வைல்டு கார்டு
வைல்ட் கார்ட் (ஆங்கிலம்: Wild Card) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு க்ரைம் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வில்லியம் கோல்ட்மான் என்பவரால் எழுதப்பட்ட ஹீட் எனும் நாவலை தழுவி சீமோன் வெஸ்ட் என்பவர் இயக்கியுள்ளார்.[4] இந்த திரைப்படத்தில் ஜேசன் ஸ்டேதம், ஸ்டான்லி துச்சி, மிலோ வேண்டிமிக்லியா, மைக்கேல் அங்கரனோ, ஹோப் டேவிஸ், மேக்ஸ் கஸெல்லா, ஜேசன் அலெக்சாண்டர், அன்னே ஹெச்சி, கிறிஸ் பிரவுனிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தின் மூலம் ஜனவரி 30ஆம் திகதி வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் வைல்ட் (ஜேசன் ஸ்டேதம்) சூதாட்டத்திற்கு அடிமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வணிகரீதியாக தோல்வியடைந்தது. இந்த திரைப்படம் $30 மில்லியன் செலவில் எடுக்கப்பட்டது, ஆனால் இந்த திரைப்படத்தின் உள்நாட்டு வசூல் $3,200 ஆகும். [5] நடிகர்கள்
நடிகர்களின் பங்களிப்புபடத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் ஜேசன் ஸ்டேதம் தனது கதாப்பாத்திரத்தில் நன்றாக பொருந்தியிருக்கிறார். நடிகர்களின் தேர்வுஇந்த திரைப்படத்தில் ஜேசன் ஸ்டேதம், ஸ்டான்லி துச்சி, மிலோ வேண்டிமிக்லியா, மைக்கேல் அங்கரனோ, ஹோப் டேவிஸ், மேக்ஸ் கஸெல்லா, ஜேசன் அலெக்சாண்டர், அன்னே ஹெச்சி மற்றும் கிறிஸ் பிரவுனிங் நடித்துள்ளார்கள். நடிகர்களின் தேர்வு ஏப்ரல் 11, 2013ஆம் ஆண்டு அறிவுக்கப்பட்டது. [6] படபிடிப்புஇந்த திரைப்படத்தின் படபிடிப்பு 2013ஆம் ஆண்டு நியூ ஓர்லென்ஸ், லூசியானா போன்ற இடங்களில் நடைபெற்றது.[7] முக்கியமான படப்பிடிப்பு 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.[8] வெளியீடுஇந்தத் திரைப்படம் லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தின் மூலம் ஜனவரி 30, 2015ஆம் ஆண்டு வெளியானது. [9] வசூல்இந்த திரைப்படம் வணிகரீதியாக தோல்வியடைந்தது. இந்த திரைப்படம் $30 மில்லியன் செலவில் எடுக்கப்பட்டது, ஆனால் இந்த திரைப்படத்தின் உள்நாட்டு வசூல் $3,200 ஆகும். [10] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia