2-அயோடோபென்சாயிக் அமிலம்
![]() 2-அயோடோபென்சாயிக் அமிலம் (2-Iodobenzoic acid) என்பது C7H5IO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். ஆர்த்தோ-அயோடோபென்சாயிக் அமிலம் என்ற பெயராலும் இந்த சேர்மம் அழைக்கப்படுகிறது. இச்சேர்மம் அயோடோபென்சாயிக் அமிலத்தினுடைய மாற்றியமாகவும் கருதப்படுகிறது.[1] 2-அமினோபென்சாயிக் அமிலத்தை ஈரசோனியமாக்கல் வினை மூலம் தயாரிக்கலாம். 2-அயோடோபென்சாயிக் அமிலத்தின் இத்தயாரிப்பு முறை பொதுவாக பல்கலைக்கழகக் கரிம வேதியியல் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படுகிறது. 2-அயோடாக்சிபென்சாயிக் அமிலம் தயாரிப்பதும் டெசு-மார்ட்டின் பீரியடினேன் என்ற வினையாக்கி தயாரிப்பதற்கான முன்னோடியாக இருப்பதும் இதன் மிகவும் பொதுவான பயன்பாடுகளாகும். இவை இரண்டும் இலேசான ஆக்சிசனேற்றிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. தயாரிப்பு2-அயோடோபென்சாயிக் அமிலத்தை சாண்டுமேயர் வினை மூலம் தயாரிக்க முடியும். ஆந்தரானிலிக் அமிலத்தின் ஈரசோனியமாக்கல் வினையைத் தொடர்ந்து அயோடைடுடன் ஒரு வினை நிகழ்ந்தால் 2-அயோடோபென்சாயிக் அமிலம் உருவாகும். மேலும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia