உபகுளோரசு அமிலம்
உபகுளோரசு அமிலம் (Hypochlorous acid) ஓர் உறுதியற்ற அமிலமாகும். இதன் வேதியியல் குறியீடு HOCl. குளோரின் நீரில் கரையும் போது இவ்வமிலம் தோன்றுகின்றது. இது உடனடியான மீழும் சேர்வையாக இருப்பதனால் இதனை தூய நிலையில் காணமுடியாது. உபகுளோரசு அமிலம் ஒரு ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள் கொண்டதாகவும் அதன் சோடியம் உப்பு (NaClO),அல்லது கல்சியம் உப்பு(Ca(CIO)2) தொற்று நீக்கியாகவும், வெளிற்றுமியல்பு கொண்டவையாகவும் பயன்படும். பயன்கள்சேதனத் தொகுப்புகளில் HOCl ஆல்க்கீன்களை குளோரோடைரீன் ஆக மாற்றும்.[2] உயிரியல் செயற்பாடுகளில் வினையூட்டப்பட்ட நடுவமைநாடிகளினால் தூண்டப்பட்ட உபகுளோரசு அமிலம் குளோரிட்டு பேரொட்சைட்டு அயன்களை ஆக்குவதால் அது பாக்டீரியாக்களை அழிக்கப் பயன்படும்.[3][4] உருவாக்கம், நிலைத்திருப்பு, தாக்கங்கள்நீருக்கு குளோரின் சேர்க்கப்படும் போது ஐதரோக்குளோரிக்கமிலம் , உபகுளோரசு அமிலம் ஆகிய இரண்டையும் அது தோற்றுவிக்கும்.[5]
உபகுளோரசு அமிலத்தின் கரைசல் நிலை உப்புகளை (எ.கா: சோடியம் உபகுளோரசு) சேர்க்கும் போது இத்தாக்கம் இடப்பக்கமாக நகர்ந்து குளோரின் வாயுவைத் தரும். ஆகவே நிலையான உபகுளோரசு வெளிற்றிகள் குளோரின் வாயுவை நீரில் கரைந்த சோடியமைதரொட்சைட்டில் சேர்ப்பதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. இவ் அமிலம் இருகுளோரொவொட்சைட்டை நீரில் கரைப்பதன் மூலமும் உருவாக்கலாம். மாறா வெப்ப அமுக்க நிலைமைகளில் ஐதரசன் ஒட்சி குளோரைட்டை (உபகுளோரசு அமிலம்) தயாரிப்பது தாக்கச் சமநிலை உடனடியாக மீள்வதன் காரணமாக சாத்தியமற்றது.:[6]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia