கார்கில் மாவட்டம்
![]() கார்கில் மாவட்டம் (Kargil district), இந்தியாவின் இமயமலையில் அமைந்த லடாக் ஒன்றியப் பகுதியில் அமைந்த இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைமையிடமாக கார்கில் நகரம் உள்ளது. ஸ்ரீநகர் - லே நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 1டி கார்கில் வழியாக செல்கிறது. இம்மாவட்டத்தின் நிர்வாகத்தை கார்கில் மலை மாவட்ட தன்னாட்சி மன்றம் மேற்கொள்கிறது. கார்கில் மாவட்டத்தின் வடக்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள பஸ்திஸ்தான்-ஜில்ஜிட் பகுதிகளும், கிழக்கில் லே மாவட்டமும், மேற்கில் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் கிஷ்த்துவார் மாவட்டமும், தெற்கில் இமாசல பிரதேச மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளது. மக்கள் வகைப்பாடு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கந்தர்பல் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,43,388 ஆக உள்ளது. அதில் ஆண்கள் ஆகவும், பெண்கள் ஆகவும் உள்ளனர். மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 10 ஆக உள்ளது. பாலினவிகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 775 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 74.49 விழுக்காடாக உள்ளது. ஆறு வயதிற்குட்பட்டவர்கள் ஆக உள்ளனர். மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 92% இசுலாமியர்களாக உள்ளனர். அதில் 78% இசுலாமியர்கள் ஷியா பிரிவை பின்பற்றுகின்றனர். மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் புத்த சமயத்தினர் திபெத்திய பௌத்த சமயப் பிரிவை கடைபிடிக்கின்றனர். மூன்று விழுக்காட்டினர் இந்து மற்றும் சீக்கிய சமயத்தை கடைப்பிடிக்கின்றனர். [2] மொழிகள்புரிக் மொழி 78% மக்களால் பேசப்படுகிறது. டார்ட் மொழியை 10% மக்களும், பால்டி மொழிகளை 3% மக்களும் பேசுகின்றனர். [3] நிர்வாகம்கார்கில் மாவட்டம் திராஸ், கார்கில், சார்கோல், சாகர்கிக்டான், குண்ட் மங்கல்பூர், சங்கூ, தாய்சுரூ, சன்ஸ்கார், லங்நுக் என ஒன்பது வட்டார வளர்ச்சி அலுவலகங்களை கொண்டுள்ளது.[4] ஊராட்சி ஒன்றியத்தில் பல கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளது. அரசியல்சன்ஸ்கார் மற்றும் கார்கில் என இரண்டு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.[5] கார்கில் மாவட்டம், லடாக் நாடளுமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும். தட்ப வெப்பம்இம்மாவட்டம் ஆண்டு முழுவதும் கடுங்குளிர் கொண்ட பகுதியாக உள்ளது. ஆண்டு சராசரி வெப்பம் 8.6°C செல்சியஸாக உள்ளது. திசம்பர், சனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வெப்பநிலை பூச்சியம் (-) 8.6°C பாகை அளவிற்கு காணப்படுகிறது. ஆண்டு சராசரி மழையளவு 318 சென்டி மீட்டராக உள்ளது. [6] இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia