ஹொஜாய் மாவட்டம்
ஹோஜாய் மாவட்டம் (Hojai District) அசாம் மாநிலத்தின் நவகோன் மாவட்டத்தின் மூன்று வருவாய் வட்டங்ளைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 15 ஆகஸ்டு 2015 அன்று நிறுவப்பட்டது.[1][2] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஹொஜாய் நகரம் ஆகும். வருவாய் வட்டங்கள்ஹோஜாய் மாவட்டம் ஹொஜாய், தோபோகா மற்றும் லங்கா எனும் மூன்று வருவாய் வட்டங்ளைக் கொண்டது. மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஹோஜாய் மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 9,31,218 ஆகும். மக்கள்தொகையில் இசுலாமியர்கள் 4,99,565 (53.65%) மற்றும் இந்துக்கள் 4,24,065 (45.53%) ஆகவுள்ளனர். 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் போது இலட்சக்கணக்கான வங்காளதேச முஸ்லீம்கள் சில்ஹெட் மாவட்டத்திலிருந்து இம்மாவட்டத்தில் புலம்பெயர்ந்தனர்.
அரசியல்ஹோஜாய் மாவட்டம் ஜமுனாமுக், ஹோஜாய், லும்டிங் என மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. நவகோங் மக்களவைத் தொகுதியில் இம்மாவட்டம் உள்ளது. மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia