பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு (ஆங்கிலம்:Pernampattu) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் உள்ளது பேர்ணாம்பட்டு நகராட்சி. பேரணாம்பட்டு வட்டாட்சியும் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும். பேரணாம்பட்டு நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. அமைவிடம்இது ஆந்திரா - தமிழ்நாடு எல்லைக்கு அருகே அமைந்துள்ளது. இவ்வழியே தேசிய நெடுஞ்சாலை 234 அமைந்துள்ளது. மக்கள் வகைப்பாடுஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 51,271 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 25,285 ஆண்கள், 25,986 பெண்கள் ஆவார்கள். பேரணாம்பட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 79.59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85.35%, பெண்களின் கல்வியறிவு 74.03% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09 % விட கூடியதே. பேரணாம்பட்டு மக்கள் தொகையில் 13.39% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இவர்களில் இந்துக்கள் 36.44%, முஸ்லிம்கள் 61.56%, கிறித்தவர்கள் 1.72% ஆவார்கள். [4] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia