1,3-இருமெத்தில்-2-இமிடசோலிடினோன்
1,3-இருமெத்தில்-2-இமிடசோலிடினோன் (1,3-Dimethyl-2-imidazolidinone, DMI) என்பது ஒரு வளைய யூரியா ஆகும். இது உயர் கொதிநிலை புரோட்டான் தரா கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது.[2] இது நிறமற்றது. உயர் முனைவுக் கரைப்பான். உயர் வெப்ப மற்றும் வேதி நிலைப்புத்தன்மை உடையது. டி.எம்.பி.யூ (DMPU) என்பது இதன் படிவொத்த அல்லது ஒருபடித்தான கரைப்பான் ஆகும். பாஸ்ஜீன் உடன் 1,2 டை மெதில் எத்திலின் டை அமீன் என்னும் சேர்மத்தை வினைப்படுத்துவதன் மூலம் 1,3-இரு மெதில்-2- இமிடசோலிடினோன் தயாரிக்க முடியும். கரைப்பான்1,3 இருமெத்தில்-2-இமிடசோலிடினோன் சிறந்த கனிமக் கரைப்பானகவும், கரிமக் கரைப்பானாகவும் செயல்படுகிறது. டி.எம்.ஐ. (DMI) மற்றும் டி.எம்.பி.யூ. (DMPU) ஆகிய இரண்டு கரைப்பான்களும், புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய எச்.எம்.பி.ஏ (HMPA)[3] கரைப்பானுக்கு மாற்று கரைப்பானாகவும், பதிலி கரைப்பானாகவும் பயன்படுத்தப்படுகின்றன. டி.எம்.ஐ. (D.M.I.) அழுக்கு நீக்கியாகவும், சாயப்பொருளாகவும் பயன்படுகிறது. மின்னனுப் பொருள்கள் தயாரித்தலிலும், பலபடிச் சேர்மம் உற்பத்தி செய்தலிலும் 1,3-இருமெதில்-2-இமிடசோலிடினோன் [DMI] பெரும் பங்கு வகிக்கிறது. இதன் நச்சுத்தன்மை தோலில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia