் கொள்கைகள் / வழிகாட்டல்கள் / புரிந்துணர்வுகள் உள்ளன:
வெகுஜன - > வெகுமக்கள் என்பது இந்த வகையில் வரும். மக்கள் என்பது புதிய சொல்லும் அன்று. வெகுமக்கள் என்பது புரிந்து கொள்ள முடியாத சொல்லும் அன்று. தவிர, இங்கு வெகுஜன என்பது ஒரு இடுகுறிப் பெயர் அன்று. அது ஒரு கருத்தைத் தெரிவிக்கும் காரணச் சொல். எனவே, தகுந்த தமிழ் சொல் கொண்டு எழுதுவது தவறு இல்லை.
கியூபா - > கூபா, செருமனி - > இடாயிட்சுலாந்து இந்த வகையைச் சேரும். வேண்டிய தகவலைப் பெற இணையம் உள்ள, உலகம் எல்லாம் தமிழர் பரவி இருக்கும் இந்தக் காலத்தில், ஆங்கில ஒலிப்பு சார்ந்து தான் பெயரிட வேண்டும் என்றில்லையே? இடாயிட்சுலாந்தில் இருந்தே எழுதும் ஒரு தமிழரை நீங்கள் செருமனி என்று தான் எழுத வேண்டும் என வற்புறுத்த முடியுமா? பிற தமிழ் மொழி ஊடகங்கள் ஆங்கிலப் பெயர் சார்ந்து இயங்குவதற்காக நாமும் அப்படி இயங்க வேண்டும் என்று கட்டாயம் இல்லையே? பிற மொழி விக்கிப்பீடியா ஒன்று டுட்டிக்கோரின் என்று தலைப்பிட விரும்புவீர்களா, தூத்துக்குடி என்று தலைப்பிட விரும்புவீர்களா? வெகுமக்கள் ஊடகங்கள் வெளிப்படுத்துவது மட்டுமே அறிவு அல்லவே? ஆனால், ஒரு சில மொழிகளின் ஒலிப்புத் துல்லியத்துக்காக, தமிழ் இலக்கணத்தைத் திரித்தும் புதிய எழுத்துகளைச் சேர்த்தும் எழுதலாம் என்று நினைக்கும் நாம், மூல மொழிகளின் பெயர்களை அப்படியே இருக்கிற தமிழ் எழுத்துகளை வைத்தே எழுதலாம் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை !
அண்டார்டிகா (andaardigaa)- > அண்டார்க்டிக்கா (andaarcticaa) இதில் அடங்கும். தமிழ் ஒலிப்பொழுங்கு உள்ள மொழி. எனவே, ஒரு மாதிரி எழுதி வேறு மாதிரி ஒலிக்காமல், தேவைப்படும் ஒலிப்புக்கு ஏற்ப, தமிழ் இலக்கணத்துக்கு உட்பட்டு, நடைமுறையில் உள்ள எழுத்துபெயர்ப்பைத் திருத்தலாம்.
பெரும்பாலான அறிவியல் கலைச்சொற்களுக்கான தமிழாக்கங்கள் இதில் அடங்கும். ஊர்ப்பெயர்கள் காரணப்பெயர்களாக இருந்தால் அவற்றை மொழி பெயர்த்தும் எழுதலாம். http://en.wikipedia.org/wiki/Newyork , http://en.wikipedia.org/wiki/Greenland ஆகிய கட்டுரைகளில் உள்ள விக்கியிடை இணைப்புகளைப் பார்த்தீர்களேயானால், பல்வேறு மொழிகளில் new, green ஆகிய பெயர்களை மொழிபெயர்த்து எழுதியிருப்பதைக் காணலாம். தமிழ் ஊடக வழக்குகளைப் பார்க்கும் அதே வேளை, உலக மொழி வழக்குகளையும் காணலாம் அல்லவா? நீங்கள் குறிப்பிட்டுள்ள சிக்கல் எழுத்து நடை குறித்து. இதற்கும் விக்கிப்பீடியாவின் புத்தாக்கம் கூடாது என்ற கொள்கைக்கும் தொடர்பு இல்லை. நடைக் கையேடு இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும், சீரான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். தமிழ் விக்கிப்பீடியா தமிழைக் காக்க வந்த கலைக்களஞ்சியம் இல்லை தான். அதற்காக, பொது வழக்கு தவறாக இருந்தாலும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை எந்த மொழியிலான கலைக்களஞ்சியமும் ஏற்றுக் கொள்ளாது. http://tamil.cri.cn போன்ற தளங்களிலே கூட பெய்ஜிங், பெய்சிங் என்று இரு வகையாகவும் எழுதப்படுவதைக் காணலாம். இதனால், அதன் நம்பகத்தன்மை குறைந்து விடுகிறதா? விக்கிப்பீடியா ஒரு மூன்றாம் நிலை தரவுத் தளம் என்று பார்த்தாலும் பெயர்ச்சொற்கள் மொழிக்கு மொழி மாறும் என்பதால், ஒரு பெயரை எழுதும் விதத்தினாலேயே அதன் நம்பகத்தன்மை மாறிவிடப்போவதில்லை.--இரவி (பேச்சு) 18:09, 26 மே 2012 (UTC)
//பிற விக்கிகளில் new, green மொழிபயர்த்து எழுதியது அவர்களின் மொழி பொதுவழக்காக இருக்கலாம் அல்லவா// ஆம், அது அவர்கள் மொழிகளின் பொது வழக்கு தான். ஒரே பெயர்ச்சொல் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு வகையாக வழங்கப்படலாம் என்பதற்கும் காரணப் பெயர்கள் மொழிபெயர்க்கப்படலாம் என்பதற்கும் எடுத்துக்காட்டாக இவற்றைக் குறிப்பிட்டேன். //Newyork, Greenland ஐ மாற்றி எழுதும் அந்த மொழிகள்(விக்கிகள்) பிற மொழி சார்ந்த ஊர் பெயர்களையும் அவ்வாறு ஒவ்வொரு ஊருக்கும் மூல மொழியின் சொற்களின் வேர்களை கண்டறிந்து மாற்றுகிறதா? // அந்த மொழிகள் எல்லாம் இப்பொழுது ஒவ்வொரு பெயராக இப்படி ஆய்ந்து மாற்றுகிறார்களா என்று எனக்குத் தெரியாது. முதலிலேயே அவர்கள் மூதாதையர்கள் அவ்வாறு பெயர் வைத்ததால், இன்று பொதுவழக்காக நிலைத்து விட்டது. நாம் அதைச் செய்யத் தவறி விட்டோம். ஆனால், இன்றும் இவ்வாறு ஆய்ந்து பெயர் மாற்றும் ஒரு மொழிக்கு எடுத்துக்காட்டு தர முடியும்: செங்குன்றம் Redhills ஆனது எப்படி? பட்டினப் பாக்கம் Foreshore estate ஆனது எப்படி? :) தமிழ்நாட்டில் உள்ள தமிழன், தனது ஊர்ப்பெயரையே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வைத்துக் கொள்ளும்போது, எங்கோ உள்ள ஊர்களின் பெயர்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளக்கூடாதா? இதனால் யாருக்கு என்ன இழப்பு? தமிழ் விக்கிப்பீடியாவில் நியூயார்க்க கட்டுரையை புது யார்க் என்றும் கிறீன்லாந்தை பைநாடு என்றும் நெதர்லாந்தைத் தாழ்நாடு என்றும் தலைப்பை மாற்றப் போவது இல்லை. ஆனால், யாராவது இப்படி எழுதுவார்கள் எனில், அதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை. இன்று புழக்கத்தில் உள்ள பல நல்ல தமிழ்ச் சொற்களும் கலைச்சொற்களும் ஒரு காலத்தில் பொது வழக்கில் இருந்து விலகி புதிதாக உருவானவையே. பொது வழக்கில் இருந்து எதுவுமே மாறி இருக்கக்கூடாது என்றால் ஒரு மொழி வளரவே முடியாது. Alexa தரவரிசைப்படி, அதிகம் பார்க்கப்படும் தமிழ் வலைத்தளங்களில் தமிழ் விக்கிப்பீடியா எட்டாவது இடத்தில் உள்ளது. இந்த அளவு வீச்சு உள்ள ஒரு தளம், மற்ற தமிழ் ஊடகங்களின் மொழிநடையைத் தான் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயம் இல்லை. விக்கி நடைமுறைகளுக்கு ஏற்ப கலந்துரையாடி, தனக்குரிய மொழிநடையைத் தன்னாட்சியாக உருவாக்கிக் கொள்வதில் தவறில்லை. பார்க்க: பெயர்ச்சொல் தமிழாக்கம் குறித்த எனது வலைப்பதிவு. --இரவி (பேச்சு) 10:42, 27 மே 2012 (UTC)
நீச்சல்காரன், புரிதலுக்கு நன்றி. பல்வேறு பக்கங்களில் முரண் உள்ளது உண்மை தான். சீரான பயன்பாட்டைக் கொணர தேவையான வழிகாட்டுப் பக்கங்களை உருவாக்க வேண்டும். அலெக்சா தரவரிசை பக்கப் பார்வைகள் அடிப்படையில் என்பதனால் தமிழ் விக்கிப்பீடியாவின் பயன்பாட்டையும் தளத்தின் வீச்சையும் காட்டும். அலெக்சாவின் துல்லியம் குறித்து மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், அதனை ஒத்த வேறு சேவைகள் இல்லை. //இணைய ஊடகம் மொத்த ஊடகம்/பயன்பாட்டில் குறைந்த சதகிதம்தான் வகிக்கிறது// இப்படிப் பார்த்தால் வானொலி, தொலைக்காட்சி, அச்சு என்று எந்த ஒரு ஊடகமுமே மொத்த பயன்பாட்டில் குறிப்பிட்ட விழுக்காடு தான் எனக் கூறலாம். இந்த ஒவ்வொரு ஊடகத்திலும் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தின் வீச்சு இன்னும் குறையும். ஒரே ஊடகத்தில் உள்ள நிறுவனங்களுக்கு இடையே கூட மொழி நடை வேறுபாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு: Discovery Channel தமிழுக்கும் பிற தமிழ்நாட்டு வணிகத் தொலைக்காட்சி நிறுவனத் தமிழுக்கும் உள்ள வேறுபாடு. தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்களிலேயே கூட புதிய தலைமுறை / மக்கள் தொலைக்காட்சித் தமிழுக்கும் மற்ற தொலைக்காட்சிகளுக்கும் வேறுபாடு உண்டா இல்லையா? வானொலிகளை எடுத்தோமானால் ஈழ வானொலிகள், பி. பி. சி. தமிழ் சேவை, சிங்கப்பூர் ஒலி வானொலி, அகில இந்திய வானொலி ஆகியவற்றுக்கும் வணிகப் பண்பலை ஒலிபரப்புகளுக்கும் வேறுபாடு உண்டா இல்லையா? பி. பி. சி தமிழ் ஒலிபரப்பை எத்தனை பேர் கேட்கிறார்கள் என்பதை வைத்தா அதன் மொழிநடையை அது உருவாக்கிக் கொள்கிறது? ஒவ்வொரு நிறுவனத்துக்குமே அதன் உள்ளடக்கம், மொழிநடை ஆகியவற்றைத் தெரிவு செய்யும் தன்னாட்சியும் உரிமையும் உண்டு என்பதே உண்மை. பொது வழக்கு, நாகரிக / ஆங்கிலம் கலந்த / பேச்சுத் தமிழ் என்பவை போலித்தனமாகவோ வணிக சமரசமாகவோ கூட இருக்கலாம். ஒரு முறை எழுத்தாளர் பா. ராகவனுடன் உரையாடிய போது அவர் ஒன்றைக் குறிப்பிட்டார். தமிழ் இதழுலகில் உள்ள தமிழ் நடை கூட ஐந்து பத்தாண்டுகளுக்கு ஒரு முறை தனது இயல்பை மாற்றுகிறது. இது நுணுகிப் பார்ப்பவர்களுக்கே தெரியும் என்றார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆனந்த விகடன் நடையை இப்பொழுது பார்க்க முடியுமா? ஆனால், கலைக்களஞ்சியம் என்பது காலத்துக்கு காலம் மாறுவது அல்ல. அதே வேளை, தொடர்ச்சி அறுந்து போகாமல் பல பத்தாண்டுகளுக்கும் நல்ல புரிதலை வழங்க வேண்டிய தேவை உண்டு. இந்நிலையில் ஓளரவு சீரான தமிழில் எழுத முற்படுவதும் அது தொடர்பான கொள்கைகளை உரையாடி முடிவெடுப்படுதும் தகும். பிற ஊடகங்களின் உள்ளடக்கம் நம் மீதி திணிக்கப்படும் போது அதனை மறுக்க உரிமையே இல்லாமல் ஏற்றுக் கொள்கிற நாம், அந்த உரிமையை வழங்குகிற விக்கிப்பீடியாவில் அப்படியே பொது நடையைப் பின்பற்ற வேண்டுமா கூறுங்கள்? அலெக்சா தரவரிசையில் நமக்கு மேலே உள்ள அத்தனைத் தளங்களும் அச்சு ஊடகங்களின் இணைய நீட்சி. இணையத்திலேயே உருவாகும் முயற்சிகளில் தமிழ் விக்கிப்பீடியாவே முதன்மையானது. தமிழ் இணையம் தொடங்கிய பிறகு பயனர்களால் உருவான எத்தனையோ சொல்லாட்சிகள் பிற ஊடகங்களின் பயன்பாட்டில் வந்துள்ளன. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் கூட பிற ஊடகங்களில் எடுத்தாளபட்டு வருகின்றன. தமிழ் விக்கிப்பீடியா வளர வளர இத்தாக்கம் இன்னும் கூடுதலாகவே இருக்கும். எனவே, விக்கிப்பீடியாவின் உள்ளடக்கத்தை முடிவு செய்யும் தன்னாட்சி நமக்கு உண்டா என்று ஐயுறத் தேவை இல்லை. உள்ளடக்கத்தில் மொழிநடையும் அடங்கும். பார்க்க: ஊடகத் தமிழ் குறித்த எனது வலைப்பதிவு--இரவி (பேச்சு) 14:31, 28 மே 2012 (UTC)
//நல்ல தமிழில் பயன்படுத்தி வரும் சொற்களை ஏன் புறக்கணிக்கவேண்டும் என்பதும் கேள்வியின் ஒரு சாரம்.// இது இருக்கிற சொல்லுக்குப் புறக்கணிப்பு என்று இல்லை. மூல மொழிப் பெயர்களுக்கு முன்னுரிமை என்று கொள்ளலாம். மூல மொழிப் பெயரைத் தெரிந்து கொள்வதில் இன்னும் அறிவுத் துல்லியம் கூடுகிறதா இல்லையா? செருமனிக்குப் போய் சேருகிற வரை அதன் பெயர் இடாயிட்சுலாந்து என்று தெரிந்து கொள்ள முடியாத அளவுக்குத் தமிழின் பொதுவழக்குச் சூழல் இருப்பது சரியா? //நல்ல தமிழில் ஒரு பெயர் இருக்கும் போது வீணாக அந்நாட்டு மூலமொழிச்சொல்லை தமிழ்படுத்தமுயன்று, அதன் ஒலிப்புமுறைக்கு ஒத்த தமிழெழுத்தைப் போட்டு புதிய சொல் உருவாக்கும் தன்னதிகாரம் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வேண்டாம் என்பதே எனது அவா. // யாருக்கு இந்தத் தன்னதிகாரம் இருக்கலாம்? தமிழ் விக்கிப்பீடியா இந்தத் தன்னதிகாரத்தைப் பெற யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்? வெகுமக்கள் ஊடகங்கள் முறை தவறி மொழியைச் சிதைக்கும் போது அந்த அதிகாரத்தை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? :) //ஸிங்ஹல என்பதை சிங்களம், எல்லினிக்கா என்பதை கிரேக்கம் என்று எடுத்துக்கொள்கிறதோ அதுபோல புழக்கத்தில் உள்ள தமிழ்ப்பெயரை எடுக்கவெண்டும் என்கிறேன்.// புழக்கத்தில் இருப்பது எல்லாம் தமிழ்ப் பெயர் இல்லை. ஆங்கிலப் பெயர்களின் தமிழ் எழுத்துபெயர்ப்புகள் நிறைய உள்ளன. //இங்கிருந்து வெட்டி/ஒட்டும் பக்கங்கள் தவிற யாரும் எடுத்தாள்வதாகத் தெரியவில்லை// வெட்டி, ஒட்டுவதும் கூட பயன்பாடு தானே? வெகுமக்கள் ஊடகங்கள் கூட தமிழ் விக்கிப்பீடியாவின் ஆக்கங்களை அப்படியே எடுத்தாண்டுள்ளனர். தமிழ் விக்கிப்பீடியாவின் எழுத்து நடையில் உடன்படாமல் திருத்தி வெளியிடுகிறார்களா? //உரோமை, இசுக்கொட்லாந்து, உரோசா// ரோமை என்று எழுதுவது கிறித்தவ ஆக்கங்களில் பரவலான பயன்பாட்டில் உள்ளது. ரோசா என்று எழுதுவது, பேசுவதற்கு திரைப்பாடல்களில் இருந்தே ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகள் தர முடியும். ரோஜா என்று தான் எழுத வேண்டும் என்று வலியுறுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இசுக்கொட்லாந்தில் வரும் கொ இலங்கை வழக்கு. சுவீடன், சுவிட்சர்லாந்து என்று எழுதும் வழக்கம் உள்ளோர் சுகாட்லாந்து என்றும் எழுதலாம். சுகா என்பது chuga என்று ஒலிக்கும் என்பதால் ஒலிப்பைத் தெளிவுபடுத்த சுக்கா என்றும் எழுதலாம். ர, ல போன்ற எழுத்துகளில் தமிழ்ச் சொற்கள் தொடங்கா என்பதால் இலட்சுமணன், இராணுவம், இராசபாளையம், இலட்சம் என்று எழுதுவதும் வழக்கத்தில் உள்ள தமிழ் இலக்கணம் தானே? குறிப்பாக, இலங்கைத் தமிழர் சொற்களின் முதலில் இ இடுவதோடு அதனைத் தெளிவாக ஒலிக்கவும் செய்கிறார்கள். ஒரு சில இடங்களில் இவற்றை ஏற்றுக் கொள்ளலாம் என்றால் ஏன் பிற இடங்களில் ஏற்றுக் கொள்ளக்கூடாது? இலக்கணம் என்பது சீரான விதியா இல்லை நமது பழக்கத்துக்கு ஏற்றவாறு ஒவ்வொரு சொல்லுக்கும் மாற்றிக் கொள்ளக்கூடியதா? வெகுமக்கள் ஆங்கில ஊடகங்களில் இவ்வாறு ஆங்கில இலக்கணம் சீர்மை இன்றி இருந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? //புதிய சொல் அறிமுகங்கள் பங்களிப்பவர்களையும் பயனர்களையும் அன்னியப்படுத்துகிறது.// பயனர்கள் அன்னியப்படுவதற்கான தரவு ஆதாரங்கள் உண்டா? நீங்கள் ஏற்றுக் கொள்ளும் வெகுமக்கள் ஊடகங்கள் அனைத்தில் இருந்தும் பயனர்கள் அன்னியப்படாமல் ஒன்ற முடிகிறதா? பயனர்கள் அன்னியப்படுகிறார்கள் என்று வெகுமக்கள் ஊடகங்கள் தங்கள் நடையை மாற்றிக் கொள்கின்றனவா? ஆங்கிலம் அறிந்த மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக கூடுதலாக ஆங்கிலம் கலக்கும் போக்கு உள்ளதா இல்லை அவ்வளவாக ஆங்கிலம் அறியாத மக்களும் பயன்பெற வேண்டும் நல்ல தமிழ் நடையைப் பேணும் போக்கு உள்ளதா? --இரவி (பேச்சு) 06:53, 31 மே 2012 (UTC) //யாருக்கு இந்தத் தன்னதிகாரம் இருக்கலாம்? தமிழ் விக்கிப்பீடியா இந்தத் தன்னதிகாரத்தைப் பெற யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்? வெகுமக்கள் ஊடகங்கள் முறை தவறி மொழியைச் சிதைக்கும் போது அந்த அதிகாரத்தை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? :) // தனி நபருக்கு இருக்கலாம், கல்வி சார்ந்த அமைப்புகளுக்கு இருக்கலாம். நாம் இங்கு கலைக்களஞ்சியம் படைக்கும் பொழுது சொந்தக் கொள்கைகளை, விருப்பு/வெறுப்புகளை விட்டு வர வேண்டும் (அது மொழி சீர்மையாக இருப்பினும் சரி). //புழக்கத்தில் இருப்பது எல்லாம் தமிழ்ப் பெயர் இல்லை. ஆங்கிலப் பெயர்களின் தமிழ் எழுத்துபெயர்ப்புகள் நிறைய உள்ளன.// பெயரை பெயராகப் பாருங்களேன். தமிழ்ப் பெயர், ஆங்கிலப் பெயராக பார்ப்பதால் தான் இனவெறி போலாகிறது மொழிவெறி. விக்சனரியில் வேண்டுமானால் சொல்லின் மூலம் கண்டறிய ஆராயலாம். //வெட்டி, ஒட்டுவதும் கூட பயன்பாடு தானே? வெகுமக்கள் ஊடகங்கள் கூட தமிழ் விக்கிப்பீடியாவின் ஆக்கங்களை அப்படியே எடுத்தாண்டுள்ளனர். தமிழ் விக்கிப்பீடியாவின் எழுத்து நடையில் உடன்படாமல் திருத்தி வெளியிடுகிறார்களா?// வெட்டி ஒட்டக்கூட பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என்பது என் கவலை. நான் பார்த்த வரை வெட்டி ஒட்டப் பட்ட பக்கங்கள் அனைத்தும் தானியங்கிப் பக்கம் தேடு பொறியில் வருவதற்காக. மக்கள் தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து *அவ்வளவாக* வெட்டி ஒட்டுவதில்லை என்பது என் கருத்து. தரவுடன் வருகிறேன். //பயனர்கள் அன்னியப்படுவதற்கான தரவு ஆதாரங்கள் உண்டா// தரவு இல்லை என்றாலும் பயனர்கள் அன்னியப்படுகிறார்கள் என்று உங்களுக்கு நன்கு தெரியும். பயனர் எண்ணிக்கையை தீர்மானிக்கும் முக்கிய காரணம் என்றறிந்தவர்கள் தரவு ஆதாரம் பெற ஏதேனும் முயற்சி எடுக்கப்பட்டதா? இருக்கும் மொழிநடையும் சொல் தேர்வும் "சரி", பயனர்களை அன்னியப்படுத்துவதில்லை என்பதற்கு எதேனும் தரவு உள்ளதா? பயனர்கள் யாரேனும் விக்கிப்பீடியா விட்டு விலகியிருக்கிறார்களா என்று கேட்டீர்கள், நீச்சல்காரன் விலகுவதாக பயனர் பக்கத்தில் இட்டுள்ளார். இவர் முதல் நபர் இல்லை என்று மட்டும் எனக்கு தெரியும். We can of course, start lying, avoid any cautionary tales and keep repeating "all is great", or you can actually confront the situation ஸ்ரீகாந்த் (பேச்சு) 05:04, 1 சூன் 2012 (UTC) //கல்வி சார்ந்த அமைப்புகளுக்கு இருக்கலாம்// கலைக்களஞ்சியம் படைப்பதும் கல்வி சார் முயற்சி தான். அரசு சார் கல்வி அமைப்புகளுக்கு மட்டுமே மொழியின் மீது முழு அதிகாரம் இருக்க வேண்டுமா? தமிழ் பல்வேறு நாடுகளில் கல்வி மொழியாக இருக்கும் நிலையில் இவற்றுக்கு இடையில் எப்படி சீர்மை பேணுவீர்கள்? தனியாட்களுக்கு இருக்கும் உரிமையை விட, அரசு அமைப்புகளுக்கு இருக்கும் உரிமையை விட விக்கிப்பீடியாவுக்கு இருக்கும் உரிமை மேலானது. ஏனெனில், இங்கு முடிவுகள் திறந்த நிலையில் எடுக்கப்படுகின்றன. தத்தம் கருத்தை முன்வைத்து சிறந்த முறையை நடைமுறைப்படுத்தச் செய்யும் உரிமை அனைவருக்கும் இருக்கிறது. //சொந்தக் கொள்கைகளை, விருப்பு/வெறுப்புகளை விட்டு வர வேண்டும் (அது மொழி சீர்மையாக இருப்பினும் சரி).// மொழியின் இலக்கணத்தைச் சுட்டிக்காட்டுவது சொந்தக் கொள்கையோ விருப்பு வெறுப்போ அன்று. //பெயரை பெயராகப் பாருங்களேன். தமிழ்ப் பெயர், ஆங்கிலப் பெயராக பார்ப்பதால் தான் இனவெறி போலாகிறது மொழிவெறி.// செருமனி பக்கத்தில் இடப்பக்கம் உள்ள பிற மொழி விக்கிப் பக்கங்களுக்கான இணைப்புகளைப் பாருங்கள். இடாயிட்சுலாந்து என்ற பெயரை செருமனியோடு வரலாற்றுத் தொடர்புடைய பல்வேறு நாடுகளும் பல்வேறு மொழிகளில் பல்வேறு விதமாக வழங்குகிறார்கள். பிரெஞ்சு மொழியில் Allemagne எனப்படுகிறது. Dansk மொழியில் Tyskland என்று அழைக்கபடுகிறது. அதே போல் ஆங்கிலத்தில் Germany என்று அழைக்கப்படும்போது அதனை ஆங்கிலப் பெயர் என்று தானே சுட்ட முடியும்? இடாயிட்சுலாந்துக்கு புதிதாக தமிழில் பெயர் வைத்தால் மிகையான தமிழ் நடை என்று கூறலாம். அதன் உண்மையான பெயரைத் தானே தமிழில் எழுதக் கேட்கிறோம்? இதில் எங்கு இனவெறி இருக்கிறது ? ஒரு பேச்சுக்கு, வட மொழியின் மூல மொழி ஒலிப்பைத் துல்லியமாக எழுதிக் காட்டத் தானே கிரந்தம் வந்தது? இது இனவெறியாகுமா? :) //வெட்டி ஒட்டக்கூட பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என்பது என் கவலை.// ஆங்கில விக்கிப்பீடியாவுக்குப் போல் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு இன்னும் இணைப்பு கொடுக்கக் கூடத் தான் ஆள் இல்லை :) தமிழ் விக்கிப்பீடியாவும் சரி தமிழ் இணையமும் சரி இன்னும் மிகவும் தொடக்க நிலையிலேயே உள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவின் நடைமுறையால் வரும் பயன்பாட்டுப் போக்குகளை அறிய இன்னும் காலம் வேண்டும். நான் கண்டவரை அச்சு ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளைப் பயன்படுத்திய வேளைகளில் அப்படியே தான் பயன்படுத்தி உள்ளார்கள். //தரவு இல்லை என்றாலும் பயனர்கள் அன்னியப்படுகிறார்கள் என்று உங்களுக்கு நன்கு தெரியும்// ஒவ்வொரு மாதமும் தமிழ் விக்கிப்பீடியா பெறும் பக்கப் பார்வைகள் கூடுகிறதே அன்று குறையவில்லை. பெரும்பாலான பயனர்களுக்கு தானாகச் சிந்தித்து ஒரு மொழிநடையை விரும்பும் அளவுக்கு நமது கல்வி முறை கற்றுக் கொடுக்கவில்லை. எந்த மொழி நடையானாலும் வேண்டிய தகவல் கிடைக்கிறதா எனப் பார்ப்பதாலேயே வெகுமக்கள் ஊடகங்கள் தம் பாட்டுக்குச் செயல்படுகின்றன. சில ஆண்டுகள் முன்பு புதுக்கோட்டை அருகே உள்ள அரசு பள்ளிக்கூடம் ஒன்றில் தமிழ் விக்கிப்பீடியா பயன்பாடு பற்றி அறிந்தோம். அந்தத் தலைமை ஆசிரியரிடம் உரையாடும் போது, "தமிழ் விக்கிப்பீடியாவின் நடையில் ஏதேனும் மாறுபாடு, சிரமம் காண்கிறீர்களா? மாணவர்கள் புரிந்து கொள்கிறீர்களா?" என்று மிகவும் தெளிவாகவே கேட்டேன். அவர் அப்படி எல்லாம் மாறுபட்டு ஒன்றும் தோன்றவே இல்லை என்றே குறிப்பிட்டார். பங்களிப்பாளர்கள் வேறு. பயனர்கள் வேறு. ஆங்கில விக்கிப்பீடியாவை விட்டும் கூடத் தான் எத்தனையோ காரணங்களுக்காக பங்களிப்பாளர்கள் விலகுகிறார்கள். அதற்காக ஆங்கில விக்கிப்பீடியா கொள்கைகளை மாற்றிக் கொண்டு உள்ளதா? இத்தனைக்கும் இங்கு எந்த இறுக்கமான மொழிக் கொள்கையும் கிடையாது. நீச்சல்காரனின் கட்டுரைகளிலும் சரி மற்ற கட்டுரைகளிலும் சரி யாரும் வலிந்து நடை மாற்றம் செய்ததாகவோ மாற்றச் சொல்லி உரையாடியதாகவோ எனக்குத் தெரியவில்லை. பேச்சு:காப்பி, பேச்சு:பாலம் போன்ற உரையாடல்களைக் கண்டால் தகுந்த இடங்களில் வழக்கத்தில் உள்ள சொற்களுக்கும் நாம் முன்னுரிமை அளிப்பதையும் காணலாம. கண்மூடித்தனமாக புதிய தமிழ்ச் சொற்களை ஆக்குவதில்லை. அவர் பொதுவாக சில கேள்விகளை எழுப்பினார். நானும் பொதுவாகவே பதில் அளித்துள்ளேன். நீங்கள் விக்கிப்பீடியாவின் நடைமுறையை நன்கு அறிந்தவர். உரையாடி, கருத்தின் அடிப்படையில் முடிவுகள் எடுக்க முடியுமே தவிர, பங்களிப்பாளர் விலகுவார் என்பதற்காக முடிவு எடுக்க முடியாது. கிரந்தம் போன்ற விசயங்களில் மாற்றுக் கருத்து எழுவதையும் இளக்கமான கொள்கை தேவைப்படுவதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், வெகு மக்கள் ஊடக நடையைத் தான் பின்பற்ற வேண்டும் என்பது நாளடைவில் தமிங்கில நடையை நோக்கிச் செல்வதிலும் தமிழ் இலக்கண முறைகளைக் குப்பையில் போடுவதிலும் போய் தான் முடியும். தமிழ் விக்கிப்பீடியாவின் மொழி நடையைக் கருத்தில் கொண்டு பங்களிப்பில் இருந்து விலகுபவர்கள், தமிழ்ச் சமூகத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் தேவை குறித்து சரியான கண்ணோட்டம் கொண்டிருக்கவில்லை என்பதே எனது தனிப்பட்ட கருத்து. நன்றி--இரவி (பேச்சு) 05:43, 1 சூன் 2012 (UTC) |
Portal di Ensiklopedia Dunia