மேக்ஸ் பிளாங்க்
மக்ஸ் பிளாங்க் (Max Planck) எனப் பரவலாக அறியப்பட்ட கார்ல் ஏர்ண்ஸ்ட் லுட்விக் மார்க்ஸ் பிளாங்க் (ஏப்ரல் 23, 1858 – அக்டோபர் 4, 1947) ஒரு ஜேர்மன் இயற்பியலாளர் ஆவார். இவரே கதிரியக்க அலை வீச்சுக் கோட்பாடுகளின் நிறுவனர் (Quantum Theories)எனக் கருதப்படுவதோடு இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான இயற்பியலாளர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். வரலாறுபிளாங்க் ஜெர்மனியின் கீல் நகரில் 1858 ஆம் ஆண்டு பிறந்தார்.மரபுவழியாக அறிவார்ந்த குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவர். இவரது தந்தை வழிக் கொள்ளுப் பாட்டனும் , பாட்டனும் இறையியல் கொட்டிங்கனில் பேராசிரியராகப் பணியாற்றியவர்கள். தந்தை கீயெல்லிலும், மியூனிச்சிலும் ஒரு சட்டத்துறைப் பேராசிரியராக இருந்தார். தந்தையின் உடன்பிறந்தார் ஒருவர் நீதிபதியகப் பதவி வகித்தார். இவர் பெர்லின் முனிச் பலகலைக் கழகத்தில் பயின்று, தமது 21-ஆம் வயதில் முனிச் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் 'டாக்டர்' பட்டம் பெற்றார். சிறிது காலம் முனிச் பல்கலைக் கழகத்திலும் பிறகு கீல் பல்கலைக் கழகத்திலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1880 ஆம் ஆண்டில் பெர்லின் பல்கலைக் கழகத்தில் இவர் பேராசிரியர் ஆனார். அங்கு 1928 ஆம் ஆண்டில் தமது 70ஆம் வயதில் ஓய்வு பெறும் வரையில் பணிபுரிந்தார். ஆய்வுகள்கருப்புப்பொருள் கதிர்வீச்சு1894 இல் பிளாங்க் கருப்புப்பொருள்-கதிர்வீச்சின் பற்றி ஆராயத் தொடங்கினார். குறைந்தபட்ச எரிசக்தி மூலம் அதிகபட்ச ஒளியினை மின் விளக்குகள் மூலம் உருவாக்குவதற்காக மின்சார நிறுவனங்கள் அப்போது அவரை நியமித்திருந்தார்கள். 1859 ஆம் ஆண்டில் இந்த கதிர்வீச்சுப் பற்றி கிர்ச்சாப் குறிப்பிட்டுள்ளார். "ஒரு கருப்பான பொருளிலிருந்து எப்படி ஒரு தீவிரமான மின்காந்த கதிர்வீச்சு எதை சார்ந்து இருக்கும்மென்றால் அந்த கதிர்வீச்சின் அதிர்வெண் அடிப்படையிலா அல்லது அந்தப் பொருளின் வெப்பநிலையைச் சார்ந்தும் இருக்குமா என்று கேட்டார்?". இந்தக் கேள்விக்கான பதில் பரிசோதனைகள் மூலம் விளக்கப்பட்டது ஆனால் இந்த சோதனைகளின் முடிவுகள் எந்தவொரு கோட்பாட்டோடும் ஒத்துப்போகவில்லை. வில்லியம் வியன் அவர்கள் வியன் விதிகளை முன்மொழிந்தார், இது அதிக அதிர்வெண்களில் நடத்தையை சரியாக கணித்து, ஆனால் குறைந்த அதிர்வெண்களில் தோல்வியடைந்தது. இந்த கதிர்வீச்சு குறித்த மற்றொரு அணுகுமுறை, ரேலே ஜீன்ஸ் விதிகள் விளக்க முற்பட்டது பின்னர் "புறஊதா பேரழிவு" என்று இந்த விதி அறியப்பட்டது, ஆனால் இது பல பாடப்புத்தகங்களுக்கு முரண்பாடாக இருந்தது மேலும் இது பிளாங்கிற்கு ஒரு உந்துதலாக இருந்ததில்லை.[1] ![]() 1899 ஆம் ஆண்டில் மின்காந்த கதிர்வீச்சு சிக்கலுக்கு பிளாங்க்கின் முதன் முதலாக ஒரு தீர்வை முன்மொழிந்தார் இதை பிளாங்க், "அடிப்படைக் கோளாறுக்கான கோட்பாடு" என்று அழைத்தார் மேலும் இது அவருக்கு வியன்ச் சட்டத்தை ஒரு சிறந்த அலையியற்றியின் சீரற்ற தன்மை பற்றி பல அனுமானங்களிலிருந்து பெற உதவியது, இது வியன்-பிளாங்க் விதியாக அழைக்கப்படுகிறது. இந்தப் புதிய விதியை நிரூபிக்கும் சோதனைகள், பிளாங்கின் விதியை உறுதிப்படுத்தவில்லை என்று விரைவில் கண்டறியப்பட்டது. பிளாங்க் தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்தார், இது புகழ்பெற்ற பிளாங்க் கருப்புப் பொருள் கதிர்வீச்சின் விதியை உருவாக காரணமாக அமைந்தது, இது சோதனை செய்யப்பட்ட கருப்பு-பொருள் வெளியிட்ட அலைகற்றையை நன்கு விவரிக்கப்பட்டது. இந்த விதி 1900 அக்டோபர் 19 ஆம் தேதி DPG இன் கூட்டத்தில் முதலில் முன்மொழியப்பட்டது மற்றும் 1901 இல் பதிப்பிக்கப்பட்டது. இந்த முதல் விதி ஆற்றலின் திறனை அளவிடுவதைப் பற்றி விளக்கப்படவில்லை, மற்றும் அவர் புள்ளி இயக்கவியல் பயன்படுத்தாமல் அதிலிருந்து விளகி இருந்தார். நவம்பர் 1900 இல், பிளாங்க் தனது கதிர்வீச்சு சட்டத்தின் பின்னால் உள்ள கொள்கைகளை இன்னும் அடிப்படை புரிதல் பெறுவதற்கான வழிமுறையாக வெப்ப இயக்கவியலின் போல்ட்ஸ்மேனின் புள்ளியியல் விளக்கமான இரண்டாவது விதியின் அடிப்படை தத்துவத்தைப் புறிந்து கொள்வதன் மூலம், தனது கதிர்வீச்சின் விதிகளை மறுசீரமைத்தார். டிசம்பர் 14, 1900 இல் DPG க்கு அளித்த புதிய வகைப்பாட்டின் பின்னால் உள்ள மையக்கருவானது, பிளாங்க் முன்மொழிவு என்று அறியப்பட்ட கருத்தாகும், மின்காந்த ஆற்றலை அளவிடக்கூடிய வடிவில் மட்டுமே உட்செலுத்த முடியும், வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆற்றலை ஒரு அடிப்படை அலகின் பெருக்காகும்: இதில் h என்பது பிளாங்க் மாறிலி எனப்படும். இது பிளான்கின் குவாண்டம் என்றும் அறியப்படுகிறது மற்றும் ν என்பது கதிர்வீச்சின் அதிர்வெண்னை குறிக்கும். இங்கு விவாதிக்கப்படும் சக்தி E எப்பொழுதும் hν என்று தான் குறிக்கப்படுகிறது மற்றும் ν மட்டும் தனியாக குறிக்கப்படுவதில்லை. இயற்பியளாரர்கள் இப்போது இதனை குவாண்டா போட்டான்கள் என்று அழைக்கின்றனர், மேலும் அதிர்வெண் ν என்பது ஒரு போட்டோனின் சொந்தக் குறிப்பிட்ட மற்றும் தனித்துவமான ஆற்றல் கொண்டதாக இருக்கும். அந்த அதிர்வெண்ணில் மொத்த ஆற்றல் hνவுக்கு சமமாகவும் மற்றும் அதன் ஆற்றல் அந்த அதிர்வெண்ணில் உள்ள போட்டான்களின் எண்ணிக்கையால் பெருக்கினால் கிடைக்கும். குவாண்டம் கோட்பாடு1920 ஆம் ஆண்டுகளின் முடிவில், ஹெய்சென்பெர்க் மற்றும் பாலி குவாண்டம் இயக்கவியல் பற்றிய கோபன்ஹேகன் விளக்கத்தை வெளியிட்டனர், ஆனால் இது பிளாங்க்கால் நிராகரிக்கப்பட்டது, மற்றும் ஷ்ரோடிங்கர், லாவ் மற்றும் ஐன்ஸ்டீன் ஆகியோராலும் நிராகரிக்கப்பட்டது. பிளாங்க் அலை இயக்கவியல் விரைவில் குவாண்டம் கோட்பாட்டின் காரணமாக இருக்கும் என்ற தேவையற்ற எண்ணத்தில் இருந்தார். எனினும், இது உண்மையாக வில்லை. மேலும் அவரது பணி மற்றும் ஐன்ஸ்டீனின் தத்துவார்த்த விவாதங்களுக்கு எதிராக தனியாக ஒரு புதிய குவாண்டம் கோட்பாட்டை மட்டுமே உறுதிப்படுத்தியது. பிளாங்க் தனது இளைமைப் பருவங்களில் எண்ணிய பழைய கருத்துக்களை தனது அனுபவமிக்க பல ஆண்டுகளின் போராட்டத்தில் மூலம் தனது முந்தைய பழைய எண்ணங்கள் பற்றிய உண்மையை உண்ர்ந்தும், தவறுகளை திருத்தியும், மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் உள்ளமும் னொண்டவராக மாறியும் இருக்கிறார்: "ஒரு புதிய விஞ்ஞான கண்டுபிடிப்பு என்பது தனது எதிரிகளை வெற்றிகொள்வது மட்டுமல்லாமல் சமரசம் உண்டாக்கவும் மற்றும் எதிர்காலத்தின் ஒரு நம்பிக்கை ஒளியையும் உண்டாக்குகிறது, இதனால் எதிர் கருத்துக்கள் மறைந்தும் விடுகிறது மேலும் புதிய தலைமுறையினர் இதை உண்ர்ந்து நன்கு வளர்ந்தும் இருக்கிறார்கள்".[2] ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு1905 ஆம் ஆண்டில், இதுவரை அறியப்படாத ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் மூன்று கட்டுரைகளை இயற்பியலுக்கான அறிவியல் இதழில் வெளியிட்டார். சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை உடனடியாக அங்கீகரித்த சிலர் மத்தியில் பிளாங்க்கும் ஒருவராக இருந்தார். இந்த கோட்பாடு விரைவில் பரவலாக ஜெர்மனியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிறப்பு சார்பியல் கோட்பாட்டை விரிவாக்க பிளான்க் கணிசமாக பங்களித்துள்ளார். எடுத்துக்காட்டாக, அவர் பாரம்பரிய இயற்பியலின் அடிப்படையில் கோட்பாட்டை மீண்டும் எழுதினார்.[3] ஆன்மீகப்பார்வைபிளாங்க் ஜெர்மனியில் லூதரன் சர்ச்சில் உறுப்பினராக இருந்தார்.[4] இருப்பினும், பிளாங்க் மாற்று கருத்துக்களுக்கும் மற்றும் மதங்களுக்கும் மிகவும் சகிப்புத்தன்மையுடன் இருந்தார்.[5] 1937 ஆம் ஆண்டில் "மதம் மற்றும் இயற்கை அறிவியல்" எனும் தலைப்பில் ஒரு சொற்பொழிவில், அவர் இந்த குறியீட்டின் முக்கியத்துவத்தையும், கடவுளை வணங்குவதற்கான சடங்குகள் நேரடியாக ஒரு விசுவாசியின் திறனோடு தொடர்புடையதாக வலியுறுத்தினார், ஆனால் அந்தக் குறியீடுகள் தெய்வீகத்தின் அபத்தமான விளக்கத்தை அளிக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார். அத்தகைய அடையாளங்கள், குறியீடுகள் பற்றிக் கற்பனை செய்வதில் கவனம் செலுத்துவதற்காக அவர் நாத்திகத்தை விமர்சித்தார், அதே சமயத்தில் விசுவாசிகள் இத்தகைய சின்னங்களின் முக்கியத்துவத்தை மதிப்பிடுவதை எச்சரித்தார்.[6] மக்ஸ் பிளாங்க் 1944 இல் இவ்வாறு கூறினார்: "ஒரு மனிதனாக எனது முழு வாழ்க்கையையும் மிகத் தெளிவான தலைசிறந்த விஞ்ஞானத்திற்காகவும் , அணுக்களைப் பற்றிய ஆய்வுக்காகவும் அர்ப்பணித்துவிட்டேன். இந்த அணுக்கள் பற்றிய என் ஆராய்ச்சியின் விளைவாக இவ்வாறு என்னால் ஒன்றைச் சொல்ல முடியும்: அனைத்து அணுக்களின் ஆரம்பமும் மற்றும் முடிவும் ஏதோ ஒரு விசையின் அல்லது சக்தியின் விளைவாக ஒரு அணுவின் துகள்கள் அனைத்தும் அதிர்வதும் மற்றும் இதனால் இந்த நிமிடத்தில் இந்த சூரிய மண்டலத்தை ஒன்றாக இணைக்கிறது. நாம் இந்தச் சக்தியை ஒரு நனவு மற்றும் அறிவார்ந்த மனப்பான்மையின் இருப்பாகக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த மனம் தான் எல்லா விஷயங்களுக்கும் மேலாக இருக்கிறது".[7] பிளாங்க் இப்படி கூறுகிறார், ஒரு விஞ்ஞானி என்பவர் கற்பனை மற்றும் நம்பிக்கை இரண்டும் கொண்டவராக கருதப்படுகிறார். ஏனெனில் "மதம் மற்றும் அறிவியல் இரண்டிற்கும் கடவுள் நம்பிக்கை தேவைப்படுகிறது. ஆன்மீகவாதிகளுக்கு, எப்போதும் கடவுள் தொடக்கத்தில் உள்ளார், மற்றும் இயற்பியல் அறிஞர்களுக்குக் கடவுள் அனைத்துக் கோட்பாடுகளின் முடிவில் உள்ளார்... முன்னவருக்குக் கடவுள் அடித்தளம், பின்னவருக்குக் கடவுள் பொதுவான உலக பார்வைகளின் கீரிடம் போன்றவராவார்".[8] இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia