வேம்படீ சதாசிவபிரம்மம்
வேம்படீ சதாசிவபிரம்மம் ( Vempati Sadasivabrahmam ) சுருக்கமாக சதாசிவபிரம்மம் (பி: 1905 - டி: 1968) தெலுங்குத் திரைப்படத்துறையின் ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் கதை வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதியவராவார்.[1] வாழ்க்கை வரலாறுஇவர் சென்னை மாகாணத்தின் (தற்கால ஆந்திரப் பிரதேசம்) வடகிழக்குப் பகுதியிலுள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் துனி என்ற ஊரில் வேம்படீ பிரம்மசாத்திரி, வெங்கம்மா ஆகியோரின் மூன்றாவது மகனாகப் பிறந்தார். பஞ்ச காவியங்களைப் படித்த இவர் சமசுகிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் அஷ்டாவதானங்களையும் சதாவதானங்களையும் நிகழ்த்தினார். உரைநடை மற்றும் வசனத்தை எழுதி குழந்தைக் கவிஞராக அறியப்பட்டார். 1928 ஆம் ஆண்டில், தனது 23 வயதில், ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த ஜனகாம்மாவை மணந்தார். அப்போது அவளுக்கு எட்டு வயது. திருமணமான பிறகு, இவர் தனது மனைவியை துனியிலேயே விட்டுவிட்டு சுதந்திர போராட்டத்தில் குதித்தார். அல்லூரி சீதாராமராஜ் என்பவர் மேற்கொண்ட சதித்திட்டங்களில், குறிப்பாக ராம்பச்சோடவரம் போன்ற போராட்டங்களில் பங்கேற்றார். பின்னர் காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 1930ஆம் ஆண்டின் உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்ற இவர் சில மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில், தேசபக்தி கவிதைகளையும் பாடல்களையும் எழுத ஆரம்பித்தார். அன்றைய காங்கிரசின் போராட்டங்களில் பங்கேற்ற இவர், கதைச் செயல்பாட்டில் காவிய பிரசங்கங்களைப் பாடுவதன் மூலம் மக்களை ஊக்குவிப்பதில் தனது பங்கைக் கொண்டிருந்தார். இராசா சாண்டோ இயக்கத்தில் 1941ஆம் ஆண்டு வெளிவந்த "சுதாமணி" என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த வெற்றிகரமான படத்திற்கான கதை, வசனங்கள் மற்றும் பாடல் வரிகளை இவர் எழுதினார். இவர் சனவரி 1, 1968 அன்று சென்னையில் காலமானார். திரைப்படவியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia