விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
Visvesvaraya Technological Universityகுறிக்கோளுரை | Modalu mānavanāgu (கன்னடம்) |
---|
| எல்லாவற்றுக்கும் மேலாக மனிதனாக இரு |
---|
வகை | பொதுத் துறை |
---|
உருவாக்கம் | 1 ஏப்ரல் 1998[1] |
---|
வேந்தர் | வாஜுபாய் வாலா (கர்நாடக ஆளுநர்) [2] |
---|
துணை வேந்தர் | எச். மகேசப்பா[2] |
---|
தலைமை ஆசிரியர் | ராமச்சந்திர சாமி, நிதி அலுவலர்[2] |
---|
பட்ட மாணவர்கள் | 67100 [3] |
---|
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 12666 [3] |
---|
| 1800 [3] |
---|
அமைவிடம் | , , 15°46′43.72″N 74°27′43.53″E / 15.7788111°N 74.4620917°E / 15.7788111; 74.4620917 |
---|
வளாகம் | நகர்ப்புறம், 115 ஏக்கர்கள் (0.5 km2) [4] |
---|
அங்கீகாரம் | அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, கட்டிடக்கலைக் குழுமம்[5][6] |
---|
நிறங்கள் | ஆரஞ்சு, வெள்ளை, பச்சை |
---|
தடகள விளையாட்டுகள் | மிதிவண்டிப் பயிற்சி, சீருடற்பயிற்சிகள், நீச்சற் போட்டி, பாரம் தூக்குதல் [7] |
---|
விளையாட்டுகள் | வில்வித்தை, சதுரங்கம், துடுப்பாட்டம், கூடைப்பந்தாட்டம், வாள்வீச்சு (விளையாட்டு), கால்பந்து, யுடோ, சடுகுடு, வலைப் பந்தாட்டம், மென்பந்தாட்டம், டென்னிசு, எறிபந்தாட்டம், கைப்பந்தாட்டம், மற்போர், யோகா [7] |
---|
சேர்ப்பு | பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, பல்கலைக்கழக மானியக் குழு, கட்டிடக்கலை குழுமம்[8] |
---|
இணையதளம் | http://vtu.ac.in/ |
---|
விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்பது கர்நாடக மாநிலத்தில் உள்ள பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். இது பெளகாவியில் உள்ளது. இதை 1998ஆம் ஆண்டின் ஏப்ரல் முதலாம் நாளில் கர்நாடக அரசு நிறுவியது.[9] கர்நாடகத்தில் தொழில்நுட்பம், பொறியியல் துறைகளில் பாடங்களை கற்பிக்கும் கல்லூரிகள் இதனுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.[10]
இதுக்கு அறிவியலாளரான மோக்சகுண்டம் விசுவேசுவரய்யாவின் நினைவாக பெயரிடப்பட்டது. இந்திய அளவில் பாரத ரத்னா விருதைப் பெற்ற ஒரே பொறியாளர் இவரே. இந்த பல்கலைக்கழகம் பெங்களூர், குல்பர்கா, மைசூர் ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது.
இது இந்திய அளவில் பெரிய பல்கலைக்கழகங்களில் குறிப்பிடத்தக்கது. இதனுடன் 208 கல்லூரிகள் இணைந்துள்ளன. ஆண்டு தோறும் 67100 இளநிலை மாணவர்களும், 12666 முதுநிலை மாணவர்களும் சேர்கின்றனர். இங்கு இளநிலையில் 30 பாடப்பிரிவுகளும், முதுநிலையில் 71 பாடப்பிரிவுகளும் உள்ளன.[11][12]
துறைகள்
இது பொறியியல் துறையில் பல்வேறு பாடப்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
மேலும் பார்க்க
சான்றுகள்
இணைப்புகள்