1-பியூட்டீன்
1-பியூட்டீன் (1-Butene) என்பது C4H8 அல்லது CH3CH2CH=CH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட கரிமச்சேர்மமாகும். நேரியல் ஆல்பா ஒலிபீனுக்கு உதாரணமான இச்சேர்மம் பியூட்டீனின் மாற்றியங்களில் ஒன்றாகும்[2]. எளிதில் தீப்பற்றக்கூடியதாகவும், எளிதில் ஒடுக்கமடையும் வாயுவாகவும் 1-பியூட்டீன் திகழ்கிறது. வினைகள்தன்னளவில் 1-பியூட்டீன் நிலைப்புத்தன்மை கொண்டிருக்கிறது. ஆனால் உடனடியாக பாலிபியூட்டீனாக பலபடியாகிறது. நேரியல் குறை-அடர்த்திபாலியேத்திலீன் போன்ற சிலவகையான பாலியெத்திலீன்களை தயாரிப்பதற்கு உதவும் இணை ஒருபடியாகப் பயன்படுவது 1-பியூட்டீனின் முக்கியமான பயனாகும். பாலிபுரோப்பைலீன் பிசின்கள், பியூட்டைலீன் ஆக்சைடு, பியூட்டனோன் போன்ற கரிமச் சேர்மங்கள் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகவும் இது பயன்படுகிறது[3] . பேரளவில் தயாரித்தல்சுத்திகரிக்கப்படாத C4 சேர்மங்களை பிரித்தெடுக்கும் முறையிலும், எத்திலீனை இருபடியாக்கம் செய்தும் 1-பியூட்டீன் பேரளவில் தயாரிக்கப்படுகிறது. முதல் தயாரிப்பு முறையில் 1-பியூட்டீன் மற்றும் 2-பியூட்டீன் சேர்மங்களின் கலவை கிடைக்கிறது. இரண்டாவது தயாரிப்பு முறையில் விளிம்பு நிலை ஆல்க்கீன் மட்டுமே கிடைக்கிறது[4]. இதனைக் காய்ச்சி வடித்து அதி தூய 1-பியூட்டீன் தயாரிக்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டில் 12 பில்லியன் கிலோகிராம் 1-பியூட்டீன் தயாரிக்கப்பட்டதாக ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது[5] இவற்றையும் காண்கமேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia