விக்கிப்பீடியா பேச்சு:பெண்ணியமும் நாட்டார் மரபும் 2025

பரப்புரை

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் போட்டி என்பதால் விக்கிப் பயனர்கள் எளிதில் கலந்து கொள்ள முடிகிறது. புதிய நபர்களைப் பங்கெடுக்கச் செய்ய ஏதேனும் பகுப்புகளையோ கட்டுரைத் தலைப்புகளோ பரிந்துரைக்கலாம். கடந்த ஆண்டு போல மதுரைப் பயனர்கள் இணைந்து பிப்ரவரி 22 இல் புதியவர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கை நடத்தத் திட்டமிடுகிறோம். மேலும் வேறு ஊர்களில் ஏதேனும் பரப்புரைப் பயிலரங்கம் நடத்த விரும்பினாலும் தொடர்பு கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 10:47, 9 பெப்பிரவரி 2025 (UTC)

மதுரை

பிப்ரவரி 22 இல் மாவட்ட அளவில் சிறிய சந்திப்பில் முன்னர் பயிற்சி பெற்றவர்களை அழைத்து ஒரு பயிலரங்கை இப்போட்டி தொடர்பாக, மதுரை விக்கிப்பீடியர்கள் இணைந்து திட்டமிட்டுள்ளோம். ஆர்வமுள்ளவர்களைப் பதிவு செய்து கொண்டு கலந்துகொள்ளச் செய்யலாம். மார்ச் 8 மகளிர் தினத்தையொட்டி சென்னையில் ஒரு நிகழ்வினை நடத்த திட்டமிட்டுவருகிறேன். திட்டமிறுதியானால் இங்கே பகிர்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 03:51, 16 பெப்பிரவரி 2025 (UTC)
திட்டமிட்டவாறு சிறிய பயிலரங்கு காளவாசல் பகுதியிலுள்ள பிளேஜ் என்ற தனியார் நிறுவன கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் பெண்ணியமும் நாட்டார் மரபும் தொடர்பான கட்டுரைப் போட்டி மற்றும் பல்லூடகப் போட்டி தொடர்பாகப் பயிற்சியளிக்கப்பட்டது. பயனர்:Dr.P.Thendral, பயனர்:Dr.M.PANCHAVARNAM_ram, பயனர்:Sevarkodisenthil, பயனர்:Parthi1102, பயனர்:Devasenathipathi1957, பயனர்:Manohar_Trc, பயனர்:ShaliniMSW, பயனர்:Priyababu.s, பயனர்:SELVAKAMATCHI SK ஆகியோர் உட்பட 10 நபர்கள் கலந்து பயிற்சி பெற்றனர். நான், மகாலிங்கம், பயனர்:Mohammed Ammar அகியோர் பயிற்சியளித்தோம். -நீச்சல்காரன் (பேச்சு) 05:53, 24 பெப்பிரவரி 2025 (UTC)

சென்னை

மார்ச் 8 ஆம் நாள் ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்துடன் இணைந்து சென்னை மேக்ஸ்முல்லர் பவனில் ஒரு நாள் பயிலரங்கைச் சில சென்னை பயனர்களுடன் திட்டமிட்டுள்ளேன். இந்தக் கருப்பொருளில் வேறு இடங்களில் பயிலரங்கோ மரபு நடையோ போட்டிக் காலத்திற்குள் திட்டமிட விரும்பினால் தொடர்பு கொள்ளலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 05:53, 24 பெப்பிரவரி 2025 (UTC)

பொருத்தமான அமைப்புடன் இணைந்து நல்ல முன்னெடுப்பு. வாழ்த்துகள். - இரவி (பேச்சு) 10:41, 24 பெப்பிரவரி 2025 (UTC)
இப்பயிலரங்கு சிறப்பாகச் சென்னையில் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்றது. பயனர்:Yugith_Yuvaraj, பயனர்:Smilin_sheeba, பயனர்:Kokilababu, பயனர்:Suganyawrites, பயனர்:Vigneshwri8s, பயனர்:Sithi Zeenath Nisha, பயனர்:பச்சக்கிளி, பயனர்:இந்துமதி இளங்கோ, பயனர்:Tejeshranay, பயனர்:Kalayarassy, பயனர்:விவேக் ஸ்ரீனிவாசன், பயனர்:Monisha selvaraj, பயனர்:Jaisakthivel unom, பயனர்:Tharanginisakthi, பயனர்:Dxersguide, பயனர்:Alexander Savari, பயனர்:Raja_Kannikovil, பயனர்:Tharanginisakthi, பயனர்:சத்யஸ்ரீ, பயனர்:Thendralbreeze உள்ளிட்ட சுமார் நாற்பது நபர்கள் கலந்து கொண்டு கற்றுக் கொண்டனர். பெரும்பாலானவர்கள் எழுத்துப்பின்புலம் என்பதால் விரைவாகக் கற்றுக் கொண்டு பங்களிக்கவும் தொடங்கினர். திட்டமிட்டவாறு வேறு சென்னைப் பயனர்களால் கடைசி நேரத்தில் கலந்து கொள்ள இயலவில்லை. நான் மட்டுமே இயன்றவரை பயிற்சியளித்தேன். -நீச்சல்காரன் (பேச்சு) 06:37, 10 மார்ச்சு 2025 (UTC)
மகிழ்ச்சி. சிறப்பான நிகழ்வை முன்னெடுத்து ஒருங்கிணைத்துப் பயிற்சி அளித்தமைக்கு நன்றியும் பாராட்டுகளும். - இரவி (பேச்சு) 09:21, 10 மார்ச்சு 2025 (UTC)

கோவை

மார்ச் 29 ஆம் நாள் கோவை விக்கிப்பீடியர்களுடன் நாட்டார்மரபு சார்ந்து ஒரு பயிலரங்கைத் திட்டமிட்டுவருகிறேன். யாரேனும் ஒருங்கிணைப்பில் இணைய விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். முழுக்கப் புதுப் பயனர்களுக்கான அறிமுகமாகவும் இக்கருப்பொருள் சார்ந்தவர்களிடம் விக்கிப்பீடியாவைக் கொண்டு சேர்க்கும் விதமாகவும் திட்டமிடுகிறோம். -நீச்சல்காரன் (பேச்சு) 09:06, 24 மார்ச்சு 2025 (UTC)

நேற்றைய கோவை நிகழ்வு கே.ஜி.ஐ.எஸ்.எல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பயனர்:Elanchezhiyan A.L, பயனர்:Gayathri_Mukil, பயனர்:Prabhahar S, பயனர்:பழனிச்சாமிஅக்னிதேவன், பயனர்:Baalasaraswathy rams, விக்னேஷ், முனைவர் ரம்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயிற்சியெடுத்தனர்.-நீச்சல்காரன் (பேச்சு) 04:50, 30 மார்ச்சு 2025 (UTC)
👍 விருப்பம் - இரவி (பேச்சு) 05:24, 30 மார்ச்சு 2025 (UTC)

பரவலாக்கம்

இரண்டு மாதம் நடைபெறும் இப்போட்டியைப் பரவலாக்க என்ன செய்யலாம்? விக்கிக்கு மேலே அறிவிப்புப் பலகை கொடுக்கலாம். பெண்ணியம் அல்லது நாட்டார் மரபு சார்ந்த எழுத்தாள அமைப்புகளுடன் இணைந்து ஏதேவது ஒரு பயிற்சி வகுப்பெடுக்கலாமா? புதியவர்களை எவ்வாறு உள்ளே கொண்டு வரலாம்? cc: @கி.மூர்த்தி and Selvasivagurunathan m: -நீச்சல்காரன் (பேச்சு) 07:55, 12 பெப்பிரவரி 2025 (UTC)

@Neechalkaran மீடியாவிக்கி:Sitenotice உடனடியாக செயல்படுத்தலாம். மற்ற முயற்சிகள் குறித்து யோசித்து, எனது பரிந்துரைகளை இங்கு தெரிவிக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:53, 12 பெப்பிரவரி 2025 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா அளவில் பங்கேற்பவர்கள், வெல்பவர்களுக்கு என்ன பரிசு என்று விரைந்து அறிவித்தால் பங்கேற்பை ஊக்குவிக்கலாம். --இரவி (பேச்சு) 14:34, 12 பெப்பிரவரி 2025 (UTC)
தமது பெயரை பதிவு செய்து பங்களித்து வருபவர்கள் / பங்களிக்க இருப்பவர்கள் ஆகியோரை இணையவழிக் கூட்டம் ஒன்றின் வழியாக சந்திக்கலாம். ஆண்டுதோறும் இயங்கும் இந்தத் திட்டம் குறித்து அவர்களுக்கு விளக்கிக் கூறினால், அவ்வளவாக பரிச்சயம் இல்லாதவர்களுக்கு நல்லதொரு புரிதல் ஏற்படும். அனுபவம் மிக்கவர்கள் உதவிக் குறிப்புகளை தரலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:46, 13 பெப்பிரவரி 2025 (UTC)

தலைப்புகள் தேவை

இப்போட்டி தொடர்பாக எந்தெந்த தலைப்புகளில் எழுதுவது என்று குழப்பமாக உள்ளது. https://tools.wikilovesfolklore.org/fnf/ கருவி எப்படிப் பயன்படுத்துவது என்று வழிகாட்டுதல் தேவை. தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கு உகந்த கட்டுரைகளை முன்னுரிமை கொடுத்து வரிசைப்படுத்தினால் போட்டியில் பங்கேற்பைக் கூட்ட முடியும் என்று நினைக்கிறேன். இரவி (பேச்சு) 14:34, 12 பெப்பிரவரி 2025 (UTC)

நானும் சர்வதேசப் போட்டிக் குழுவில் கேட்டுப் பார்த்தேன். நெருக்கமான தலைப்புகளைச் சேர்த்துள்ளேன். வேறு பகுப்புகளோ தலைப்புகளோ இருந்தால் நீங்களும் பரிந்துரைத்து உதவ வேண்டுகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 03:31, 16 பெப்பிரவரி 2025 (UTC)
தலைப்புகள் பட்டியலைத் தந்தமைக்கு நன்றி. //கட்டுரைகளின் கருப்பொருள்கள் நாட்டுப்புறக் கலைகளுடன் தொடர்புடைய பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும்// என்கிற விவரிப்பு சற்று குழப்பமாக இருந்தது. நாட்டார் மரபும் பெண்ணியமும் intersect ஆகும் தலைப்புகள் என்பது மிகவும் அருகியதாக இருந்தது. இப்போது தரப்பட்டுள்ள பட்டியலைப் பார்த்தால் பெண்ணியம் தனி, நாட்டார் மரபு தனியாகத் தோன்றுகிறது. அதிலும் பெண்ணியம் என்பதற்கான வரையறை மிகவும் தளர்வாக இருக்கிறது. எனினும், கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் கட்டுரைகள் ஏற்கப்படும் வரை சரி. - இரவி (பேச்சு) 13:48, 19 பெப்பிரவரி 2025 (UTC)
ஆமாம் இரண்டும் தனித் தனி தான். கருப்பொருள்கள் இரண்டும் இணைய வேண்டியதில்லை. இரு வேறு திட்டங்களின் கூட்டுப் போட்டியாக அமைத்துள்ளனர். ஏதேனும் ஒரு கருப் பொருளுடன் தொடர்பில் வந்தாலே கட்டுரைகள் ஏற்கப்படும். -நீச்சல்காரன் (பேச்சு) 17:57, 19 பெப்பிரவரி 2025 (UTC)
நன்றி. இரவி (பேச்சு) 10:41, 24 பெப்பிரவரி 2025 (UTC)

கட்டுரை தலைப்பு

தஞ்சாவூர், நாகப்பட்டினம் கல்லூரிகளில் பரப்புரை

தமிழ் விக்கிப்பீடியா குறித்து, தமிழ்நாடு தமிழ்ச் சங்கம், நெதர்லாந்து சூரியத் தமிழ்த் தொலைக்காட்சி இணைந்து நடத்தும் நாகப்பட்டினம் கல்லூரி மாணவர்களுக்கான இணையத் தமிழ் பயிலரங்கில் 05.03.2025 அன்று விக்கிப்பீடியா குறித்து உரையாற்ற உள்ளேன். இதில் பெண்ணியமும் நாட்டார் மரபும் 2025 என்பதை முன்னிறுத்தி உரையாற்ற உள்ளேன். இந்த இணையவழி அறிமுக நிகழ்வினை தொடர்ந்து நேரடி பயிற்சிக்குக் கல்லூரி விருப்பம் தெரிவித்தால் தகவல் தருகிறேன். இதே நாளில் நேரடிப் பயிற்சியாக எமது கல்லூரியில் (மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, தஞ்சாவூர்) முதுகலை ஆங்கில மாணவர்களுக்கு விக்கிப்பீடியாவினை அறிமுகம் செய்ய உள்ளேன். புதிதாகப் பயனராகப் பங்களித்துவரும் திரு பார்த்திபன் என்னுடன் இணைந்து பயிற்சியில் கலந்து கொள்வார். சத்திரத்தான் (பேச்சு) 09:39, 26 பெப்பிரவரி 2025 (UTC)

சிறப்பு. -நீச்சல்காரன் (பேச்சு) 02:10, 27 பெப்பிரவரி 2025 (UTC)
நல்ல முயற்சி --கி.மூர்த்தி (பேச்சு) 02:30, 27 பெப்பிரவரி 2025 (UTC)

கட்டுரைகளை மேம்படுத்தல்

கடந்த வாரம் நடைபெற்ற சென்னைப் பயிலரங்கினையொட்டி, பல புதிய பயனர்கள் கட்டுரை உருவாக்குவதை நீங்களும் பார்த்திருக்கலாம். சிலர் உருவாக்கிய கட்டுரைகளில் களஞ்சியத்திற்குத் தேவையற்ற செய்திகளும் விக்கியாக்கம் செய்ய வேண்டியுமுள்ளது. சில கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கமை சிக்கலும் எழலாம். வரைவு வெளியில் சில கட்டுரைகளை இட்டுள்ளேன். மற்றவர்கள் சரிபார்த்துக் கட்டுரையைத் திருத்தி உதவ வேண்டுகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 18:52, 13 மார்ச்சு 2025 (UTC)

சுமைதாங்கிக்கல் கதைகளும் பெண்களும்

சுமைதாங்கிக்கல் என்பது கருவுற்ற பெண்கள் குழந்தைப் பெறும்முன் இறந்து போக அவர்கள் நினைவாக வைக்கப்பெறும் கல் ஆகும். இத்தகு சூழலில் இறந்து போன பெண்கள் பற்றிய வாய்மொழிக் கதைகள் சுமைதாங்கி கதைகள் எனப்படுகின்றன. தமிழோடு திவ்யா (பேச்சு) 11:55, 17 மார்ச்சு 2025 (UTC)

@தமிழோடு திவ்யா: மேற்கோள்களோடு சுமைதாங்கி கட்டுரையை விரிவுபடுத்தலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 13:02, 17 மார்ச்சு 2025 (UTC)
அதற்கான ஆய்வில் ஈடுபட்டு உள்ளேன். விரைவில் விரிவாக்குகிறேன். தமிழோடு திவ்யா (பேச்சு) 15:19, 17 மார்ச்சு 2025 (UTC)

புதிய வசதி

@Neechalkaran உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவியில் சமூகம் வழங்கக் கூடிய கட்டுரைத் தலைப்புகளை பரிந்துரைகளாகத் தரும் வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இது இந்தப் போட்டிக்கு உதவும் எனில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 17:39, 26 மார்ச்சு 2025 (UTC)

கட்டுரைகள் நீக்கம்

பெண்ணியமும் நாட்டார் மரபும் 2025 போட்டிக்காக நான் தொகுத்த கட்டுரைகளில் சுமார் 100 கட்டுரைகள் வரை தகுதி பெறவில்லை என அறிகிறேன்.கட்டுரை தகுதிக்காக வரையறுக்கப்பட்ட தகுதியுடைய கட்டுரைகள் கருவியினால் ஏற்கப்பட்ட பின்னர் விரிவுப்படுத்தவும் எனக் கூறுவது என்ன நடைமுறை என்று தெரியவில்லை. முதன்மைக் கட்டுரையிலிருந்து தமிழ் கட்டுரையினை ஆய்வு செய்தால் பல கட்டுரைகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தெரியும். இந்நிலையில் போட்டியிலிருந்து விலகிகொள்கிறேன். Chathirathan (பேச்சு) 07:43, 11 மே 2025 (UTC)Reply

தகுதி பெறவில்லை என்பதைக் குறையாகக் கருதத் தேவையில்லை. கருவியில் மேற்கோள்கள்/அட்டவணை போன்றவை சொற்களின் எண்ணிக்கையை கூட்டும் அதனால் தான் நடுவர்கள் படித்துப்பார்த்து ஏற்கிறார்கள். கருவியில் முதல்கட்ட அளவுகள் தான் கணக்கிடப்படும் நடுவர்கள் மதிப்பீட்டில் மற்றவை கணக்கில் ஏற்கப்படும். இம்முறை எனது கட்டுரையும் ஏற்கப்படவில்லை. தொடக்கக் காலத்தில் இன்னும் இறுக்கமான விதிகள் இருந்தன. எனவே தவறாக எண்ண வேண்டாம். தொடர்ந்து வளர்முகமாகவே எடுத்துக் கொண்டு பங்களிப்போம்.
தகவலுக்கு நன்றி. உங்கள் பதிலின் சாரம்சத்தினைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஒருவர் ஏற்றதை மற்றவர் நிராகரித்ததுதான் இங்கு விவாதம். இதில் தனிப்பட்ட இழப்பு என்று கருத எதுவும் இல்லை. நான் தொகுத்த கட்டுரைகளில் சுமார் 50 வரை போதிய தகவல்கள் இல்லாததால் என்னால் கருவி வழியே சமர்பிக்க இயலவில்லை. இதுவும் கடந்துபோகும். நன்றி.--Chathirathan (பேச்சு) 15:56, 29 மே 2025 (UTC)Reply

பின்னூட்ட உரையாடல்

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளைவிட இம்முறை புதுப் பயனர்கள் பலர் வந்துள்ளனர். இருவகையில் போட்டிக் கருவிகள் புதிய கேம்விஸ், பழைய பவுண்டைன் என சர்வதேச ஒருங்கிணைப்பிலும் சில குழப்பங்கள் நிகழ்ந்தன. போட்டித் தலைப்புகளில் சிலருக்குக் குழப்பமிருந்தன. கட்டுரைகளின் எண்ணிக்கையில் தமிழ் முன்னிலை பெற இயலவில்லை. இந்தப் போட்டிக் காலம் நிறைவடைந்தாலும் மொத்தத் திட்டத்தின் போக்கு எவ்வாறு இருந்தது மாற்றிக் கொள்ள வேண்டியவை, பின்பற்ற வேண்டியவை போன்ற படிப்பினைகளை அறிந்து கொள்ளவிரும்புகிறேன். இந்தத் திட்டத்தை எவ்வாறு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யோசிக்க வேண்டும். இதன் மூலம் அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ் விக்கிப்பீடியர்கள் முன்னிலை வகிக்க இயலும் என நம்புகிறேன். இப்போட்டியில் கலந்து கொண்டவர்கள், கலந்து கொள்ள ஆர்வம் கொண்டவர்கள், இக்கருப் பொருளில் ஆர்வம் கொண்ட அனைவரும் கலந்துரையாடலாம் எனத் திட்டமிடுகிறேன். ஜூன் 1 காலை 10 மணியளவில் மதுரையில் இருப்பவர்கள் நேரிலும் மற்றவர்கள் இணையவழியில் (https://meet.google.com/eyv-xaha-nvt) சந்திக்க அழைக்கிறேன். கலந்து கொண்டவர்களுக்குத் தனியாக மின்னஞ்சலிலும் அழைப்பை அனுப்புகிறேன். உரையாடல் தலைப்புகள்: போட்டியில் பிடித்தவை பிடிக்காதவை, உருவாக்கிய கட்டுரைகளை எவ்வாறு வளர்த்தெடுக்கலாம், இக்கருப்பொருளில் உள்ளடக்கங்களை அதிகரிக்க வேறு என்ன திட்டங்களை முன்னெடுக்கலாம், என்ன உதவிகள் தேவைப்படும், பொதுவான கேள்விகள். இவை குறித்து ஒவ்வொருவரும் தங்கள் பின்னூட்டத்தைப் பகிரலாம். -நீச்சல்காரன் 14:58, 29 மே 2025 (UTC)Reply

நேற்றைய நிகழ்வில் Balu1967, கி.மூர்த்தி, Alexander Savari, Monisha selvaraj, TNSE Mahalingam VNR, Meenawriter11, Tharanginisakthi, மேலும் இரு புதுப் பயனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டிகுறித்த பின்னூட்டமும் பொதுவான சில ஐயங்களும் இந்த சந்திப்பில் உரையாட்டப்பட்டன.
கேம்விஸ் கருவியில் சமர்ப்பிக்கும் போதும் மதிப்பிடும் போதும் சொல் எண்ணிக்கையில் வேற்றுமை உள்ளதால் சில கட்டுரைகளை ஏற்கமுடியாமல் போனது குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த முறை தெளிவாக விளக்கமும் கருவியில் சரியான கணக்கீடும் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் பல கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும் பிற மொழியினர், புதிய தலைப்புகளுக்கான பரிந்துரைகள், மொழிபெயர்க்காமல் புதிய கட்டுரை எழுதுபவர்களுக்குத் தனி அங்கீகாரம் போன்றவை உரையாடப்பட்டன. கிரந்தப் பயன்பாடு, பகுப்பைத் தேடுதல், தேவையான தலைப்புகளைக் கண்டுபிடித்தல் போன்ற பொது உரையாடலும் நிகழ்ந்தன. -நீச்சல்காரன் (பேச்சு) 08:40, 2 சூன் 2025 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya