வெளிநாடு வாழ் இந்தியர் (Non-Resident Indian,NRI) எனப்படுவோர் இந்தியாவில் இல்லாது வேறொரு நாட்டில் புலம்பெயர்ந்த இந்திய குடியினர் ஆவர். இவர்கள் இந்தியக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள். இந்திய அரசு வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்து அந்நாட்டின் குடியுரிமை பெற்றவர்களையும் அத்தகைய பெற்றோர்களுக்கு பிறந்தவர்களையும் இந்திய வம்சாவளி நபர் (Person of Indian origin, PIO) என்று வகைப்படுத்துகிறது. இவர்களுக்கு கடவுச்சீட்டை ஒத்த பிஐஓ அட்டை வழங்கப்படுகிறது. நான்கு தலைமுறை முன்புவரை இந்தியாவில் குடியுரிமை பெற்றிருந்த முன்னோர்களைக் கொண்டிருந்த நபர்களும் அவர்களது வாழ்க்கைத்துணையும் இந்த அட்டை பெறத் தகுதி பெற்றவராவர்[2].இந்த அட்டை உள்ளவர்களுக்கு நுழைவிசைவு (விசா) மற்றும் பணியுரிமம் வழங்குவதில் மற்ற வெளிநாட்டினருக்கு உள்ளது போன்ற கட்டுப்பாடுகள் இருக்காது.
உலகெங்கும் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளி நபர்கள் மக்கள்தொகை 30 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் 2010ஆம் ஆண்டு அறிக்கைப்படி சீனாவிற்கு அடுத்ததாக உலகின் மிகப் பெரிய விரிந்து பரவிய புலம்பெயர் இனம் இந்தியர்களாகும். மேலும் ஆசியாவிலேயே "புலம் பெயர்வதை" கூடுதலாக,0.8%, கொண்டுள்ள நாடும் இந்தியா எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் கல்விக்காக செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 1999ஆம் ஆண்டில் 51,000ஆக இருந்தது 2007ஆம் ஆண்டு 153,000ஆக உயர்ந்துள்ளது.[3]
2003ஆம் ஆண்டு முதல் சனவரி 9 இந்திய அரசின் வெளிநாட்டு இந்தியர் நல அமைச்சகத்தின் சார்பில் இந்தியாவின் வளர்ச்சியில் இவர்களின் பங்கினை போற்றும் விதமாக வெளிநாடு வாழ் இந்தியர் நாளாக பிரவாசி பாரதிய திவசு எனக் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி இந்நாளில்தான் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா வந்திறங்கினார். இந்நாளை ஒட்டி மூன்று நாட்கள் புலம்பெயர் இந்தியர்களின் பிரச்சினைகள் ஆராயும் வண்ணம் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பிரவாசி பாரதிய சம்மானும் வழங்கப்படுகிறது.[4] As of January 2006,[5]
இந்திய வம்சாவளி நபர் திட்டத்தில் உள்ள குறைபாடுகளால் மெல்ல அது விலக்கிக்கொள்ளப்படுகிறது. இதற்கு மாற்றாக மட்டுப்படுத்தப்பட்ட இரட்டைக் குடியுரிமை வழங்கும் வண்ணம் இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் வெளிநாட்டு இந்தியக் குடியுரிமை (Overseas Citizenship of India (OCI)) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
↑"Pravasi Bharatiya Divas". Ministry of Overseas Indian Affairs . Archived from the original on 2010-11-26. Retrieved 2011-04-08. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
HAQUE, Shahzaman (2010b) "Enjeux des politiques linguistiques: pratiques et comportements langagiers mutilingues dans un pays monolingue". In: M.Iliescu, H. Siller-Runggaldier, P. Danler (éds.) Actes du XXVe Congrès International de Linguistique et de Philologie Romanes, Innsbruck 2007, Tome I. Berlin: Walter de Gruyter. 163-172. Available at http://www.reference-global.com/doi/abs/10.1515/9783110231922.1-163[தொடர்பிழந்த இணைப்பு]
HAQUE, Shahzaman (2010a) "Place des langues natives et d'accueil chez trois familles migrantes indiennes en Europe". In Andrea Rocci, Alexandre Duchêne, Aleksandra Gnach & Daniel Stotz (Eds.) Bulletin Suisse de Linguistique Appliquée, printemps 2010: Sociétés en mutations: les défis méthodologiques de la linguistique appliquée. Numéro Spécial, 2010/1, 225-236
HAQUE, Shahzaman (2008) 2008 "Différences de politiques linguisitiques entre nation et famille: Etude de cas de trois familles indiennes migrantes dans trois pays d'Europe". In: Suvremena Lingvistika Vol. 34 (65), 57-72. Available at http://hrcak.srce.hr/index.php?show=clanak&id_clanak_jezik=61116&lang=en
LAKHA, Salim & STEVENSON, Michael (2001) "Indian Identity in Multicultural Melbourne. Some preliminary observations. Journal of Intercultural Studies, Vol. 22, No. 3, 245-262.
MEARNS, D.T. (1995) "Shiva's other children. Religion and social identity amongst overseas Indians. New Delhi: Sage.
Overseas Indian Facilitation Centre A not-for-profit public private initiative between the Ministry of Overseas Indian Affairs (MOIA) and Confederation of Indian Industry (CII).