வெள்ளோடு ராசா கோயில்
வெள்ளோடு ராசா கோயில் என்பது தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், வெள்ளோடு என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு கிராமக் கோயிலாகும்.[1] வரலாறுஇக்கோயில் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[3] நாமக்கல்லில் உள்ள வாழவந்தி நாட்டு பிள்ளைக்கரையாற்றூரில் புதிதாகத் திருமணமான எழுபது வேட்டுவ கவுண்டர் வாலிபப் போராளிகள் , தாரமங்கலம் ஆவணிப்பேரூர் பூவாணிய நாட்டுப் பொத்தி பட்டக்காரருடன் நடந்த போரில், தங்கள் நண்பர்களும், கூட்டாளிகளுமான பூந்துறை நாட்டு கொங்கு வெள்ளாள நாட்டுக்கவுண்டர்களுகவும் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். அந்த நாட்டுக்கவுண்டரே வெள்ளோடு சாத்தந்தை குல ராசா சாமி ஆவார். கொமாரபாளையம் ஆலத்தூரில் எல்லைப் போர் நடந்தது . இவர்களின் மணப்பெண்கள் அருகில் உள்ள காப்பறா மலையில் அவர்களுடன் சதியில் உடன்கட்டையேறி இறந்தனர். மசரி என்ற முஸ்லிம் பெண்ணின் மகன்களான இரண்டு முஸ்லீம் சகோதரர்கள் துணையாகப் போரில் இறந்தனர். திங்களூர், சிங்காநல்லூர் மற்றும் திடுமல் ஆகிய இடங்களில் உள்ள அப்பிச்சிமார் மடங்கள் எனப்படும் இடங்களில் இந்நாயகர்கள் தெய்வமாக வணங்கப்படுகிறார்கள். அறுபது வேட்டுவர்களும் சைவ தெய்வங்களாக இருந்தாலும், முஸ்லிமான மசரி அம்மனுக்கு தனியாக மிருகபலி கொடுக்கப்படுகிறது. ராசா சாமி தன் பரிவாரங்களுடன் சமாதியான இடம்தான் அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள பழைய ராசா சுவாமி கோயில். கொங்கு வேளாளர் சாத்தந்தை குலத்தைச்சேர்ந்தவர்களாலும், காஞ்சிக்கோயில் நாட்டுக் கவுண்டர்களான மொளசி கன்ன குலத்தவர்களாலும் குலதெய்வமாக வணங்கப்படுகின்றனர். பழங்கால காவியமான அப்பிச்சிமார் காவியம், ராசா சாமியையும், அவர்களது உயிர் நண்பர்களான அப்பிச்சிமார் மற்றும் மசரி அம்மன் ஆகியோரைப் பற்றியது.[4] வரலாற்று சிறப்பு தீரப்பு700 ஆண்டுகள் பழமையான இக்கோயிலை சட்டவிரோதமாக இடிக்க அறநிலையத்துறையினர் முயன்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இக்கோயிலை உதாரணமாகக் கொண்டு, இக்கோயில் மட்டுமல்லாது நூறு ஆண்டுகளுக்கும் மேல் தொன்மையான எந்தக் கோயிலையும் இடிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதன்மூலம் தமிழகத்தில் 36,000 அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோயில்கள் உட்பட அனைத்து தொன்மையான கோயில்களையும் காக்க இக்கோயில் வழக்கு 2015ஆம் ஆண்டு வழிவகுத்தது.[3] சிலை கடத்தல் வழக்குபழைய கோவிலின் அருகிலேயே கண்ணுசாமி என்பவரது தனியார் பட்டா இடத்தில் புதிதாக தனியார் ராசா சாமி கோவில் கட்டப்பட்டு கடந்த 2016–ம் ஆண்டு அங்கு பேரூர் ஆதீனம் தலைமையில், அனைத்து சாதி பட்டியலின அருந்ததியர் உள்ளிட்ட அர்ச்சகர்களைக் கொண்டு சீர்திருத்த முறைப்படி குடமுழுக்கு நடைபெற்றது.இந்த நிலையில், 2018 மே மாதம் ஈரோட்டை சேர்ந்த பொன் தீபங்கர் என்பவர் பழமையான ராசா சாமி கோவிலில் இருந்த 14 கற்சிலைகளை காணவில்லை என திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். வெள்ளோடு புதிய ராசா கோவிலில் இருந்து 8 சிலைகள் அகற்றி கும்பகோணம் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு சரிபார்க்கப்ப்ட்டபின் மீண்டும் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு சீலிட்ட அறையில் அவை வைக்கப்பட்டன.[5] தற்போது 2022ஆம் ஆண்டில் மீட்கப்பட்ட சிலைகளை பிரதிட்டை செய்து கும்பாபிசேகம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி, தொல்லியல் துறை மேற்பார்வையில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.[6] கோயில் அமைப்புஇக்கோயிலில் ராஜா சுவாமி மற்றும் மசரியம்மான் சன்னதிகள் தனித்தனியே உள்ளன. மசரி அம்மனுக்கான வடக்கு பலிபூஜை வாசல் 1950 மிருகபலித் தடைச்சட்ட காலத்தில் அடைக்கப்பட்டது. 2004இல் அச்சட்டம் திரும்பப்பெறப்பட்டாலும், அவ்வாசல் அடைக்கப்பட்டே உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத குலக்கோயில் (scheme) திட்ட அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[7] பூசைகள்இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடு, கோழிகள் வெளியிலிருந்தே மசரி அம்மனுக்குப் பலி இடப்படுகின்றன. 1950 மிருகபலித்தடைச்சட்டம் இடப்பட்டபோது, மசரி அம்மனின் வடக்கு பலி வாசல் அடைக்கப்பட்டது. 2004இல் அச்சட்டம் திரும்பப்பெறப்பட்டபோதும், வாசல் திறக்கப்படவில்லை. ஆடி மாதம் அமாவாசை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு திருவிழாவாக நடைபெறுகிறது. மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia