வெ. இராமையங்கார்
வெம்பாக்கம் இராமையங்கார் (Vembaukum Ramiengar) (1826 - 10 மே 1887) இவர் ஓர் இந்திய அரசு ஊழியரும் மற்றும் நிர்வாகியுமாவார். இவர் 1880 முதல் 1887 வரை திருவிதாங்கூர் திவானாக பணியாற்றினார்.[1] இராமையாங்கார் 1826 இல் அப்போதைய காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிலுள்ள வெம்பாக்கம் என்ற ஊரில் பிறந்தார். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கல்வியைப் பெற்றார். கல்வியை முடிந்ததும், மராட்டிய கச்சேரியில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய இவர் படிப்படியாக பதவியில் உயர்ந்தார். இறுதியில் இவர் 1861 இல் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்னர் இணை ஆட்சியராக பதவி உயர்வு பெற்றார். 1867 ஆம் ஆண்டில், மெட்ராஸ் சட்டமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட இராமையங்கார் 1867 முதல் 1879 வரை பணியாற்றினார். 1880 ஆம் ஆண்டில், திருவிதாங்கூரின் திவானாக நியமிக்கப்பட்டு 1887 வரை பணியாற்றினார். இராமையங்கார் 1887இல் சென்னை திரும்பி 1887 மே 10 இல் இறந்தார். சென்னை மாகாணத்தின் அரசு ஊழியராகவும் பின்னர் திருவிதாங்கூரின் திவானாகவும் தனது நிர்வாகத் திறமைக்காக இராமையங்கார் நினைவு கூரப்படுகிறார். இவரது முறையான வழிகளால் இவர் பாராட்டப்பட்டார். அதே சமயம், திருவிதாங்கூரில் அரசாங்க நியமனங்களில் தமிழ் பிராமணர்களுக்கு ஆதரவாக இருந்ததாக இராமையங்கார் விமர்சிக்கப்பட்டார். ஆரம்ப கால வாழ்க்கைஇராமையங்கார் சென்னை மாகாணத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்து செங்கல்பட்டிலுள்ள வெம்பாக்கம் என்ற ஊரில் ஒரு பாரம்பரிய வைணவ பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பிரிட்டிசு கிழக்கிந்திய நிறுவனத்தில் எழுத்தராக பணியாற்றினார்.[2] 1841 ஏப்ரலில் அரசு உயர்நிலைப் பள்ளி நிறுவப்பட்டபோது சேர்ந்த ஆறு மாணவர்களில் இவரும் ஒருவர். தனது பள்ளிப்படிப்பின் போது, இராமையங்கார் இயற்பியல், வானியல் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். மேலும் பச்சையப்பா அறக்கட்டளை மூலம் உதவித்தொகையையும் பெற்றார். ஆரம்ப கால வாழ்க்கைதனது கல்வியின் முடிவில், இராமையங்கார் மராட்டிய கச்சேரியில் மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். 1850 செப்டம்பரில், நெல்லூரின் தலைமை முன்சியாக நியமிக்கப்பட்டார். 1854 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொதுப்பணித் துறையின் துணை பதிவாளராக நியமிக்கப்பட்டார். 1855 முதல் 1857 வரை நெல்லூரின் தலைமை சிரஸ்தாராகப் பணியாற்றினார். 1857 மார்ச்சில் இவர் தஞ்சையின் தலைமை சிரஸ்தாராக நியமிக்கப்பட்டு 1857 முதல் 1859 வரை உதவி இமாம் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். உதவி இமாம் ஆணையளாராக, காவிரி நதிப் படுகையின் ஒலங்கு பகுதிகளின் வருவாய் தீர்வுக்கு இவர் முக்கிய பங்கு வகித்தார் . 1860 சூனில், சென்னை அரசாங்கத்திடமிருந்து வெள்ள நிவாரண நிதியாக கடன் வாங்கிய மிராசுதார்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கமற்றும் சிறப்பாகச் செய்து முடித்தார். தஞ்சை மாவட்டத்தில் நல்லாட்டடி கிராமத்தின் வருவாய் கிராமம் இவரிடம் இப்பணிக்காக ஒப்படைக்கப்பட்டது. இராமையங்கார் 1861 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாமக்கல்லின் துணை ஆட்சியராக நியமிக்கப்படார். மே 1861 இல் முதல் தர இணை ஆட்சியராக பதவி உயர்வு பெற்றார். இவர் நாமக்கல்லில் 1861 மே முதல் 1864 இறுதி வரை பணியாற்றினார். அப்போது காகித நாணய உதவி ஆணையராக நியமிக்கப்பட்டு ஒரு வருடம் பணியாற்றினார். மேலும் 1866 இல் சென்னை மாகாணத்தின் தலைமை செயலாளரின் முதல் உதவியாளராக நியமிக்கப்பட்டார். 1867 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மாதாந்திர ரூ. 1000 ஊதியத்தில் முத்திரைத்தள் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு, நேப்பியர் பிரபு இவரை சென்னை சட்டமன்றத்திற்குப் பரிந்துரைத்தார். சென்னை சட்டமன்றம்இராமையங்கார் 1867 முதல் 1879 வரை சட்டசபையில் அதிகாரப்பூர்வ உறுப்பினராக பணியாற்றிய முதல் இந்தியர் ஆவார்.[3] 1871ஆம் ஆண்டில், சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஆளுநர் குழுவின் கூடுதல் உறுப்பினராக இருந்த இராமையங்கார், 1863 ஆம் ஆண்டின் மதச் சொத்துச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குவதற்கான ஒரு சட்டமுன்வடிவை முன்மொழிந்தார். ஆனால் இது "தீவிரமாக முழுமையடையாமல் அதன் பொருளை அடையத் தவறிவிட்டது " [4][5][6][7] இந்த காலக்கட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நகராட்சி மற்றும் உள்ளூர் நிதி வரிவிதிப்புச் சட்டங்கள் மீதும் இவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தினார். இராமையங்கார் சென்னை நகரின் நகராட்சி ஆணையராக சுமார் எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். அப்போதைய சென்னையின் ஆளுநர் சர் வில்லியம் ராபின்சன் இவருக்கு செயல் தலைவர் பதவியை வழங்கினார். ஆனால் இவர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். 1875 ஆம் ஆண்டில் காவல்துறை இவர் 1877 சனவரி 1 ஆம் தேதி தில்லி தர்பாரில் பங்கேற்றார். 1873 ஆம் ஆண்டில், நாடாளுமன்ற நிதிக் குழுவின் முன் சாட்சியங்களை வழங்க இங்கிலாந்து செல்ல இராமையங்கார் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இவர் மறுத்துவிட்டார். ஜான் புரூஸ் நார்டனின் நிகழ்வில் இராமையங்காரும் நியமிக்கப்பட்டார். மேலும் பச்சையப்பா தொண்டு நிறுவனங்களின் அறங்காவலர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். இராமையங்கார் அறங்காவலராக இருந்த காலத்தில்தான் பச்சையப்பா இரண்டாம் தரக் கல்லூரியாக உயர்த்தப்பட்டது. திருவிதாங்கூரின் திவான்சென்னையின் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 1880ஆம் ஆண்டில் மகாராஜா விசாகம் திருநாள் அவர்களால் திருவிதாங்கூரின் திவானாக இராமையங்கார் நியமிக்கப்பட்டார்.[8] அங்கு ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். இராமையங்கார் தனது ஆட்சிக் காலத்தில் திருவிதாங்கூரில் இந்திய தண்டனைச் சட்டத்தை அறிமுகப்படுத்தி, மாநிலத்தின் காவல் படையை மீண்டும் ஒழுங்கமைத்தார். உயர்நீதிமன்றத்தின் பணிச்சுமையை குறைப்பதற்காக அவர் மாவட்ட நீதிமன்றங்களின் அதிகாரத்தையும் அதிகார வரம்பையும் அதிகரித்தார். ஒரே நேரத்தில் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் அதே வேளையில் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் திருவிதாங்கூரில் வருவாய் முறையை மறுசீரமைத்தார். இராமைங்காரின் மிக முக்கியமான பணி திருவிதாங்கூரின் வருவாய் கணக்கெடுப்பும் தீர்வும் என்று நம்பப்படுகிறது. இராமையங்கார் சிறைகளில் உள்ளார்ந்த உழைப்பை அறிமுகப்படுத்தினார். மக்களுக்கு ஒரு சுமையாக இருந்த பல வரிகளை நீக்கினார். இவர் உள்நாட்டு சர்க்கரை தொழில்கள், காகிதம், பருத்தி ஆலைகளை ஊக்குவித்தார். மாநிலத்தில் முத்திரைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். திருவிதாங்கூரின் நீர்ப்பாசன பணிகளை மேம்படுத்தவும் இராமையங்கார் நடவடிக்கை எடுத்தார். இராமையங்காரின் ஓய்வுக்கு முன்னதாக, மகாராஜா தனது உரையில் இவரின் பங்களிப்புகளை அங்கீகரித்தார்: "உண்மையில், கடந்த ஆறு ஆண்டுகளில், இவர் தேசிய செழிப்புக்கு உத்வேகத்தை அளித்தார். அதன் முழு சக்தியும் உணரப்பட உள்ளது". பிற்கால வாழ்க்கையும் மரணமும்1887 ஆம் ஆண்டில், இராமையங்கார் திவான் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்னை திரும்பினார். பின்னர் திடீரென நோய்வாய்ப்பட்டு 1887 மே 10 அன்று இறந்தார். மரபுதிருவிதாங்கூரில் கல்வி சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் சென்றதற்காகவும், மாநிலத்தில் கல்வி, நீதி முறையை சீரமைத்ததற்காகவும் இராமையங்கார் நினைவுகூரப்படுகிறார். திருவிதாங்கூரின் வருவாய் தீர்வுக்கு இவர் பெருமளவில் வரவு வைக்கப்படுகிறார். சட்டமன்றக் குழுவின் உறுப்பினராக இருந்த காலத்தில் சென்னை மாகாணத்தில் ஏராளமான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. இராமையங்காருக்கு வாசிப்பதில் விருப்பம் இருந்தது. இவர் அடிக்கடி இங்கிலாந்திலிருந்து புத்தகங்களை இறக்குமதி செய்தார். இவரது இறப்பிற்குப் பின் பச்சையப்பா கல்லூரி நூலகத்திற்கு இவரது மனைவி நன்கொடையாக வழங்குமளவிற்கு ஒரு பெரிய தொகுப்பை சேகரித்து வைத்திருந்தார். இராமையங்கார் சென்னை காஸ்மோபாலிட்டன் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். அதில் இவர் முதல் செயலாளராக பணியாற்றினார். பிரபல பிரிட்டிசு தொழிலதிபரும், நிர்வாகியும். சென்னையின் முன்னாள் பொறுப்பு ஆளுநருமான சர் அலெக்சாண்டர் அற்புத்நாத் இராமையங்காரின் நெருங்கிய நண்பராக இருந்தார். மேலும் இவரைப் பற்றி அதிகம் பேசினார். இவர் எப்போதும் ஒருமைப்பாட்டிலும் தீவிரக் கொள்கைகளிலும் நம்பியிருப்பதாக ஒரு முறை கூட கூறினார்.[9] விமர்சனம்இராமையங்கார் தனது தாராளவாத அரசியல் கருத்துக்களுக்கும் விசுவாச போக்குகளுக்கும் அடிக்கடி விமர்சிக்கப்பட்டார். திருவிதாங்கூரின் திவானாக இருந்த காலத்தில், பரமேசுவரன் பிள்ளை என்ற பெயரில் பல கட்டுரைகளை வெளியிட்டார். அதில் மலையாள மக்களுக்கு பதிலாக நிர்வாகத்தில் மலையாளரல்லாத பிராமணர்களுக்கு ஆதரவளிக்கும் கொள்கையின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தினார்.[10] அரசியல் சார்புகள்இராமையங்கார் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசியாக இருந்தார். சாட்டர்ஜி, முகோபாத்யாயா ஆகியோர் "சென்னையில் தனது வீட்டை ஐரோப்பிய பாணியில் வைத்திருந்ததை, தனது குடும்பத்தின் பெண்களுக்கு ஆங்கிலம், ஐரோப்பிய இசையை கற்பித்ததை, ஐரோப்பிய மனிதர்களை தனது இல்லத்தில் விருந்துகளுக்கு அழைத்த முதல் இந்தியர் என்பதை" குறிப்பிட்டனர்.[11] மரியாதைமே 1871 இல், இராமையங்கார் இந்தியாவின் நட்சத்திரத்தின் தோழராக மாற்றப்பட்டார். குறிப்புகள்
மேற்குறிப்புகள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia