வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (7 ஏப்ரல் 1770 – 23 ஏப்ரல் 1850) ஆங்கில இன்பத்துப்பால் கவிஞராவார். இவர் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜுடன், இணைந்து 1798 ஆம் ஆண்டு கூட்டு பதிப்பாக வெளியிட்ட லிரிக்கல் பாலடுகள் (உணர்ச்சிமிகு கதைப்பாடல்கள்) கொண்டு ஆங்கில இலக்கியத்தில் அகத்திணைக் காலத்தைத் தொடங்க உதவியிருக்கிறார். வேர்ட்ஸ்வொர்த்தின் தலைசிறந்த படைப்பாக தி ப்ரீலூட் கருதப்படுகிறது, இது அவரது ஆரம்பகால வாழ்க்கையின் பகுதியளவு சுயசரிதைக் கவிதையாகும். அதை அவர் பல முறை திருத்தியமைத்து விரிவுபடுத்தினார். இது அவர் இறந்த ஆண்டில் மரணத்திற்குப் பின், அவரது மனைவியால் தி ப்ரீலூட் எனத் தலைப்பிடப்பட்டு வெளியிடப்பட்டது. அதற்கு முன்பு வரை இது "கோல்ரிட்ஜுக்கு கவிதை" என்று அறியப்பட்டது. வேர்ட்ஸ்வொர்த் 1843 முதல் 23 ஏப்ரல் 1850 இல் நுரையீரல் அழற்சியால் இறக்கும் வரை அரசக் கவிஞராக இருந்தார். வாழ்க்கை வரலாறுஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்விஜான் வேர்ட்ஸ்வொர்த் மற்றும் ஆன் குக்ஸனுக்கு ஐந்து குழந்தைகளுள் இரண்டாவதாக வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் கும்பர்லேண்ட்[1] வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள லேக் மாவட்டத்தின் காக்கர்மவுத்தில் உள்ள வேர்ட்ஸ்வொர்த் இல்லத்தில் ஏப்ர ல்7, 1770இல் பிறந்தார். இது ஏரி மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது. இவருடைய சகோதரியும், கவிஞரும், நாட்குறி்ப்பு எழுத்தாளருமான டோரதி வேர்ட்ஸ்வொர்த் 1771இல் பிறந்தார் .இருவருக்கும் ஒன்றாகவே ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டது. அவர்களுக்கு மூன்று உடன்பிறந்த சகோதரர்கள் இருந்தனர்: மூத்தவரான ரிச்சர்ட் பின்னாளில் வழக்கறிஞரானார்; ஜான், கவிஞராகவும்; இளையவரான கிறிஸ்டோபர் பின்னாளில் கல்வித்துறையாளரானார். வேர்ட்ஸ்வொர்த்தின் தந்தை லான்ஸ்டேலின் 1வது ஏர்ல் ஜேம்ஸ் லோதரின் சட்டப் பிரதிநிதியாக இருந்தார், மேலும் அவரது தொடர்புகள் மூலம் சிறிய நகரத்தில் ஒரு பெரிய மாளிகையில் வசித்து வந்தார். வணிக நிமித்தமாக அவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியில் இருந்தார், அதனால் வில்லியம் மற்றும் அவரது உடன்பிறப்புகள் தந்தையுடன் அதிக ஈடுபாட்டைக் கொண்டிருக்கவில்லை, மேலும் 1783 இல் அவர் இறக்கும் வரை அவரிடமிருந்து விலகியே இருந்தார்கள் [2] இருப்பினும், அவர் வில்லியமின் வாசிப்புப் பழக்கத்தினை ஊக்குவித்தார், மேலும் குறிப்பாக மில்டன், சேக்சுபியர் மற்றும் இசுபென்சர் ஆகியோரின் படைப்புகளைத் தீவிரமாக வாசித்தார். வில்லியம் தனது தந்தையின் நூலகத்தைப் பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டார். வில்லியம் கம்பர்லேண்டில் உள்ள பென்ரித்தில் உள்ள தனது தாயின் பெற்றோரின் வீட்டில் நேரத்தைச் செலவிட்டார். ஆனால் அங்கு வாழ்ந்த அவரது தாத்தா பாட்டி அல்லது மாமாவுடன் பழகவில்லை. அவர்களுடனான விரோதமான தொடர்புகள் இவரை தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. [3] வேர்ட்ஸ்வொர்த் தனது தாயால் படிக்கக் கற்றுக்கொண்டார், முதலில், காக்கர்மவுத்தில் உள்ள ஒரு சிறிய பள்ளியில் பயின்றார், பின்னர் உயர் வகுப்புக் குடும்பங்களின் குழந்தைகளுக்கான பென்ரித்தில் கல்வி பயின்றார். வேர்ட்ஸ்வொர்த்தின் தாயின் மரணத்திற்குப் பிறகு, 1778 இல், இவரது தந்தை அவரை லங்காசயரில் உள்ள ஹாக்ஸ்ஹெட் இலக்கணப் பள்ளிக்கு அனுப்பினார் (இப்போது கும்ப்ரியாவில்) மற்றும் யார்க்சயரில் உள்ள உறவினர்களுடன் வசிக்க டோரதியை அனுப்பினார். வேர்ட்ஸ்வொர்த் 1787 இல் தி ஐரோப்பிய இதழில் 14வரி கொண்ட செய்யுளை வெளியிட்டபோது எழுத்தாளராக அறிமுகமானார். அதே ஆண்டில் அவர் கேம்பிரிட்ஜில் உள்ள புனித ஜான் கல்லூரியில் சேர்ந்தார். அவர் 1791 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[4] விடுமுறை நாட்களை நடைப்பயணங்களில் கழித்தார், நிலப்பரப்பின் அழகுக்காக பிரபலமான இடங்களுக்குச் சென்றார். 1790 ஆம் ஆண்டில் ஐரோப்பாவிற்கு ஒரு நடைப்பயணத்தை மேற்கொண்டார், அதன் போது அவர் ஆல்ப்ஸ் மலைகளை சுற்றிப்பார்த்தார்,மேலும் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலியின் அருகிலுள்ள பகுதிகளுக்குச் சென்றார். [5] கௌரவங்கள்1838 ஆம் ஆண்டில், வேர்ட்ஸ்வொர்த் டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை சட்டத்தில் கெளரவ முனைவர் பட்டம் பெற்றார், 1839இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது, ஜான் கேபிள் இவரை "மனிதகுலத்தின் கவிஞர்" என்று பாராட்டினார்.[6] [7] 1842இல், அரசாங்கம் இவருக்கு ஆண்டுக்கு £300 குடியுரிமை ஓய்வூதியம் வழங்கியது. இறப்புஏப்ரல் 23, 1850இல் நுரையீரல் அழற்சி மோசமடைந்ததால் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் மரணமடைந்தார், இவருடைய உடல் கிராஸ்மேரில் உள்ள புனித ஆஸ்வல்ட்ஸ் தேவாலயத்தில் புதைக்கப்பட்டது. இவருடைய மனைவியான மேரி, இவர் இறந்த சில மாதங்களுக்குப் பின்னர் அவருடைய சுயசரிதைப் படைப்பான "கோல்ரிட்ஜிற்கான கவிதையை" தி பிரிலூட் என்று பதிப்பித்தார்.[8] இருப்பினும் இது 1850 இல் பெரிய அளவிற்கு கவனம் பெறவில்லை என்றாலும் தற்போதுவரை இது ஒரு தலைசிறந்த படைப்பாகவே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. கலாச்சாரத்தில் இவரது பங்களிப்புகள்இசையமைப்பாளர் அலிசியா வான் பியூரன் (1860–1922) தனது "இன் எர்லி ஸ்பிரிங்" பாடலுக்கு வேர்ட்ஸ்வொர்த்தின் உரையைப் பயன்படுத்தினார். [9] 1978இல் வெளியான கென் ரஸ்ஸலின் வில்லியம் மற்றும் டோரதி வில்லியம் மற்றும் அவரது சகோதரி டோரதி இடையேயான உறவை சித்தரிக்கிறது. [10] 2000இல் வெளியான பாண்டேமோனியம் திரைப்படத்தில் வேர்ட்ஸ்வொர்த் மற்றும் கோல்ரிட்ஜின் நட்பை ஜூலியன் டெம்பிள் வெளிப்படுத்தியிருந்தார். [11] வேர்ட்ஸ்வொர்த் புனைகதை படைப்புகளில் ஒரு பாத்திரமாக தோன்றினார்:
முக்கிய படைப்புகள்
நினைவேந்தல்ஏப்ரல் 2020 இல், வேர்ட்ஸ்வொர்த்தின் 250வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ராயல் மெயில் தபால் தலைகளை வெளியிட்டது. வேர்ட்ஸ்வொர்த் மற்றும் வில்லியம் பிளேக், ஜோன் கீற்ஸ், ஜார்ஜ் கோர்டன் பைரன், சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ், பெர்சி பைச்சு செல்லி மற்றும் வால்டர் ஸ்காட் உட்பட அனைத்து முக்கிய பிரித்தானிய காதல் கவிஞர்களையும் உள்ளடக்கிய முத்திரைகள் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு முத்திரையும் அவர்களின் மிகவும் பிரபலமான மற்றும் நீடித்த படைப்புகளில் ஒன்றின் சாற்றை உள்ளடக்கியது, வேர்ட்ஸ்வொர்த்தின் " தி ரெயின்போ "இதில் பயன்படுத்தப்பட்டது. [13] பார்வைக் குறிப்புகள்
கூடுதல் வாசிப்பு
வெளிப்புற இணைப்புகள்வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:
புத்தகங்கள்
வேர்ட்ஸ்வொர்த்தின் படைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia