வீர இராமநாதன் ( Vira Ramanatha ) (சுமார் 1263-1295 பொ.ஊ.) போசளப் பேரரசின் தெற்குப் பகுதியை ஆண்ட அரசனாவார். கிபி 1254 இல், போசள மன்னன் வீர சோமேசுவரன் தனது இரு மகன்களுக்கு இடையே தனது இராச்சியத்தை பிரித்தார். மூன்றாம் நரசிம்மன் (ஆட்சி சுமார். 1263-1292 பொ.ஊ.) அவர்களின் அசல் தலைநகரான ஹளேபீடுவிலுருந்து ( தோரசமுத்திரம் அல்லது துவாரசமுத்திரம்) ஆட்சி செய்தார். வீர ராமநாத தேவன் (ஆட்சி 1254/1263-1295 பொ.ஊ.) தற்போதைய கோலார் மாவட்டம் மற்றும் தெற்கில் போசளர்களால் கைப்பற்றப்பட்ட தமிழ் பிரதேசங்கள் அடங்கிய மீதமுள்ள பகுதியைப் பெற்று, திருவரங்கத்திற்கு அருகிலுள்ள தெற்கு கண்ணனூர் குப்பத்தில் இருந்து ஆட்சி செய்தார்.[1][2][3][4][5][6]சோழப் பேரரசு வீழ்ச்சியுற்று பாண்டிய பேரரசு எழுச்சியுற்றது. இது இராமநாதனுக்கு ஆபத்தானது. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் சோழர், போசாளர் ஆட்சிப்பகுதிகளை வென்றான். இவ்வாறு தமிழகப் பகுதிகளை இழந்ததால், தன் தமையனான மூன்றாம் நரசிம்மனோடு கலகம் செய்து அவனிடமிருந்து பெங்களூர், கோலார், தும்கூர் ஆகிய பகுதிகளைப் பெற்றான்.[7]
வரலாறு
இராமநாதனும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் மூன்றாம் நரசிம்மரும் சமண மதத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்தனர். இவருக்கும் அரசனுக்கும் இடையே அடிக்கடி மோதல்களும் பகைகளும் ஏற்பட்டன. இராமநாதனும் மன்னே-நாடு (மன்னே அல்லது மன்யபுரம், 8 ஆம் நூற்றாண்டில் டோப்பாஸ்பேட்டைக்கு அருகிலிருந்த கங்கர்களின் தலைநகர்) கோலார், பெங்களூர் மற்றும் தும்கூர் மாவட்டங்களின் கிழக்குப் பகுதியையும் தனது பங்கின் கீழ் பெற்றார். தமிழ் மாவட்டங்களுடன், கர்நாடகப் பகுதியில் இராமநாதனின் எல்லையின் மேற்கு மற்றும் தெற்கு எல்லைகளை வரையறுத்த போது, இவரது கன்னடப் பகுதிகள் மேற்கு நோக்கி தேவராயனதுர்கா மலைகள் வரை விரிவடைந்தது. [8][9][10][11][12][13][14][15]
Dr. Suryanath U. Kamat, A Concise history of Karnataka from pre-historic times to the present, Jupiter books, MCC, Bangalore, 2001 (Reprinted 2002) OCLC: 7796041
K.A. Nilakanta Sastri, History of South India, From Prehistoric times to fall of Vijayanagar, 1955, OUP, New Delhi (Reprinted 2002), பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-19-560686-8