விசுவமடு
விசுவமடு இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஏற்றுநீர்ப்பாசனத்திட்டத்தின் மூலம் குடியமர்த்தப்பட்ட ஒரு விவசாயக் கிராமமாகும். இது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் உள்ளது. 9°18'00"வ 80°41'00"கி என்னும் ஆள்கூறுகளைக் கொண்டு அமைந்துள்ளது. இப் பிரதேசத்தின் விவசாய செய்கைக்கு விசுவமடுக்குளம் நீர்ப்பாசன தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.[1] விசுவமடு என்பது ஆரம்பத்தில் ஒரு குடியேற்றதிட்டம் என்பதாக உருவாக்கப்பட்டபோதும் இன்று பல கிராமங்கள் பல கிராம அலுவலர் பிரிவுகள் என்பவற்றை தாங்கிய ஒரு பிரதேசத்தை குறிப்பதாக உள்ளது. விசுவமடு மேற்கு, விசுவமடு கிழக்கு, மாணிக்கபுரம், வள்ளுவர்புரம், தேராவில் ஆகிய முல்லைத்தீவு மாவட்ட கிராம அலுவலர் பிரிவுகளையும் பிரமந்தனாறு, புன்னைநீராவி ஆகிய கிளிநொச்சி மாவட்ட கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கிய பிரதேசம் விசுவமடு பகுதி என்று அழைக்கப்படுகிறது. இது ஆரம்பகாலத்தில் படித்த வாலிபர் குடியேற்ற திட்டமாக உருவாக்கப்பட்டது. பின்னர் கிராம விஸ்தரிப்பு திட்டம் என்ற பெயரில் படித்த வாலிபர் குடியேற்ற திட்டத்திற்கு மேலதிகமான காணிகள் அரசால் வழங்கப்பட்டது. அதன் பின்னர் மலையகத்தில் இருந்து தொழில்வாய்ப்பு தேடியும் இலங்கையில் ஏற்பட்ட இனரீதியான மோதல்களை அடுத்தும் பலர் இந்த விசுவமடு பகுதியில் வந்து குடியேறி உள்ளனர். பாரதிபுரம், மாணிக்கபுரம், வள்ளுவர்புரம், இளங்கோபுரம் என்னும் கிராமங்கள் இவ்வாறு குடியேறிய மலையக மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களாகும்.
பாடசாலைகள்
கோவில்கள்இந்துக் கோவில்கள்
கிறித்தவ ஆலயங்கள்
சமூக அமைப்புகள்
விளையாட்டுக் கழகங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia