இலங்கையின்மாவட்டங்கள் (disticts) என்பவை இரண்டாம்-தர நிருவாக அலகுகளாகும். இவை மாகாணங்களுக்கு உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை நிர்வாகம், தேர்தல் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட அலகுகளாகும். இலங்கையின் 9 மாகாணங்களில் 25 மாவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.[1] ஒவ்வொரு மாவட்டமும் நடுவண் அரசினால் நியமிக்கப்படும்[2]மாவட்டச் செயலாளர் என அழைக்கப்படும் இலங்கை நிர்வாகச் சேவை அதிகாரியின் கீழ் நிருவகிக்கப்படுகிறது.[3] நடுவண் அரசு மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புகளை ஒருங்கிணைபதே மாவட்டச் செயலாளரின் முக்கிய பணியாகும். மாவட்ட ரீதியான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது, மாவட்டத்துக்குக் கீழுள்ள சிறிய நிருவாக அலகுக்கு உதவிகள் வழங்குவது போன்றவையும் மாவட்ட செயலாளரின் பணிகளாகும்.[4] அத்துடன் வருவாய் சேகரிப்பு, மாவட்டங்களில் தேர்தல்களை ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளும் முக்கியமானவையாகும்.[5]
மாவட்டம் ஒவ்வொன்றும் பல பிரதேச செயலகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் மொத்தம் 256 பிரதேச செயலகங்கள் உள்ளன.[1] பிரதேச செயலகங்கள் மேலும் கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[6]
மாவட்டத் தரவுகள்
2012 கணக்கெடுப்பின் படி, மாவட்ட ரீதியாக மக்கள்தொகை தரவுகள்:
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.
↑"Vision & Mission". District Secretariats Portal. Ministry of Public Administration & Home Affairs, Sri Lanka. Archived from the original on 13 மே 2009. Retrieved 21 சூலை 2009.
↑"About Us". Vavuniya District Secretariat. Archived from the original on 12 நவம்பர் 2010. Retrieved 29 சூலை 2009.
↑"Performs Report and Accounts—2008"(PDF). District and Divisional Secretariats Portal—Ministry of Public Administration and Home Affairs. Archived from the original(PDF) on 2011-10-03. Retrieved 2009-07-29.