விதர்பா விரைவுத் தொடருந்து
விதர்பா எக்ஸ்பிரஸ் மகாராஷ்டிராவில் மும்பை CST யிலிருந்து கோண்டியா வரை செல்லும் அதிவேக ரயில் (12105/12106) ஆகும். தினமும் செயல்படும் இந்த சேவையானது வண்டி எண் 12105 ஆக மும்பையிருந்து கோண்டியாவிற்கும் பின்பு வண்டி எண் 12106 ஆக கோண்டியாவிலிருந்து மும்பைக்கும் செல்கிறது. ரயில் பெட்டிகள்விதர்பா எக்ஸ்பிரஸில் முதல் வகுப்பு ஒரு ஏசி மற்றும் இரண்டு ஏசியுடன் கூடிய இரண்டு அடுக்கு, இரு ஏசி இரண்டு அடுக்கு, ஒரு ஏசியுடன் இரண்டு முதல் மூன்று அடுக்குகள், 10 படுக்கையுடன் கூடிய அறைகள் மற்றும் நான்கு முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டிகள் உள்ளன. சேவைகள்விதர்பா எக்ஸ்பிரஸ் முதலில் மும்பை முதல் நாக்பூர் வரை மட்டுமே ஓடியது. அதன் பின்பு கோண்டியா வரை நீட்டிக்கப்பட்டது. தினசரி செயல்படும் இந்தச் சேவையானது சராசரியாக மணிக்கு 60.44 கி.மீ வேகத்தில் செல்கிறது. 967 கி.மீ. தூரத்தினை 12105 ரயில் 16 மணிநேரத்திலும், 12106 ரயில் 16 மணி 5 நிமிடங்களிலும் கடக்கிறது. விவரங்கள்ஆரம்ப காலத்தில் விதர்பா எக்ஸ்பிரஸ் மகாராஷ்டிராவிலுள்ள நாக்பூர் வழியே சென்றதால் இப்பெயர் பெற்றது. அலுவலக நேரப்படி இகத்பூரியில் ரயில் நிறுத்தம் ஐந்து மற்றும் ஒரு நிமிடம் மட்டுமே இருப்பினும், இஞ்சினை மாற்ற வேண்டியுள்ளதால் அங்கு 15 நிமிடங்கள் நிற்க வேண்டியுள்ளது. ஆனால் வண்டி எண் 12105 க்கு இந்த நிறுத்தம் பொருந்தாது. கால அட்டவணை மற்றும் தொலைவுகள்தினமும், வண்டி எண் 12105 இந்திய நேரப்படி 19:10 க்கு மும்பையிலிருந்து புறப்பட்டு மறுநாள் 11:10 க்கு கோண்டியாவை சென்றடைகிறது. மறுமுனையில் இருந்து திரும்பும்போது, அதாவது கோண்டியாவிலிருந்து திரும்பும்போது தினமும் 14:55 மணிக்கு புறப்பட்டு அடுத்தநாள் 7:00 மணிக்கு மும்பையினை அடைகிறது. விதர்பா எக்ஸ்பிரஸிற்கான நேரப்பட்டியல் அதன் தொலைவுகளுடன் கீழே தொகுக்கப்படுள்ளது.
விதர்பா எக்ஸ்பிரஸ் – மோதல்கள்ஜீலை 19,2012 ல், அம்பர்மலியிலிருந்து கசாராவிற்கு செல்லும் உள்ளூர் ரயிலுடன் விதர்பா எக்ஸ்பிரஸ் நேருக்கு நேர் மோதலுக்குட்பட்டது. இரவு 9.30 மணி அளவில் நடந்த இந்த விபத்து, ஒரே ரயில் பாதையில் இரு ரயில்களும் வந்ததால் ஏற்பட்டது. ரயில்வே சார்ந்த தகவல்களில் கிடைத்தது “விதர்பா எக்ஸ்பிரஸின் ஓட்டுனர் எதிரே வரும் ரயிலை கசாராவை அடைந்தவுடன் அறிந்ததாகவும், அதற்கான அவசரகால பிரேக்குகளை போடுவதற்குள் ஒன்றுடன் ஒன்று மோதியதாகவும் கூறப்படுகிறது.” [2] இதில் மூன்று பேர் உயிரிழந்தனர் குறைந்தபட்சம் 70 பேருக்கு மேல் படுகாயமடைந்தனர். ரயில்வேயின் பாதுகாப்பு அமைச்சர் முகுல் ராய் இது பற்றி அளித்த பேட்டியில் “இறந்தவர்களுக்கு ரூ 5 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு ரூ 1 லட்சமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு ரூ 25000 நிவாரண நிதியாக அளிப்பதாக தெரிவித்தார்” [3] விதர்பா எக்ஸ்பிரஸின் விலைப்பட்டியல் அந்தந்த பெட்டிகளுக்கு ஏற்றாற்போல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வயது கூடியவர்களுக்கான் கட்டண தளர்த்தப்படும் சேவை தக்கல் பிரிவில் சேராது.
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia