வீணா தேவி (வைசாலி)
வீணா தேவி (Veena Devi)(பிறப்பு 22 ஏப்ரல் 1967) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பீகார் மாநிலம் வைசாலி மக்களவையின் தற்போதைய உறுப்பினர் ஆவார் . இவர் கைகாட் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சியுடன் இணைந்து வைசாலியில் போட்டியிட்டு ரகுவன்ஷ் பிரசாத் சிங்கை தோற்கடித்தார்.[1] அரசியல் வாழ்க்கைசெப்டம்பர் 2, 2021 அன்று, சிராக் குமார் பாஸ்வானுக்குப் பதிலாக லோக் ஜனசக்தி கட்சியின் நாடாளுமன்றத் தலைவரானார்.[2] ஆரம்ப கால வாழ்க்கைதேவி 22 ஏப்ரல் 1967 அன்று பீகாரில் உள்ள தர்பங்காவில் உபேந்திர பிரசாத் சிங் மற்றும் சபுஜ்கலா தேவிக்கு மகளாகப் பிறந்தார். இவர் மேல்நிலைக் கல்வி கற்றுள்ளார்.[3] இவர் 27 ஏப்ரல் 1984-ல் முசாபர்பூர் சட்ட மேலவை உறுப்பினர் தினேஷ் பிரசாத் சிங்கை மணந்தார்.[3] இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.[3] இவர் தௌத்பூர் கிராமத்தில் வசிக்கிறார்.[4] 2010ல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் கைகாட்டில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.இவர் முசாபர்பூரின் முன்னாள் தலைவராக இருந்தார்.[5] [6] இவர் 2001-ல் முசாபர்பூர் மாவட்டத்தின் தலைவராகவும், 2006-ல் துணைத்தலைவராகவும் ஆனார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia