விசையியல்
விசையியல் (Mechanics) என்பது வெளி விசைக்கு உட்படுத்தப்படும் பொருட்களையும் அவற்றின் விளைவுகளையும் விபரிக்கும் இயற்பியல் துறையாகும். ஐசாக் நியூட்டன், கலிலியோ, கெப்ளர் போன்ற அறிஞர்கள் மரபார்ந்த விசையியலுக்கான (Classical Mechanics) அடித்தளத்தை அமைத்தனர்.[1][2][3] முக்கியத்துவம்விசையியல் துறை இயற்பியலின் மூலத்துறையாகும். மனிதர்களால் அவதானிக்கக்கூடிய வெளிஉலகின் இயல்புகளை இது விளக்குகிறது. அண்டத்தில் உள்ள அணைத்து விதமான பொருட்கள் மற்றும் துகள்களின் இயக்கம் நான்கு அடிப்படை இடைவினை அல்லது விசைகளால் (ஈர்ப்பு, வலிமை மிக்கது, வலிமை குன்றியது, மின்காந்த இடைவினை) அமைகிறது. இந்த எல்லா விசைகளையும் அவற்றின் விளைவுகளையும் பற்றிய அறிவியலும் இத்துறையின் கீழ் வருகின்றன. இது தவிர விசையியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தொடர்பான கிளைத்துறை பயன்பாட்டு விசையியல் (Applied Mechanics) எனப்படும். இம்முறையில் கட்டமைப்புகள் (Structures), இயங்கமைப்புகள் (Mechanisms), இயந்திரங்கள் (Machines) போன்றவற்றை வடிவமைக்கவும், பகுப்பாய்வு செய்யவும் விசையியல் பயன்படுகிறது. மரபு விசையியலும் குவாண்டம் விசையியலும்மரபு விசையியல் தொன்மையானது. அண்ட அவதானிக்கக்கூடிய பொருட்களையும் மீதான விசைகளையும் அவற்றின் வினைகளையும் எடுத்துறைக்கப் பயன்படுகிறது. குவாண்டம் பொறிமுறையும் அடிப்படைத்துகள்கள், குவாண்டாக்கள் இடையேயான உறவுகளை விளக்குகிறது. இது பெரும்பாலும் கருத்தியல் (theoretical), சோதனை (experiment) இயற்பியலில் அதிகம் பயன்படுகிறது. பிரிவுகள்விசையியல் ஆனது நிலையியல், இயக்கவியல், அசைவு விபரியல், பயன்பாட்டு விசையியல், வான் விசையியல், தொடர்ம விசையியல், புள்ளிவிபரநிலையியக்கவியல் என்று பலவகைப்படும். நிலையியல்நிலையியல் என்பது நிலையாக இருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் விசை, திருப்புவிசை போன்றவற்றை பகுப்பாய்வு செய்ய உதவும் விசையியலின் ஒரு பிரிவாகும். இயக்கவியல்இயக்கவியல் எந்திரவியலின் ஒரு பிரிவாகும். பொருள்களின் மீது விசை செயல்படும் போது, அவற்றின் இயக்கங்களில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்களினால் பொருள்களின் கணித, இயல் நிலைகளை அறிய உதவும் பிரிவு இயக்கவியல் ஆகும். அணுக்கள், கிரகங்கள், சடப்பொருள்கள் என அனைத்தின் இயக்கத்தையும் விளக்கும் நடைமுறைக் கோட்பாடுகள் இவ்வியலில் உண்டு. கலிலீயோ, கெப்ளர் மற்றும் நியூட்டன் ஆகியவர்கள் பண்டைய இயக்கவியலுக்கு அடிதளமிட்டனர். அசைவு விபரியல்அசைவு விபரியல் என்பது ஒரு பொருளின் அசைவை அதன் நிலை, வேகம், வேக அதிகரிப்பு விகிதம் போன்ற கூறுகளால் விபரித்தல் ஆகும். இது விசையியலின் மற்றுமொரு பிரிவாகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia