ஸ்கர்டு மாவட்டம்
![]() ![]() ஸ்கர்டு மாவட்டம் (Skardu District) (Urdu: ضلع سکردو), பாகிஸ்தான் நிர்வாகத்தில் இருக்கும் காஷ்மீரின் வடக்கில் உள்ள ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பிரதேசத்தின் 6 மாவட்டங்களில் ஒன்றாகும். ஸ்கர்டு மாவட்டத்தின் நிர்வாகத் நகரம் ஸ்கர்டு ஆகும். ஸ்கர்டு மாவட்டம் சிகார், ரோண்டு, குல்தாரி மற்றும் கார்மங்க் என 4 வருவாய் வட்டங்களைக் கொண்டது. அமைவிடம்இமயமலையின் காரகோரம் மலைத்தொடரில், உள்ள ஸ்கர்டு சமவெளியில், சிந்து ஆறு - சிகார் ஆறு கலக்குமிடத்தில், கடல்மட்டத்திலிருந்து 2,500 மீட்டர் உயரத்தில் ஸ்கர்டு மாவட்டம் உள்ளது. இதன் தெற்கில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் மாவட்டம் & பாரமுல்லா மாவட்டம் மற்றும் கிழக்கில் காஞ்சே மாவட்டமும், மேற்கில் அஸ்தோர் மாவட்டம், வடக்கில் ஜில்ஜில் மாவட்டம், வடகிழக்கில் சீனாவின் சிஞ்சியாங் மாநிலமும் எல்லைகளாக உள்ளது. வரலாறுஆகஸ்டு, 1947, இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது நடைபெற்ற 1947 இந்திய-பாகிஸ்தான் போர் போரில், பாகிஸ்தான் நாடு, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின், ஜில்ஜில்-பால்டிஸ்தான் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. காஷ்மீரத்திலிருந்து பிரித்து பாகிஸ்தான் தன்னுடன் இணைத்துக் கொண்ட இப்பகுதிகளுக்கு தன்னாட்சி வழங்கியுள்ளது. [1] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia