ஒரு நாள் ஒரு கனவு
ஒரு நாள் ஒரு கனவு என்பது 2005ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் நாடகத் திரைப்படம். இப்படத்தை பசில் இயக்கியுள்ளார். இதில் ஸ்ரீகாந்த் மற்றும் சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஆனந்தகுட்டன் செய்தார்.[1] இப்படம் 2005 ஆகஸ்ட் 26 அன்று வெளியாகி சராசரி விமர்சனங்களைப் பெற்றது.[2] கதைகதாநாயகி சோனியா அகர்வால் பணத்தையே பெரிதாக எண்ணும் சகோதர்களுடன் பிறந்தவர். கதாநாயகன் ஸ்ரீகாந்த் பாசமே பெரிது என்று பாசமழை பொழியும் சகோதரிகளுடன் பிறந்தவர். இருவருக்கும் இடையியே தோன்றும் மோதல், சவால் மற்றும் காதல்தான் ஒரு நாள் ஒரு கனவு படத்தின் கதை. இசைதிரைப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் இளையராஜா இசையமைத்தார்.[3] "காற்றில் வரும் கீதமே" பாடல் மேசகல்யாணி இராகத்தில் அமைந்திருந்தது.[4] இப்பாடலுக்கு மெட்டமைத்து இளையராஜா வாலி அவர்களுக்கு வாசித்து காட்டிய பொழுது, வாலி அவர்கள் "ஸ்ரீ முகுந்தா கோசவா நான் உன் புகழ் பேசவா" என்றார். இளையராஜா அதற்கு பாட்டில் 'பேசவா' என்றயிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அதனால் வாலி தற்பொழுது உள்ள வரிகளுக்குப் பாட்டின் வரிகளை மாற்றினார்.[5] "கசிராகோ" பாடல் கீரவாணி இராகத்தில் அமைந்திருந்தது.[6]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia