ஷிவானி நாராயணன்
ஷிவானி நாராயணன் என்பவர் தமிழ்நாட்டிலுள்ள விருதுநகர் மாவட்டம்சாத்தூரை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை மற்றும் மாடல் அழகி ஆவார்.[1][2][3] இவர் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர். இவர் பகல் நிலவு, கடைகுட்டி சிங்கம் (2019), இரட்டை ரோஜா[4][5] (2020) போன்ற தொடர்களில் நடித்துள்ளார். தொழில்ஷிவானி நாராயணன் 2015 ஆம் ஆண்டில் விளம்பரங்களை நடித்து மற்றும் வடிவழகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[6] 2016 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி (பகுதி 3) என்ற தொடரில் நடிகையாக அறிமுகமானார். அந்த தொடரில் 'காயத்ரி' என்ற வேடத்தில் நடித்தார். அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு[7] என்ற தொடரில் 'சினேகா' என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகர் முஹம்மட் அஸீம் என்பவர் நடித்துள்ளார். அதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஜோடி பன் அன்லிமிடெட்[8] என்ற நடன நிகழ்ச்சியில் முஹம்மட் அஸீம் உடன் ஜோடியாக போட்டியாளராக பங்கேற்றார். 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம்[9] என்ற தொடரில் நடித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த தொடரில் 17வது அத்தியாயத்துடன் வெளியேறினார். இவர் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை இரா அகர்வால்'[10] என்பவர் நடித்தார். 2020 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடரான இரட்டை ரோஜா என்ற தொடரில் 'அபி' மற்றும் 'அனு' என்ற இரட்டை கதாபாத்திரத்தில் 168 அத்தியாயங்கள் வரை நடித்தார். இவருக்கு பதிலாக தமிழ் திரைப்பட நடிகை சாந்தினி தமிழரசன்[11][12] என்பவர் நடித்துவருகிறார். அதை தொடர்ந்து அதே ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் என்ற நிகழ்ச்சியின் நான்காவது[13][14] பருவத்தில் போட்டியாளராக பங்கேற்றார். தொலைக்காட்சி
மேற்கோள்கள்
வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia