வைரம் (திரைப்படம்)
வைரம் (Vairam) 1974 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த அதிரடி உளவுத் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கிய, டி. கே. பாலு எழுதிய,இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா ஆகியோர் நடித்திருந்தனர். எம். ஆர். ஆர். வாசு, எஸ். ஏ. அசோகன், ஆர். எஸ். மனோகர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1972 இல் வெளியான விக்டோரியா நெம்பர் 203 என்ற இந்தித் திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். இப்படம் 1974 மே 24 அன்று வெளியிடப்பட்டு வெற்றி பெற்றது.[1][2] பாடல்கள்இத்திரைப்படத்திற்கு டி. ஆர். பாப்பா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[3]
வரவேற்புகல்கி கந்தன் இப்படத்தை அசல் இந்தித் திரைப்படத்துடன் சாதகமற்ற முறையில் ஒப்பிட்டார்.[4] தாக்கம்அரசியலில் ஜெயலலிதாவின் எதிரிகள், இவரது பிம்பத்தை களங்கப்படுத்த இப்படத்திலிருந்து ஜெயலலிதாவின் குத்துப்பாட்டு நடனக் கலைஞராகக் காட்டும் ஒரு படத்தை வெளியிட்டனர்.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia