வெங்கடகிரி
வெங்கடகிரி ( Venkatagiri ) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். இது வெங்கடகிரி மண்டலத்தின் நகராட்சியும் வெங்கடகிரி மண்டலத் தலைமையகமும் ஆகும்.[3] வெங்கடகிரியின் பழைய பெயர் "காளி மில்லி". வரலாற்று சிறப்பு மிக்க இந்த நகரம் கைத்தறி பருத்தி புடவைகளுக்கு பிரபலமானது. இது இந்திய குடியரசில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு சிறிய இராச்சியத்தின் ஒரு பகுதியாகும். வரலாறுவெங்கடகிரி முதலில் 17ஆம் நூற்றாண்டில் வரை காளி மில்லி என அறியப்பட்டது. விஜயநகர பேரரசின் கீழ் கோபுரி பாளையக்காரர்களால் ஆளபட்டு வந்தது. விஜயநகரத்தின் அரவிடு வம்சத்தைச் சேர்ந்த இரண்டாம் பெத்த வெங்கடபதி ராயனின் உறவினரும் மதுராந்தகத்தின் நாயக்கனும் வேலுகோட்டி ராஜாவின் மருமகனுமான இரெச்செர்லா வெங்கடாத்ரி நாயுடுவால் தோற்கடிக்கப்பட்டனர். பின்னர், இந்த கிராமத்திற்கு வெங்கடகிரி என்று பெயர் மாற்றப்பட்டது.[4] 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வேலகோட்டி ஆட்சியாளர்கள் தங்கள் தலைநகரை வெங்கடகிரிக்கு மாற்றினர். அது இந்தியாவின் சுதந்திரம் வரை ஒரு ஜமீந்தாரியாக நீடித்தது.[5] இது கைவல்ய ஆறு மற்றும் கோதேரு ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கிடையில் அமைந்துள்ளது. கோயில்கள்![]() வெங்கடகிரியில் காசி விசுவநாதர் கோயில், இராமலிங்கேசுவர சுவாமி கோயில், பிரசன்னா வெங்கடேசுவர சுவாமி கோயில், பொலேரம்மா கோயில் மற்றும் பெருமல்ல சுவாமி கோயில் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன. நிலவியல்வெங்கடகிரி 13.9667 ° வடக்கிலும் 79.5833 ° கிழக்கிலும் அமைந்துள்ளது .[6] இது சராசரியாக 60 மீட்டர் (197 அடி) உயரத்தில் உள்ளது. புள்ளிவிவரங்கள்2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி,[7] வெங்கடகிரி வட்டத்தில் 200,000 என்ற அளவில் மக்கள் தொகை இருந்தது. இது 58 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. 6-1-2005இல் நகராட்சியாக மாறியது. நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 52,478 ஆகும். நகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 67% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். நகராட்சியின் மொத்த பரப்பளவு 23.50 கி.மீ. ஆகும். நிர்வாகம்வெங்கடகிரி நகராட்சி 2005 ஆம் ஆண்டில் தரம் III நகராட்சியாக உருவாக்கப்பட்டது . மேலும், 25.43 கி.மீ. 2 (9.82 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[8] பொருளாதாரம்நகரத்திலும் அதைச் சுற்றிலும் நெய்யப்பட்ட வெங்கடகிரி புடவை ஆந்திராவின் புவியியல் சார்ந்த குறியீடுகளில் ஒன்றாகும், மேலும் பொருட்களின் புவியியல் குறிகாட்டிகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 1999 இல் பதிவு செய்யப்பட்டது .[9] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia