வீர தீர சூரன்
வீர தீர சூரன்:பகுதி 2 என்பது 2025ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி தமிழ்த் திரைப்படம் ஆகும். எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். கதைகாவலர் அருணகிரி முன்பகை காரணமாக ரவி, அவரது மகன் கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்து கொல்ல முயல்கிறார். ரவி தன்னுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான காளியிடம் உதவி கேட்கிறார். ஆனால், காளியோ குற்றச் செயல்களில் ஈடுபடுவதில் இருந்து விலகி, குடும்பத்துடன் மளிகைக் கடை நடத்தி வருகிறார். காவலர் அருணகிரி, ரவி, கண்ணன் ஆகிய மூவரிடம் இருந்து காளி எப்படித் தன் குடும்பத்தைக் காக்கிறார் என்பதே கதை. நடிகர்கள்
இசை
இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இது விக்ரமுடன் ஜி. வி பிரகாசு குமார் இணைந்து பணியாற்றும் நான்காவது படம் ஆகும்.
தயாரிப்புபொதுவாக, ஒரு திரைப்படத்தின் முதல் பாகம் வந்த பின்புதான் இரண்டாம் பாகம் வெளியாகும். ஆனால், தமிழில் முதல் முறையாக இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகிறது.[5] வரவேற்புஇந்து தமிழ் திசை நாளிதழ் இப்படத்திற்கு விமர்சனம் எழுதும் பொழுது, "அப்பட்டமான லாஜிக் மீறல்கள், சில குறைகள் இருந்தாலும் இந்தப் படத்தை எந்தவித சலிப்பும் ஏற்படாத வகையில் இறுதி வரை ரசிக்கமுடிகிறது" என்று எழுதினர்.[6] தினமணி நாளிதழ் இப்படத்திற்கு 3.5/5 மதிப்பெண்கள் அளித்து, "சினிமாவாக பார்க்கும்போது சில குறைகள் தெரிந்தாலும், கமெர்ஷியல் ஹீரோவுக்கான படமாக பார்க்கும்போது விருவிருப்புக்குக் குறையில்லாமல் வேகமாக நகர்ந்து முடியும் இந்தத் திரைப்படத்தைக் கண்டிப்பாக திரையில் கண்டு களிக்கலாம்" என்று எழுதினர்.[7] ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "இரண்டாம் பாதி திரைக்கதை தடுமாறினாலும் ‘மதுரை வீரனாக' எழுந்து நிற்கிறான் 'வீர தீர சூரன்!'" என்று எழுதி 44100 மதிப்பெண்களை வழங்கினர்.[8] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia