ஹவாய்
அவாயி அல்லது ஹவாய் (Hawaii) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். இது ஒரு தீவுக்கூட்டம். ஐக்கிய அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து 3700 கிலோமீட்டர் தூரத்தில் வட பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹொனலுலு. ஐக்கிய அமெரிக்காவில் 50 ஆவது மாநிலமாக 1959 இல் இணைந்தது. விண்வெளி தொலைநோக்கி அமைக்கும் திட்டம்இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் அமெரிக்காவில் 30 மீட்டர் விண்வெளி தொலைநோக்கி அமைக்கும் திட்டம் இங்கு தொடங்கப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாக அமையும். மொத்தம் சுமார் ரூ.9,000 கோடி செலவில் அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள மெளனா கியா என்ற இடத்தில் தொலைநோக்கி நிறுவப்படுகிறது. 2022 மார்ச் மாதம் இப்பணியை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 5 நாடுகளின் 100 விஞ்ஞானிகள், அதிகாரிகள் பணியாற்றி 4012 மீட்டர் உயரத்தில் அமைய உள்ள இந்த தொலைநோக்கி அமைப்பதற்கான செலவை 5 நாடுகளும் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சிக்காக ஆண்டுக்கு 30 இரவுகளுக்கு அந்தத் தொலைநோக்கியை இந்திய விஞ்ஞானிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் [2]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia