1992 ஒடிசா கள்ளச் சாராய சாவுகள்1992 ஒடிசா மதுபான மரணங்கள் (1992 Odisha liquor deaths) இந்தியாவின் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் 1992 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்தன. சட்டவிரோதமாக காய்ச்சப்பட்ட கள்ளச் சாராயம் குடித்து 200 எண்ணிகைக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் ; மேலும் 600 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தியாவில் நடந்த மிகப்பெரிய சோகங்களில் ஒன்றாகும்.. ஒடிசா மாநில அரசாங்கம் 1994 ஆம் ஆண்டில் மதுவிலக்கை விதித்தது; இருப்பினும், 1995 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த இந்திய தேசிய காங்கிரசு அரசாங்கம், வருமானத்தில் பெரும் இழப்பை ஏற்படுத்துவதாகக் கூறி தடையை நீக்கியது. 2000- ஆம் ஆண்டு இந்த வழக்கில் பெலு என்கிற சாராய மன்னன் சுரேந்திரநாத் தாசை காவல்துறையினர் கைது செய்தனர். [1] [2] [3] குற்றம் சாட்டப்பட்டவர் கீழ் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டார் மற்றும் மேல்முறையீட்டில், ஒடிசா உயர் நீதிமன்றம் 1992 கட்டாக்கில் சோகத்தின் பிரதான குற்றவாளியான பெலு என்ற சுரேந்திர தாசுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. [4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia