வெ. கோவிந்தன்வெ. கோவிந்தன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 மற்றும் 1996 தேர்தல்களில், திராவிட முன்னேற்ற கழக கட்சியின் வேட்பாளராக, பேரணாம்பட்டு தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொகுதியானது, ஆதிதிராவிடர் வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டது.[1] வாழ்க்கைவேலூர் மாவட்டம், பேரணாம்பட்டைச் சேர்ந்தவரான ஆசிரியர் வெ. கோவிந்தன் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர். ஒரு கட்டத்தில் ஆசிரியர் பணியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து பணியாற்றினார். 1989-91 மற்றும் 1996-2001 காலக்கட்டத்தில் பேரணாம்பட்டு தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற ஊறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திமுகவில் மாவட்ட துணைச் செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.[2] மறைவுவயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அக்டோபர் 23, 2021 அன்று மாரடைப்பால் காலமானார்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia