வீச்சு (புள்ளியியல்)புள்ளியியலில் தரவுத் தொகுப்பு ஒன்றின் வீச்சு (Range) என்பது மிகப்பெரியதும் மிகச்சிறியதுமான மதிப்புகளுக்கு இடையிலான வேறுபாடு ஆகும்.[1] இது கூறுபுள்ளியின் அதிகபட்ச மதிப்பிலிருந்து குறைந்தபட்ச மதிப்பைக் கழிப்பதன் விளைவாகும். இது தரவுகளின் அதே அலகுகளில் வெளிப்படுத்தப்படுகிறது. விளக்கப் புள்ளியியலில், வீச்சு என்பது அனைத்துத் தரவுகளையும் கொண்ட மிகச்சிறிய இடைவெளி அளவு ஆகும். இது புள்ளியியல் பரவலின் அறிகுறியை வழங்குகிறது. இது இரண்டு கூர்நோக்குளை மட்டுமே சார்ந்திருப்பதால், சிறிய தரவுத் தொகுப்புகளின் பரவலைக் குறிக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.[2] சார்பிலா மற்றும் முற்றொருமப் பரவலுக்கு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறிஇங்கு nக்கு சார்பிலா மற்றும் முற்றொருமப் பரவலுக்கு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறிகள் X1, X2, ..., Xn உடன் குவிவு பரவல் சார்புகள் G(x) மற்றும் நிகழ்தகவு அடர்த்தி சார்புகள் g(x) ன் வீச்சானது T குவிவு பரவல் சார்புகளாக உள்ளது T= max(X1, X2, ..., Xn)-min(X1, X2, ..., Xn). மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia