பகல் நிலவு என்பது விஜய் தொலைக்காட்சியில் மே 9ஆம் திகதி 2016ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி, சனவரி 21, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 5:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர் ஆகும்.
இந்த தொடர் ஆண்டாள் அழகர் என்ற தொடரின் 2ஆம் பாகம் ஆகும். இந்த தொடரை ரவி பிரியன் என்பவர் இயக்க முஹம்மட் அஸீம் மற்றும் ஷிவானி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள், இவர்களுடன் சேர்ந்து சிந்து ஷியாம், உதய் மகேஷ், ஷர்மிளா போன்ற பலர் நடித்துள்ளார்கள். [1][2][3][4][5][6]ஜூலை 18ஆம் திகதி முதல் இந்த தொடர் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி 9 மார்ச்சு 2019 அன்று 762 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
இந்த தொடர் 3வது மற்றும் 4வது விஜய் தொலைக்காட்சி விருதுகளில் சிறந்த அப்பா, சிறந்த குடுமபம், சிறந்த தொடர், சிறந்த நாயகன் மற்றும் நாயகி, சிறந்த வில்லி, சிறந்த தாய், சிறந்த ஜோடி போன்ற 21க்கும் மேலுள்ள பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டு 5 விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.