ஓங்கலாக வியட்நாமிய நாட்டுப்புற சமயம், மக்காயாண புத்தசமயம் இணைவோடு. சிறுபான்மையினர் கிறிஸ்தவர்கள் (பெரும்பகுதி உரோமன் கத்தோலிக்கர்களும் பிற குழுவினரும்.[26]
வியட்நாமிய மக்கள்(Vietnamese people) அல்லது கின் மக்கள்(Kinh people) (வியட்நாமியம்: người Việt அல்லது người Kinh) என்பவர்கள் இன்றைய வடக்கு வியட்நாமிலும் தென்சீனத்திலும் தோன்றிய தென்கிழக்காசிய இனக்குழு மக்கள் ஆவர். இவர்கள் 1999 கணக்கெடுப்பின்படி, வியட்நாமின் பெரும்பான்மை, அதாவது 86% அளவு மக்கள் ஆவர். அலுவல்முறையில் வியட்நாமில் வாழும் பிறரிடம் இருந்து வேறுபடுத்த இவர்கள் கின் மக்கள் எனப்படுகின்றனர். பண்டைய வியட்நாமியரின் மிகப் பழைய பதிவு இவர்களை இலாசு வியட் எனச் சுட்டுகிறது.
இவர்கள் புவிப்பரவல்படியும் மொழியியலாகவும் தென்கிழக்காசியர்கள் என வழங்கப்பட்டாலும் நெடுங்கால சீனக் குடியேற்ற ஆட்சியால் இவர்களின் பண்பாடு கிழக்காசிய மக்களை ஒத்தே அமைகிறது. அதாவது, மிகவும் குறிப்பாக அவர்களின் வடக்கண்மை மக்களாகிய தென்சீன மக்களையும் பிற தென்சீனாவில் வாழும் பிற இனக்குழு மக்களையும் ஒத்தே அமைகிறது. வியட் எனும் சொல் பாக் வியட் என்பதன் சுருக்கமே. நாம் எனும் சொல்லின் பொருள் தெற்கு என்பதாகும்.
தோற்றம்
வரலாற்றுப் பதிவுகளில் வியட்நாமியர் இலாசு அல்லது இலாசு வியட் எனப்படுகின்றனர். வியட்நாம் நாடு வான்லாங் எனப்பட்டது.
ஏழு தனித்தன்மை வாய்ந்த மரபுக் குறிப்பான்களைத் தவிர வியட்நாமியர்கள் மரபியலாக கிழக்காசிய மக்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளனர்.[28][29] தேசிய புவிப்பரப்பியல் கழகத்தின் மரபுவரைவியலின் ஆய்வுப்படி வியட்நாமியர் கிழக்கு, தென்கிழக்கு ஆசிய மக்களுக்கு இடைப்பட்டவர்களாக அமைகின்றனர்.[30] மற்றொரு அண்மக்கால 92015) ஆய்வுப்படி, வியட்நாமியர் சீனரை விட யப்பானியரோடு நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது.[31] இந்த ஆய்வில் க்ருதப்பட்ட ஆய்வுக்கான வியட்நாமியர்கள் கின் இனக்குழு மக்கள் ஆவர். இவர்களே வியட்நாமில் 80% அளவு மக்கள்தொகையினராக அமைகின்றனர்.[30]
தொன்மமும் தொடக்கநிலை வரலாறும்
தொன்மவியல்படி, முதல் வியட்நாமியர் ஆவு சோ எனும் துறக்க உலகத் (வானுலகத்) தேவதைக்கும் இலாசுலோங் குவான எனும் தும்பிக் கடவுளுக்கும் பிறந்தவர் ஆவர். அவர்கள் திருமணம் செய்துகொண்டு 100 முட்டைகளையிட்டனர். இவற்றில் இருந்து முதல் நூறு குழந்தைகள் பிறந்தனர். இவர்களது மூத்தமகன் கூங் எனும் அரசனாக ஆட்சிபுரிந்தான்.
முதல் வியட்நாமியர்கள்
மிகப் பழைய வியட்நாமியர்கள் இந்தோனேசியத் தீவுக் கூட்ட்த்தில் இருது மலாய் தீவகம், தாய்லாந்து வழியாக தோங்கின் கழிமுகப்படுகையின் சிவப்பு ஆற்று விளிம்புகளில் குடியேறும்வரை மெதுவாகப் படிப்படியாக நகர்ந்து வந்துள்ளனர் என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். தொல்லியலாளர்கள் சாவகம், மலேசியா, தாய்லாந்து, பர்மாவின் வடக்குப் பகுதிவரை பிந்தைய பிளிசுடோசீன் காலக் கற்கருவிகளைப் பின்பற்றி ஆய்வு செய்கின்றனர். இவையே தென்கிழக்காசியாவில் பயன்பட்ட முதல் கற்கருவிகளகவும் கருதப்படுகின்றன. மேலும், இதே நேரத்தில் வடக்கு பர்மாவிலும் சீனாவிலும் நிலவிய இமையமலைத் தொடர்ச்சி ஒரு பனிநிலை அரணாக அமைந்து தென்கிழக்காசிய மக்களைத் தனிமைப்படுத்தியதாகவும் தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். கடந்த பெருமப் பனியூழிக் காலத்தில் (கி.மு 25,000-18,000), கடல்நீர் மட்டங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. இதனால். தீவுகளிலும் தீவகக் கடலோரங்களிலும் மேலீடாக இருந்த நீர் மட்டம் குறைந்து, சுந்தா எனும் கண்டவிளிம்புத்தட்டை நீர்மட்ட்த்தில் இருந்து வெளிப்பட வைத்தது.
நீரில் இருந்து வெளிப்பட்ட சுந்தா கண்டவிளிம்புத் தட்டு மாபெரும் உப்பளச் சமவெளியாக அமைந்ததாகக் கருதப்படுகிறது, இதனால், முன்பு இப்பகுதியைப் பயன்படுத்திய் மக்கள் மற்ற கடலோரப் பகுதிகளுக்கும் தீவுப் பகுதிகளுக்கும் குடியேறப் நேர்ந்துள்ளது. பின்னர், பனியாறுகள் கரைந்ததும், சுந்தா கண்டவிளிம்புத் தட்டு மீண்டும் நீருள் மூழ்கியது. இவ்விடத்தில் மேலீடான நீர்மட்டமே அமைவதால், சிறுபடகுகளில் வணிகரும் பயணிகளும், உயரலைகளும் கொந்தளிப்புகளும் உள்ள ஆழ்கடல் ஏதங்கள் ஏதுமின்றி, பயணம் செய்ய முடிந்தது. இவ்வாறாக, இந்தப் பகுதியின் புவிப்பரப்பியலும் பண்பாடுகள் இங்கே எழுச்சிகாண பெரும்பங்காற்றியுள்ளது. நிலப்படத்தில் காட்டியுள்ளது போல, சுந்தா கண்டவிளிம்புத் தட்டுக்கு வெளியே கடல் ஆழமாக அமைகிறது. அச்சமூட்டும் ஆழமான இந்தக் கடற்பகுதியில், சீன சோங் அரசகுலப் (கி.பி 960-1279) போர்க்கலங்கள் கடக்கும் வரை (இவை பிந்தைய ஐரோப்பியப் படைப் போர்க்கலங்களின் முன்னோடி) எவருமே பயணம் செய்ததில்லை.
பனியாறுகள் உருகியதும் இந்தக் கடற்கரையோரங்களில் நீர்மட்டம் உயர்ந்தது; வணிகரும் மற்ற பயணியரும் தாம் விரும்பியபடி மீண்டும் சிறுபடகுகளில் பயணம் செய்து பிறபகுதிகளுக்குச் செல்லவோ அல்லது தம் சமயக் கருத்துகளை இப்பகுதிகளிலேயே பரப்பவோ முடிந்தது. அடுத்த 4000 ஆண்டுகளுக்கு, அதாவது கி.மு 8000 வரை மக்கள் தென்கிழக்காசிய நிலப்பகுதி வழியாக நகர்ந்து தோங்கின் கழிமுகப் படுகையை நோக்கிச் செல்லலாயினர்; சிலர் இடைப்பகுதிகளில் தங்கி வாழலாயினர். முடிவாக, புலம்பெயர்ந்து வந்த இம்மக்களின் கால்வழியினர் புதிய கற்கால வளர்ச்சியை கி.மு 8000 முதல் கி.மு 800 கால இடைவெளியில் அடைந்தனர். அந்நிலையில் எளிய கற்கருவிகளைப் பயன்படுத்தினர். இம்மக்களின் பண்பாட்டு எச்சங்களும் கோவாபிங்கியப் பண்பாடும் சிவப்பாற்றின் ஓரத்திலும் தோங்கின் கழிமுகப் படுகையில் அமைந்த கோவா பின் குகைகளில் இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இடைநிலைப் புதிய கற்காலகட்டத்தில் ( கி.மு2500 முதல் கி.மு 2000 வரையில்), இன்றைய வியட்நாம் பகுதியில் மேலும் பல்வேறு மக்களும் வந்து தோங்கின் கழிமுகப் படுகையில் நடுவில் உள்ள பாசு சோன் மாவட்டத்தில் குடியேறியுள்ளனர். இவர்கள் கோவாபிங்கிய நீக்கிரிட்டோக்களை விட உயரமானவர்களாகவும் மென்தோலினராகவும் உள்ளனர்; இவர்கள் கூடைமுடையும் கலையில் வல்லவர்களாக விளங்கினர்; மேலும், இவர்கள் மெருகேற்றிய இருவிளிம்புக் கற்கருவிகளைச் செய்து பயன்படுத்தினர்.
↑Ivanova RExpression error: Unrecognized word "etal". (December 1999). "Mitochondrial DNA polymorphism in the Vietnamese population". Eur. J. Immunogenet.26: 417–22. doi:10.1046/j.1365-2370.1999.00184.x. பப்மெட்:10583463.