வெனிசுவேலா தேசிய காற்பந்து அணி

வெனிசுவேலா
அடைபெயர்லா வினோடினோ (பூஞ்சைக் கொல்லி)
லாசு இல்லானெரோசு
(சமவெளியினர்)
கூட்டமைப்புவெனிசுவேலா கால்பந்துக் கூட்டமைப்பு (FVF)
கண்ட கூட்டமைப்புதென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு (தென் அமெரிக்கா)
தலைமைப் பயிற்சியாளர்ராபையில் டுடாமெல்
அணித் தலைவர்டோமசு ரின்கன்
Most capsயுவான் அராங்கோ (128)
அதிகபட்ச கோல் அடித்தவர்யுவான் அராங்கோ (23)
தன்னக விளையாட்டரங்கம்லூயி ரமோசு ஒலிம்பிக் விளையாட்டரங்கம்
பாலிடெபோர்டிவோ கேச்சமே
இசுடேடியோ புவப்லோ நுவோ
பீஃபா குறியீடுVEN
பீஃபா தரவரிசை74 (5 மே 2016)
அதிகபட்ச பிஃபா தரவரிசை29 (ஆகத்து 2014)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை129 (நவம்பர் 1998)
எலோ தரவரிசை42 (சூன் 2015)
அதிகபட்ச எலோ19 (சூலை 17, 2011)
குறைந்தபட்ச எலோ127 (1993, 1995, 1999)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 பனாமா 2–1 வெனிசுவேலா வெனிசுவேலா
(பனாமா நகரம், பனாமா; பெப்ரவரி 12, 1938)
பெரும் வெற்றி
வெனிசுவேலா வெனிசுவேலா 7–0 புவேர்ட்டோ ரிக்கோ 
(கரகஸ், வெனிசுவேலா; சனவரி 16, 1959)
பெரும் தோல்வி
 அர்கெந்தீனா 11–0 வெனிசுவேலா வெனிசுவேலா
(ரோசாரியோ, அர்கெந்தீனா; ஆகத்து 10, 1975)
கோபா அமெரிக்கா
பங்கேற்புகள்15 (முதற்தடவையாக 1967 இல்)
சிறந்த முடிவுநான்காமிடம், 2011

வெனிசுவேலா தேசிய காற்பந்து அணி (Venezuela national football team) பன்னாட்டு காற்பந்து போட்டிகளில் வெனிசுவேலா சார்பாக விளையாடும் அணியாகும். இது பெடரேசன் வெனெசொலானா டெ புட்பால் என்ற வெனிசுவேலா கால்பந்துக் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்கப்படுகின்றது. இவர்களது சீருடை பூஞ்சைக்கொல்லி வண்ணத்தில் உள்ளதால் இவர்களுக்கு லா வினோடினோ என்ற பெயருள்ளது.

மற்ற தென்னமெரிக்க நாடுகளைப் போலன்றி, கரீபியன் நாடுகளைப் போல, வெனிசுவேலாவில் அடிபந்தாட்டம் மிகவும் பரவலான ஆர்வத்தைப் பெற்றுள்ளது; இதனால் காற்பந்து விளையாட்டில் போதுமான திறன் வெளிப்படவில்லை. எனவே தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும் போட்டிகளில் வெனிசுவேலா எதிலும் வெற்றி பெறவில்லை. 2014ஆம் ஆண்டு வரை தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு உறுப்பினர்களில் உலகக்கோப்பைக்கு தகுதி பெறாத ஒரே அணி வெனிசுவேலா தேசிய காற்பந்து அணிதான். பெரும்பாலும் தகுதிச்சுற்றுக்களில் ஒரு வெற்றி கூட பதிக்காமல் பங்கேற்றுள்ளது; இது கடந்த இரு தகுதிச் சுற்று போட்டிகளில் சற்றே முன்னேற்றம் கண்டுள்ளது. 2011 வரை கோபா அமெரிக்காவில் மிகச்சிறந்த முயற்சியாக 1967இல் தங்கள் முதல் பங்கேற்பில் ஐந்தாவதாக வந்ததுதான். காற்பந்து முதன்மை விளையாட்டாக இல்லாத நாடுகளிலும் (சப்பான், ஆத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா) தற்போது உலகக்கோப்பையின் புகழ் பரவத்தொடங்கிய பிறகே தேசிய அணிக்கு கூடுதலான இரசிகர் குழாமும் ஊக்கவினைகளும் ஏற்பட்டுள்ளன.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya