ஸ்போர்ட்ஸ்டார்
ஸ்போர்ட்ஸ்டார் (Sportstar) என்பது தி இந்து குழுமத்தால் இந்தியாவில் வெளியிடப்படும் ஒரு இந்திய மாதமிருமுறை விளையாட்டு இதழ் ஆகும். இதன் தலைமையகம் சென்னையில் உள்ளது. [1] வரலாறுஸ்போர்ட்ஸ்டார் 1978 இல் நிறுவப்பட்டது. இந்த இதழ் உலகக்கோப்பை காற்பந்து , ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி, ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுகள் குறித்த செய்திகளைத் தாங்கிவருவதாகும். இது இந்தியாவில் பரவலாக பிரபலமாக உள்ள விளையாட்டான துடுப்பாட்டம் குறித்த செய்திகள் உட்பட இந்தியாவில் நடக்கும் விளையாட்டுகளைக் குறித்த உள்ளடக்கத்தையும் கொண்டது. கால்பந்து, டென்னிஸ் மற்றும் பார்முலா 1 கிராண்ட் பிரிக்ஸ் ஆகிய விளையாட்டுகள் குறித்தும் கூடுதலாக எழுதுகிறது. 28 சனவரி 2006 இதழிலிருந்து, இதழ் அதன் பெயரை தி ஸ்போர்ட்ஸ்டார் என்பதிலிருந்து ஸ்போர்ட்ஸ்டார் என்று மாற்றி, புத்தக வடிவத்திலிருந்து சிறுபக்கச் செய்தித்தாள் வடிவத்திற்கு மாறியது. 2012 இல் பத்திரிகை மறுவடிவமைப்பு செய்யப்பட்டது. [2] [முதன்மையற்ற ஆதாரம் தேவை] ஸ்போர்ட்ஸ்டாரின் புதிய இணைய அவதாரம் 26 அக்டோபர் 2015 அன்று சென்னை துடுப்பாட்ட சங்கத்தில் தொடங்கப்பட்டது. [3] ஸ்போர்ட்ஸ்டார் - லைவ் ஸ்போர்ட்ஸ் & நியூஸ் என்ற பெயரில் இதற்கு சொந்தமான கைபேசி செயலி உள்ளது. [4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia