வெய்ச்சி
வெய்ச்சி என்பது இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு. (Traditional: 圍棋; Simplified: 围棋), ஜப்பானிய மொழியில் இகோ (囲碁?) அல்லது கோ (碁?), கொரிய மொழியில் பாடுக் (hangul: 바둑). சீனாவில் தோன்றிய இவ்விளையாட்டு அங்கே 2500 ஆண்டுகளாக விளையாடப்பட்டு வருகிறது. இது கிழக்காசியாவிலேயே அதிகம் விளையாடப்படுவதாக இருப்பினும், அண்மைக் காலங்களில் உலகின் பிற பகுதிகளிலும் அறிமுகமாகி உள்ளது. இதன் விதிகள் எளிமையானவை எனினும், சிக்கலான உத்திப் பயன்பாடுகளுக்காக இது பெயர் பெற்றது. இவ்விளையாட்டுக்கான பலகை குறுக்கும் நெடுக்குமாக வரையப்பட்ட பல கோடுகளைக் கொண்டது. விளையாடுபவர்களில் ஒருவருக்கு வெள்ளை நிறக் காய்களும், மற்றவருக்குக் கருநிறக் காய்களும் ஒதுக்கப்பட்டிருக்கும். விளையாடுபவர்கள் மாறி மாறி ஒவ்வொரு காயாக வெறுமையாக இருக்கும் வெட்டுப் புள்ளிகளில் வைப்பர். பொதுவாகப் பலகைகள் 19 x 19 கோடுகளைக் கொண்டிருக்கும். விளையாடும் நேரத்தைக் குறைப்பதற்கும், பயிற்சி பெறுவதற்காகவும் சிறிய பலகைகளையும் பயன்படுத்துவது உண்டு. இவை 13 x 13, 9 x 9 போன்ற அளவில் கோடுகளைக் கொண்டிருப்பது உண்டு. விளையாட்டின் இலக்கு பலகையில், எதிராளியிலும் கூடுதலான பகுதிகளைக் கட்டுப்படுத்துவது ஆகும். |
Portal di Ensiklopedia Dunia