வி. சிவசாமி
பேராசிரியர் விநாயகமூர்த்தி சிவசாமி (16 செப்டம்பர் 1933 - 8 நவம்பர் 2014)[1] யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இளைப்பாறிய பேராசிரியரும், தமிழறிஞரும் ஆவார். புங்குடுதீவில் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். சமஸ்கிருதம், வரலாறு, தமிழ், இந்துப் பண்பாடு, தொல்லியல், நுண்கலைகள் எனப் பரந்த அளவில் ஈடுபாடு கொண்டவர். வாழ்க்கைக் குறிப்புபேராசிரியர் சிவசாமி 1933 செப்டம்பர் 16 இல் யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் இறுப்பிட்டி என்னும் ஊரில் பிறந்தவர். தந்தை நாட்டு வைத்தியத்திலும், சோதிடக் கலையிலும் ஈடுபட்டவர். தனது ஆரம்பக் கல்வியை புங்குடுதீவிலும், பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்று 1955 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமக்கிருதம், தமிழ், வரலாறு ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார். 1961 இல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் பாளி, இந்திய வரலாறு ஆகியவற்றுடன், சமக்கிருதத்தில் சிறப்புப் பட்டமும் பெற்றார்.[1] யாழ்ப்பாணக் கல்லூரியில் 1958 முதல் 1974 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். இடையில் 1962 முதல் 1965 வரை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1974 இல் ஆரம்பிக்கப்பட்ட போது, சிவசாமி அதன் ஆரம்பகால விரிவுரையாளராப் பணியில் சேர்ந்தார். சமக்கிருதத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய சிவசாமி, வரலாறு, இந்து நாகரிகம் ஆகிய பாடங்களையும் கற்பித்தார்.[1] பேராசிரியர் சிவசாமி யாழ்ப்பாணத் தொல்லியல் கழகத்தின் நிறுவன செயலாளராக 1971 இல் இருந்து பணியாற்றினார். அத்துடன் பூர்வகலா என்ற இதழையும் வெளியிடார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த முதலாவது தொல்லியல் ஆய்விதழ் இதுவாகும்.[1] பேராசிரியர் ப. புஷ்பரத்தினம் இவரது மாணவராவார். இவரது நூல்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia