ஹரிகர்
ஹரிஹரா (Harihara) அல்லது ஹரிஹர் என்றும் அழைக்கப்படும் [2] இது இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள தாவண்கரே மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது ஹரிஹரா வட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாகும். இந்த ஊர் ஹரிஹரேசுவரர் கோயிலுக்கு பிரபலமானது, இது "தெற்கு காசி" என்றும், "மத்திய கர்நாடகாவின் தொழில்துறை மையம்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்நகரம் பெங்களூருக்கு வடக்கே 275 கிலோமீட்டர் தொலைவில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஹரிஹார் மற்றும் தாவண்கரே (14 கி.மீ தொலைவு) "இரட்டை நகரங்கள்" என்று குறிப்பிடப்படுகின்றன. இது சாலை மற்றும் இரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை 4 ( பூனா - பெங்களூர் ) இல் அமைந்துள்ளது. இது ஆண்டு முழுவதும் மிகவும் இனிமையான காலநிலை கொண்டது. இந்த நகரத்தின் முக்கிய உயிர்நாடி துங்கபத்ரா ஆறாகும். இந்த நதி கடுமையான தொழில்மயமாக்கலின் விளைவாக சுரண்டப்பட்டு மாசுபடுத்தப்படுகிறது. ஹரிஹரா நகரத்தை இரானேபென்னூர் வட்டத்துடன் இணைக்கும் ஒரு பாலம் புகழ்பெற்ற இந்திய பொறியாளரான விசுவேசுவரய்யாவால் கட்டப்பட்டது. தொழில்இந்நகரம் ஒரு முக்கிய தொழில்துறை தளமாகவும் செயல்படுகிறது. முதலில் இங்கு கிர்லோஸ்கர் நிறுவனம் தனது தொழிலைத் தொடங்கியது. தற்போது ஆதித்யா பிர்லா குழுமத்தின் கிராஸிம் இண்டஸ்ட்ரிஸ், சின்தைட், சாமனூர் சர்க்கரை ஆலைகள், கார்கில் மற்றும் பல தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலைத் தொடங்கின. கிர்லோஸ்கர் பொறியியல் நிறுவனம் 2001 இல் மூடப்பட்டது. இதன் விளைவாக கிட்டத்தட்ட 15,000 பணியாட்கள் தங்கள் வேலைகளை இழந்தனர். ஈர்ப்புகள்![]() ஹரிஹர் கோயில்களுக்கு பிரபலமானது.
![]() நிலவியல்ஹரிஹரா 14.52 ° வடக்கிலும் 75.8 ° கிழக்கிலும் அமைந்துள்ளது.[4] இதன் சராசரி உயரம் 540 மீட்டர் (1771 அடி) ஆகும் . புள்ளிவிவரங்கள்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஹரிஹராவின் மக்கள் தொகை 85,000 ஆகும். ஆண்கள் மக்கள் தொகையில் 51%, பெண்கள் 49%. ஹரிஹராவில், 11% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள். கன்னடம் அதிகாரப்பூர்வ மற்றும் அதிகம் பேசப்படும் மொயாகும். அணுகல்சரியாக கர்நாடகாவின் நடுவில் அமைந்துள்ள ஹரிஹார் கர்நாடகாவின் தெற்கு மற்றும் வடக்கே நல்ல தொடர்பைக் கொண்டுள்ளது. விமான நிலையம்அருகிலுள்ள விமான நிலையம் ஹூப்ளி ஹரிஹராவிலிருந்து 131 கி.மீ. தூரத்தில் உள்ள. இங்கிருந்து பெங்களூர் மற்றும் மும்பையை அடையலாம். அருகிலுள்ள சர்வதேச விமான நிலையங்கள் முறையே மங்களூர் மற்றும் பெங்களூரில் 272 கி.மீ மற்றும் 275 கி.மீ தூரத்தில் உள்ளன. இங்கிருந்து இந்தியாவின் பெரும்பாலான முக்கியமான நகரங்களுக்கு விமானத்தில் செல்ல முடியும். ஹரிஹாரில் ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு சொந்தமான ஒரு தனியார் விமான நிலையமும் உள்ளது. இது பெரும்பாலும் அரசியல்வாதிகள் மற்றும் பிரபல நபர்களால் பயன்படுத்தப்படுகிறது. இரயில் பாதைஹரிஹரா வழக்கமான இரயில்கள் மூலம் புது தில்லி, மும்பை, பெங்களூர் மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ஹரிஹராவில் மத்திய இரு இரயில் நிலையங்கள் உள்ளன ஹரிஹரா மற்றும் அமராவதி காலனி சந்திப்பு . இந்த நிலையங்கள் ஹரிஹரா பெங்களூரு மற்றும் புனே மற்றும் கோட்டூர் வழியாக ஹோஸ்பேட் மற்றும் பெல்லாரி ஆகியவற்றுடன் இணைக்கின்றன. சாலைதேசிய நெடுஞ்சாலை 4 உடன் (கோல்டன் நாற்கரத் திட்டத்தின் ஒரு பகுதி): ஹரிஹாரை பிராந்தியத்தின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கும் ஒரு நல்ல சாலைகள் உள்ளன. இது ஹூப்ளியிலுருந்து (131 கி.மீ) 3 மணி நேர பயணமும், மங்களூர் (272 கி.மீ) மற்றும் பெங்களூரிலிருந்து (278 கி.மீ) 6 மணிநேர பயணமும் ஆகும். வடக்கு கர்நாடகாவிலிருந்து / தெற்கு கர்நாடகாவிலிருந்து / செல்லும் அனைத்து பேருந்துகளும் ஹரிஹார் வழியாக செல்கின்றன. இந்த நகரம் தாவணகெரே நகரிலிருந்து 14 கி.மீ தூரத்தில் உள்ளது. இது முன்பு சித்ரதுர்கா மாவட்டத்தின் (78 கி.மீ) ஒரு பகுதியாக இருந்தது. இந்த நகரம் வரலாற்று இடமான அம்பிக்கும், ஹோஸ்பேட்டின் துங்கபத்ரா அணைக்கும் அருகில் உள்ளது. வடக்கு கர்நாடகாவிலிருந்து தர்மஸ்தலா, சிமோகா, மைசூர் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் ஹரிஹரா வழியாக செல்கின்றன. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia