வேலன்சியா காற்பந்தாட்டக் கழகம்
வேலன்சியா வென்ற கோப்பைகள் பின்வருமாறு:
வேலன்சியா கால்பந்துக் கழகம் தொடர்ச்சியாக இருமுறை யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு இறுதிப் போட்டிகளை எட்டியுள்ளனர். 2000-ஆம் ஆண்டின் இறுதிப் போட்டியில் சக எசுப்பானிய அணியான ரியல் மாட்ரிட்-டிடம் தோற்றனர். 2001-ஆம் ஆண்டில் செருமனி அணியான பேயர்ன் மியூனிச்-சிடம் பெனால்டி முறையில் தோற்றனர்; முழு-நேர ஆட்ட முடிவில் 1-1 என்ற இலக்குகள் கணக்கில் இருந்தனர். மொத்தமாக ஏழு ஐரோப்பிய கோப்பை இறுதிப் போட்டிகளை எட்டி, அவற்றுள் நான்கை வென்றுள்ளனர். ஒட்டுமொத்த லா லீகா வரலாற்றில் பெற்ற புள்ளிகள் பட்டியலில், இவர்கள் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்கடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கின்றனர். ஐரோப்பிய அளவிலும் அவ்விரு அணிகளுக்கு அடுத்தபடியாக அதிக வெற்றிகள் பெற்ற எசுப்பானிய அணியாக இருக்கின்றனர். இம்மூன்று அணிகள் மட்டுமே ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஐரோப்பிய கோப்பைகளை வென்ற எசுப்பானிய அணிகள்.[1] குறிப்புதவிகள்
|
Portal di Ensiklopedia Dunia