வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
இயக்கம்எழில்
தயாரிப்புவிஷ்ணு விஷால்
ரஜினி நட்ராஜ்
எழில்
கதைஎழில்
இசைசி. சத்யா
நடிப்புவிஷ்ணு விஷால்
நிக்கி கல்ரானி
சூரி
ரோபோ சங்கர்
ரவி மரியா
ஆடுகளம் நரேன்
ராஜேந்திரன்
ஒளிப்பதிவுசக்தி
படத்தொகுப்புஆனந்த லிங்ககுமார்
கலையகம்விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்
எழில்மாறன் புரொடக்சன்
விநியோகம்பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
வெளியீடு3 சூன் 2016
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் (Velainu Vandhutta Vellaikaaran) 2016 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில், எழில் இயக்கத்தில், சி. சத்யா இசையில், விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம், எழில் மற்றும் ராஜன் நட்ராஜின் எழில்மாறன் புரொடக்சன் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெளியான நகைச்சுவையான தமிழ் திரைப்படம்.[1]

கதைச்சுருக்கம்

முருகன் (விஷ்ணு விஷால்) சட்டமன்ற உறுப்பினர் ஜாக்கெட் ஜானகிராமனின் (ரோபோ சங்கர்) நண்பன். அவ்வூரில் உணவகம் நடத்திவருபவரின் மகள் அர்ச்சனா (நிக்கி கல்ராணி). காவல்துறையில் ஆய்வாளராக சேர வேண்டும் என்பது அர்ச்சனாவின் லட்சியம். தன் மகளுக்குக் காவல்துறையில் வேலை பெற்றுத்தர முருகனின் உதவியை நாடுகிறார் அர்ச்சனாவின் தந்தை. அவரிடம் 10 இலட்சம் பணத்தை லஞ்சமாகப் பெற்று ஜானகிராமனிடம் கொடுத்து அர்ச்சனாவிற்கு வேலைவாங்கித் தருவதாக உறுதியளிக்கிறான் முருகன். மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருக்கும் அமைச்சர் சண்முகசுந்தரத்தைக் காணச் செல்லும் அவரின் நம்பிக்கைக்குரிய ஜானகிராமனிடம் தன்னிடமுள்ள 500 கோடி பணத்தை வைத்துள்ள இடத்தைத் தெரிவித்துவிட்டு இறக்கிறார்.

மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் ஜானகிராமனிடம் அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள, அவனைத் துரத்திவருகிறான் பூதம் (ரவி மரியா). அப்போது விபத்தில் சிக்கும் ஜானகிராமனுக்குத் தலையில் அடிபட்டதில் அனைத்தையும் மறந்து, 10 வயது குழந்தை போல நடந்துகொள்கிறான். அர்ச்சனா தன் திறமையால் காவல் துணை ஆய்வாளராகத் தேர்வாகிறாள். தன் தந்தையிடம் வாங்கிய பணத்தை முருகனிடம் திருப்பிக் கேட்கிறாள். முருகன் அதை ஜானகிராமனிடம் கொடுத்துவிட்டதாகக் கூறுகிறான். இவை மட்டுமின்றி முருகனின் நண்பனான ஜானகிராமனுக்காக சக்கரை (சூரி) தனக்கு நிச்சயமான பெண்ணை விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்ததாக நடித்ததில், அவனுடைய திருமணம் நின்றுபோகிறது.

ஜானகிராமனுக்கு பழைய நினைவுகள் திரும்பியதா? 500 கோடி ரூபாய் பணம் என்னவானது? அர்ச்சனாவிற்கு அவளின் பணம் கிடைத்ததா? சக்கரையின் திருமணம் நடந்ததா? என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

இசை

படத்தின் இசையமைப்பாளர் சத்யா.[2] யுகபாரதி அனைத்துப் பாடல்களையும் எழுதி இசையமைத்திருந்தார். 

பாடல் வரிசை
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "ஆரவல்லி"  வைக்கம் விஜயலட்சுமி, மகாலிங்கம் 4:08
2. "குத்தீட்டி"  சத்ய பிரகாஷ் 4:13
3. "பப்பரமிட்டாய்"  ஸ்ரீராமச்சந்திர மைனம்படி 3:54
4. "ஐயோ பாவம்"  ஜெயமூர்த்தி 4:00
5. "குத்தீட்டி" (கரோகி)  4:13
6. "ஐயோ பாவம்" (கரோகி)  4:00
மொத்த நீளம்:
24:28

மறுஆக்கம்

இப்படம் தெலுங்கில் சில்லி பெல்லோஸ் என்று மறுஆக்கம் செய்யப்பட்டது.[3]

மேற்கோள்கள்

  1. "திரைப்படம்".
  2. "பாடல்கள்".
  3. "மறுஆக்கம்".

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya