வீரகாசி நடனம்![]() வீரகாசி நடனம் என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஆடப்படும் ஒரு பாரம்பரிய நடன வடிவம் ஆகும். இந்த நடனம் இந்து புராணங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு தீவிரமான நடனம் மட்டுமல்லாமல் சிவனடியார்களான ஜங்காமா குலத்தவா்களால் ஆடப்படும் மிகவும் தீவிரமான ஆற்றல் வாய்ந்த நடன அசைவுகளை உள்ளடக்கியது ஆகும். வீரகாசி மைசூர் தசரா திருவிழாவில் நடைபெறும் ஊர்வலத்தில் காட்சிப்படுத்தப்படும் நடனங்களுள் ஒன்றாகும் . இந்த நடனம் பண்டிகைகளிலும் முக்கியமாக இந்து மாதங்களான ஆவனி மற்றும் கார்த்திகையில் நிகழ்த்தப்படுகிறது. இது லிங்காயத் சமுதாயக் குடும்பத்தின் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளிலும் ஆடப்படுகிறது. லிங்காயத்தியம் மற்றும் வீரகாசிவீரகாசி என்பது வீரகாமாவின் (28 முக்கிய சைவ ஒன்று ஆகம, புராணங்கள்) அடிப்படைக் கருத்துகளிலிருந்து பெறப்பட்டதாகக் கருதப்படுகிறது.வீரகாசி கலைஞர்கள் தங்களின் நடனத்தின் போது வழக்கமாக சிவன் / லிங்கம் / ஸ்கந்த / அக்னி- / மத்ஸ்ய / கூர்மா போன்ற முக்கிய ஆறு சைவ புராணங்கள் இருந்து சில கதைகளை கூறுகின்றனா்.சில வேளைகளில் கிரிஜா கல்யாணம் / பிரபுலிங்கலீலை / பசவ புராணம் / சென்னப்பசவேஸ்வரா சரிதம் போன்ற சில கன்னட வீரசைவ புராணங்களில் இருந்தும் கதைகளை கூறுகின்றனா். . மிகவும் பிரபலமாகக் கூறப்படும் கதையாக தக்ஷ யஜ்னா விளங்குகிறது. லிங்காயத் சமூகத்தினாின் பாரம்பாிய வழக்கப்படி ஒவ்வொரு முக்கியமான செயல்பாடுகளான திருமணம், புது மனைப் புகு விழா போன்ற வீட்டு விழாக்களில் அருகில் இருக்கும் நீர் ஆதாரங்களில் இருந்து (பொதுவாக கிணறுகள் இருந்து) தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. தேவகங்கை என்றழைக்கப்படும் (கன்னடம் ಗಂಗೆ ತರುವುದು / தேவரு தருவுடு ದೇವರು ತರುವುದು கங்கே தருவுடு) இந்த நீா் அவா்களால் புனிதமாகக் கருதப்படுகிறது. இதனை தங்களது வீடுகளுக்கு எடுத்து வரும் போது வீரகாமா நடனம் ஆடப்படுகிறது. கர்நாடகாவின் ஒக்கலிகா் சமூகத்திலும் இந்தச் சடங்கு செய்யப்படுகின்றன.வீரபத்ரா தனது தாயான கங்கையை புனிதப்படுத்துவதற்காக இந்த நீரை கொண்டு வரும் வேளையில் வீரகாசி நடனம் ஆடப்படுவதாக கருதப்படுகிறது. கங்கை தேவி சிவனின் தலைமுடியில் வசிப்பதாகக் கருதி அந்த நீரை சிவனின் தலையில் தெளித்ததாகவும் கருதப்பட்டு வருகிறது.. நடனக்கலைஞா்கள்வீரசைவ லிங்காயத்துகள் சமூகத்தை சோ்ந்த ஜங்கம் என்று அழைக்கப்படும் மகேஸ்வரர்கள் - குலத்தினரால் இந்த வீரகாசி நடனம் ஆடப்படுகிறது. இந்த நடனத்தை ஆடும் கலைஞர்களை வீரதேவரு என்றும் அழைக்கின்றனா்.[1] நடன கலைஞர்கள் ஒரு வெள்ளை நிற பாரம்பரியமான ஒரு தலைக்கவசம் மற்றும் பிரகாசமான சிவப்பு நிற உடையை அனிந்து கொள்கின்றனா். தங்களை அலங்கரிக்கும் விதமாக உருத்ராட்ச மணிகள் கொண்ட அணிகலன் , ஒரு இடுப்பு வார்பட்டை எனப்படும் ருத்ர முகி, பாம்பு மற்றும் கழுத்தை சுற்றி நாகாபரணம் மற்றும் கொலுசு போன்ற அலங்கார நகைகள் இந்த நடனத்திற்கு அணியப் படுகின்றன.. நடன கலைஞர்கள் விபூதியை தங்கள் தலை, காது மற்றும் புருவங்களில் அணிந்து (பூசி) கொள்கின்றனா்..மேலும் வலது கையில் வீரபத்தரா இறைவனின் படம் பொறித்த ஒரு மரத்தாலான தகடு வலது கையில் வாள் ஏந்திய படியும் இந்த நடனத்தை உயிர்ப்புடன் ஆடுகின்றனா். பெண் கலைஞர்கள் பாரம்பரியமாக இந்த கலையை நிகழ்த்துவதில்லை என்றாலும் மதம் சாரா மேடை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக அந்த நடனத்தை ஆடுவா். அப்பொழுது அது ஒரு நாட்டுப்புற நடனமாக மட்டுமே ஆடப்படும். [ மேற்கோள் தேவை ] செயல்திறன்வீரகாசி நடனக் குழுவானது பொதுவாக இரண்டு, நான்கு அல்லது ஆறு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். நடனம் நிகழ்த்தப்படுகையில் குழுவில் ஒரு முன்னணி பாடகர் தக்ஷ யஜ்ன புராணக் கதையை விவரிக்கிறார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia