வி. எஸ். அச்சுதானந்தன்
![]() வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன் (20 அக்டோபர் 1923 - 21 சூலை 2025)[2] கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆவார். 82 வயதில், அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டவர்களில் மிக வயதானவர் இவர். இந்திய மார்க்சியப் பொதுவுடமைக் கட்சியுடன் இவர் இணைந்திருந்தார். 2016 முதல் 2021 வரை கேரள நிர்வாக சீர்திருத்தங்களின் தலைவராக மாநில அமைச்சரவை உறுப்பினராகப் பணியாற்றினார். 15 ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். இது கேரள சட்டமன்றத்தில் மிக நீண்ட காலம் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.[3] அச்சுதானந்தன் 1985 முதல் சூலை 2009 வரை ஒ.பொ.க (மார்க்சியம்) கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்தார், பின்னர் அவர் தனது சித்தாந்த மனப்பான்மை காரணமாக கட்சியின் மத்திய குழுவிற்குத் திரும்பினார்..[4] முதலமைச்சராக அச்சுதானந்தன் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார், இதில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பல ஏக்கர் நிலத்தை மீட்டெடுப்பதற்கான மூணாறில் இடிப்பு நடவடிக்கை,[5] திரைப்படப் பதிப்புரிமை மீறலுக்கு எதிரான பதிப்புரிமை மீறல்-எதிர்ப்பு நடவடிக்கை, மாநிலத்தில் குலுக்கல் பரிசுச் சீட்டுக்கு எதிரான போராட்டம் ஆகியவை அடங்கும். ஊழல் குற்றச்சாட்டுகளில் முன்னாள் அமைச்சர் இரா. பாலகிருஷ்ண பிள்ளையைத் தண்டிப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.[6][7] மாநிலத்தில் கட்டற்ற மென்பொருள்களை ஊக்குவிப்பதிலும், குறிப்பாக மாநிலத்தின் பொதுக் கல்வி முறையில் கட்டற்ற மென்பொருள்களை ஏற்றுக்கொள்வதிலும் அச்சுதானந்தன் முன்னிலை வகித்தார்.[8] இளமைப் பருவம்கேரளாவின் ஆலப்புழை மாவட்டம், சங்கரன் அக்கம்மா தம்பதியினருக்கு பிறந்த அச்சுதானந்தன், சிறு வயதிலேயே வறுமைக்கு உள்ளானார். தனது தாயை நான்கு வயதிலும் தந்தையைப் பதினொரு வயதிலும் இழந்த அவர், தனது ஏழாவது வகுப்புடன் பள்ளிக் கல்வியை நிறுத்தும் கட்டாயம் ஏற்பட்டது. ஒரு துணிக் கடையில் வேலை பார்க்க ஆரம்பித்த அவர், பின்னர் ஒரு கயிறுத் தொழிற்சாலையில் பணிபுரிந்தார். அரசியல் வாழ்க்கைதொழில் சங்க ஈடுபாட்டின் மூலம் அரசியலுக்கு வந்த வி.எஸ், 1938ஆம் ஆண்டு மாநில காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கருத்து வேறுபாடுகளால், 1940ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து வெளியேறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆனார். பின்னர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு அளித்த அவர், ஐந்து வருடத்துக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டார். 1964ஆம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நிறுவிய 32 உறுப்பினர்களுள் இவரும் ஒருவர். 12 ஜூலை 2009 அன்று நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட சரிவிற்காக, கட்சி தலைமையால் கட்சியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.[9]
குடும்ப வாழ்க்கைவி. எஸ். அச்சுதானந்தன் கே. வாசுமதி என்பவரை மணந்தார். இவர்களுக்கு வி.வி. ஆஷா என்ற மகளும், வி. ஏ. அருண் குமார் என்ற மகனும் உள்ளனர். 2023 அக்டோபர் 20 அன்று, அச்சுதானந்தன் 100 வயதை எட்டினார்.[11] இவரே 100 வயதை எட்டிய கேரளாவின் முதல் முதலமைச்சராவார். மறைவுஅச்சுதானந்தம் 2025 சூலை 21 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனது 101-ஆவது அகவையில் காலமானார்.[12] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia