வெ. அரங்கராசன்

வெ. அரங்கராசன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டப்பேரவை
பதவியில்
1980–1984
முன்னையவர்ஆர். பெரியசாமி
பின்னவர்ஆர். சரோசா
தொகுதிஉப்பிலியாபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 மே 1941 (1941-05-21) (அகவை 84)
சொரத்தூர், உப்பிலியாபுரம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅதிமுக
பிள்ளைகள்2
வாழிடம்சொரத்தூர், துறையூர் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்
தொழில்விவசாயம்

வெ. அரங்கராசன் (V. Rangarajan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் உப்பிலியாபுரம் சொரத்தூரில் 1941ஆம் ஆண்டு மே 21ஆம் நாள் பிறந்தார். அரங்கராசன் கீராம்பூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினை முடித்துள்ளார். இவர் விவசாயி ஆவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அரங்கராசன், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 1980ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் உப்பிலியாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 2266 வாக்குகளை தனக்கு அடுத்தப்படியாக வந்த இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளரை விடக் கூடுதலாகப் பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இவர் இப்பதவியினை 1984ஆம் ஆண்டு வரை வகித்துள்ளார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1980 உப்பிலியாபுரம் அதிமுக 43,263 48.80

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 18-19.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya