2-குளோரோபென்சாயிக் அமிலம்
2-குளோரோபென்சாயிக் அமிலம் (2-Chlorobenzoic acid) என்பது C7H5ClO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு எளிய கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் வேதியியல் கட்டுமானத் தொகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. அறியப்பட்டுள்ள மூன்று குளோரோபென்சாயிக் அமிலங்களில் இதுவும் ஒன்றாகும். 2-குளோரோபென்சாயிக் அமிலம் மிகவும் வலிமையானதோர் அமிலமாகும். இந்த வெள்ளை நிற திடப்பொருள் பல்வேறு மருந்துகள், உணவு சேர்பொருள்கள் மற்றும் சாயங்கள் தயாரிப்பதற்குப் முன்னோடியாகப் பயன்படுத்தப்படுகிறது.[4] மூச்சுக்குழாய் மற்றும் கண்களில் உறுத்தலை ஏற்படுத்தக்கூடிய சேர்மமாக 2-குளோரோபென்சோயிக் அமிலம் இருக்கிறது. தயாரிப்பு2-குளோரோதொலுயீனை ஆக்சிசனேற்றம் செய்து 2-குளோரோபென்சாயிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. ஆய்வக அளவிலான வினையில் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு ஆக்சிசனேற்றத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.[5] மாற்றாக இதை α,α,α-டிரைக்ளோரோ-2-தொலுயீனை நீராற்பகுப்பு செய்தும் தயாரிக்கலாம். சேண்டுமேயர் வினையைப் பின்பற்றி ஈரசோனியச் சேர்மத்தில் இருந்தும் இதைத் தயாரிக்க முடியும். வினைகள்2-குளோரோபென்சாயிக் அமிலத்தில் உள்ள குளோரைடு அம்மோனியாவால் உடனடியாக 2-அமினோபென்சாயிக் அமிலமாக மாற்றப்படுகிறது. இதேபோல், குளோரைடு டைபீனைல்பாசுபைடால் இடம்பெயர்ந்து 2-டைபீனைல்பாசுபினோபென்சாயிக் அமிலமாக மாறுகிறது. உயர்வெப்பநிலைகளில் கார்பாக்சிலேட்டு நீக்கம் நிகழ்கிறது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia