ஐக்கிய அமெரிக்காவில்ஆட்சி மொழியாக எதுவும் இல்லை; இருப்பினும், பெரும்பான்மை (~82%) மக்கள் ஆங்கிலம் தமது தாய்மொழியாகப் பேசுகின்றனர்.இங்கு பேசப்படும் மொழிவகை அமெரிக்க ஆங்கிலம் எனப்படுகிறது.96% மக்கள் ஆங்கிலத்தை நல்ல முறையில் அல்லது மிக நல்ல முறையில் பேசக்கூடியவர்கள்.[1] பலமுறை ஆங்கிலத்தை தேசியமொழியாக்க சட்டவரைவுகள் கொணரப்பட்டாலும்[2][3] அவை இன்னும் சட்டமாக்கப்படவில்லை.
ஸ்பானிஷ் நாட்டின் இரண்டாவது கூடுதலாகப் பேசப்படும் பொது மொழியாகும்;அது 12% மக்களால் பேசப்படுகிறது[4] ஐக்கிய அமெரிக்காவில் மெக்சிகோ,எசுப்பானியா, அர்ச்சென்டினா மற்றும் கொலம்பியாவிற்கு அடுத்து கூடுதலாகப் பேசும் எசுப்பானியர்கள் உள்ளனர். இவர்கள் அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் மிகப் பழங்காலத்திலிருந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் ஆங்கிலம் மிக வல்லமையுடன் பேசக்கூடியவர்கள்.[5]
2000 ஆண்டின் கணக்கெடுப்பின்படி, ஜெர்மன் மொழி பேசுவோர் ஐந்தாம் இடத்தில் உள்ளனர்.[6][7]இத்தாலி, போலீஷ், மற்றும் கிரேக்க மொழிகள் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இங்கு குடிபெயர்ந்த அந்நாட்டு வந்தேறிகளால் பரவலாகப் பேசப்படுகிறது.ஆனால் இளம் தலைமுறையினரிடையே இம்மொழிகள் பேசுவது குறைந்து வருகிறது. உருசிய மொழியும் வந்தேறி மக்களால் பேசப்படுகிறது.
டாகலோக் மொழியும் வியத்நாமிய மொழியும் ஒரு மில்லியனுக்கும் கூடுதலான மக்களால் பேசப்படுகிறது.இவர்கள் பெரும்பாலும் அண்மையில் வந்தவர்களே. தவிர,சீனம்,நிப்பானிய மொழி மற்றும் கொரிய மொழி ஆகியவையும் அலாஸ்கா,கலிபோர்னியா,ஹவாய்,இல்லினாய்ஸ், நியூ யார்க்,டெக்சாஸ் மற்றும் வாஷிங்டன் மாநிலங்களில் தேர்தல் பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன.[8]
இவற்றைத் தவிர, அமெரிக்கப் பழங்குடியினரின் மொழிகளும் சிறுபான்மையாக உள்ளது.ஹவாயில் மாநில அளவில் ஹவாய் மொழி ஆங்கிலத்துடன் அலுவல்முறையில் பயன்படுத்தப்படுகிறது. லூசியானாவில் பிரெஞ்சு மொழி 1974ஆம் ஆண்டு முதல் ஆங்கிலத்துடன் அலுவல்முறை மொழியாக உள்ளது.337 மொழிகள் பேசவும் எழுதவும் படும் வேளையில் 176 மொழிகள் உள்ளூர் மொழிகளாகும்.முன்பு பேசப்பட்ட 52 மொழிகள் தற்போது அழிந்து பட்டுள்ளன.[9]
மக்கள் கணக்கெடுப்பு 2000 தகவற்புள்ளிகள்
2000 ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது,
[10] ஐந்து வயதிற்கு மேற்பட்ட பேசுவோர் மொழிவாரியாக:
Campbell, Lyle. (1997). American Indian languages: The historical linguistics of Native America. New York: Oxford University Press.
Campbell, Lyle; & Mithun, Marianne (Eds.). (1979). The languages of native America: Historical and comparative assessment. Austin: University of Texas Press.
Mithun, Marianne. (1999). The languages of native North America. Cambridge: Cambridge University Press.
Zededa, Ofelia; Hill, Jane H. (1991). The condition of Native American Languages in the United States. In R. H. Robins & E. M. Uhlenbeck (Eds.), Endangered languages (pp. 135–155). Oxford: Berg.