2-குளோரோயெத்தனால்
2-குளோரோயெத்தனால் (2-Chloroethanol) என்பது C2H5ClO என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கட்டமைப்பின் படி இதை குறிக்க HOCH2CH2Cl என்ற வாய்பாடும் பயன்படுத்தப்படுகிறது. எத்திலீன் குளோரோ ஐதரின் அல்லது கிளைக்கால் குளோரோ ஐதரின் என்ற பெயர்களாலும் 2-குளோரோயெத்தனால் அழைக்கப்படுகிறது. குளோரோ ஐதரின் எனப்படும் எளிமையான பீட்டா-ஐதரின் சேர்மத்திற்கு இச்சேர்மம் ஓர் எடுத்துக்காட்டாகும்.[4] நிறமற்றிருக்கும் இத் திரவமானது ஈதர் போன்ற இனிமையான வாசனையைக் கொண்டிருக்கும். தண்ணீருடன் கலக்கும். ஆல்க்கைல் குளோரைடு மற்றும் ஆல்ககால் வேதி வினைக்குழு ஆகிய இரண்டு வினைக்குழுக்களையும் பெற்றிருக்கும். இவ்விரண்டு குழுக்களின் பணியையும் இது நிறைவேற்றும்.[5] தயாரிப்புஎத்திலீனுடன் ஐப்போகுளோரசு அமிலம் எனப்படும் உபகுளோரசு அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்தி வினைபுரியச் செய்தால் 2-குளோரோயெத்தனால் உருவாகும்:[5] 2-குளோரோயெத்தனால் ஒரு காலத்தில் எத்திலீன் ஆக்சைடு தயாரிப்பதற்கு தேவையான முன்னோடிச் சேர்மமாக பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டது:
எத்திலீனின் நேரடியான ஆக்சிசனேற்ற வினை கொடுக்கும் பொருளாதாரப் பயனால் இந்தப் பயன்பாடு மாற்றப்பட்டது. மற்றபடி குளோரோயெத்தனால் இன்னும் மருந்துகள், உயிர்க்கொல்லிகள் மற்றும் நெகிழியாக்கிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.[5] இவற்றில் பல பயன்பாடுகள் 2-ஐதராக்சியெத்தில் குழுக்களை நிறுவுவதில் இதன் பயன்பாட்டை உள்ளடக்கியுள்ளன.[6] குளோரோயெத்தனாலுடன் அனிலின் வழிப்பெறுதிகளை ஆல்கைலேற்றம் செய்வதன் மூலம் பல சாயங்கள் தயாரிக்கப்படுகின்றன.[7] தயோயிருகிளைக்காலை பெருமளவில் தயாரிக்கவும் இச்சேர்மம் பயன்படுகிறது. செல்லுலோசு அசிடேட்டு, எத்தில் செல்லுலோசு, நெசவு அச்சு சாயங்கள், மெழுகுநீக்கல், ரோசின் சுத்திகரிப்பு, பைன் லிக்னின் பிரித்தெடுத்தல் மற்றும் இயந்திரங்களை சுத்தம் செய்தல் ஆகியவற்றுக்கான கரைப்பானாக 2-குளோரோயெத்தனால் பயன்படுகிறது. சுற்றுச்சூழல் அம்சங்கள்குளோரோயெத்தனால் என்பது 1,2-டைகுளோரோ எத்தேன் சிதைவில் காணப்படும் ஒரு வளர்சிதை மாற்ற பொருளாகும். ஆல்ககால் பின்னர் குளோரோ அசிட்டால்டிகைடு வழியாக குளோரோ அசிட்டேட்டிற்கு ஆக்சிசனேற்றப்படுகிறது. வினைல் குளோரைடு தயாரிப்பதற்கு உதவும் முன்னோடிச் சேர்மமாக ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான கிலோகிராம் அளவுகளில் 1,2-இருகுளோரோ ஈத்தேன் செயலாக்கப்பட்டதால் இந்த வளர்சிதை மாற்றப் பாதை முக்கியமானதாக உள்ளது.[8] பாதுகாப்பு அம்சங்கள்2-குளோரோயெத்தனால் எலிகளில் 89 மி.கி/கிலோ கிராம் என்ற அளவிலான உயிர் கொல்லும் அளவு கொண்ட நச்சுத்தன்மை கொண்ட சேர்மமாகும். பெரும்பாலான கரிமகுளோரின் சேர்மங்களைப் போலவே, குளோரோயெத்தனாலலும் ஐதரோகுளோரிக் அமிலம் மற்றும் பாசுச்சீனை எரிக்கும்போது வெளியிடுகிறது. 2-குளோரோயெத்தனாலின் தோல் மீதான் வெளிப்பாட்டு வரம்பைப் பொறுத்தவரை, தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் மில்லியனுக்கு 5 பகுதிகள் (16 மி.கி/மீ3) என்ற அனுமதிக்கப்பட்ட வெளிப்பாடு வரம்பை எட்டு மணிநேர நேர எடையுள்ள சராசரியாக நிர்ணயித்துள்ளது. அதே நேரத்தில் தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய நிறுவனம் மில்லியனுக்கு 1 பகுதி (3 மி.கி/மீ3) என்ற வெளிப்பாடு உச்சவரம்பு மிகவும் பாதுகாப்பான பரிந்துரைக்கப்பட்ட வெளிப்பாடு வரம்பு என்று பரிந்துரைத்துள்ளது.[9] அமெரிக்க அவசரகால திட்டமிடல் மற்றும் சமூகம் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 302 இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, இச்சேர்மம் அமெரிக்காவில் மிகவும் அபாயகரமான பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia